இடுகைகள்

ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் துவக்கவிழா அழைப்பிதழ்!

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் துவக்கவிழா அழைப்பிதழ்! பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கவிதைகளை வாசிப்பவர்கள் மனதில் நிச்சயம் ஒரு புதுயுகக்கனவு உருவாகுமென்பதில் கடுகளவும் சந்தேகம் கிடையாது! எனினும் அப்பொதுவுடமைக் கவியின் ஒரு கவிதை மட்டும் என்னுள் அடிக்கடி சலனங்களை ஏற்படுத்தி வருவதென்னவோ உண்மை! தாம் வாழ்ந்த காலகட்டத்தில் தமிழினத்தில் நிலவிய வேதனையான சூழலை மனதில் கொண்டு; பாவேந்தர் புனைந்து வைத்த சோகமான கவிதை வா¢களே என் ஆழ்மனதில் பதிவாகி இன்றும் அவரது பாடல்வரிகள் ஏராளமான தாக்கங்களை உருவாக்கி வந்துள்ளதெனலாம். சொல்லப்போனால் பாவேந்தர் காலத்தைவிடப் பல மடங்கு சோதனையான  காலகட்டத்தில் இன்றுள்ள தமிழர்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனலாம்! எனினும் இத்தகு சோதனையான காலகட்டத்தையும் தமிழினம் வெற்றிகரமாகக் கடந்து ஒரு புதுயுகச் சமுதாயத்தை உருவாக்கிக் கொள்ளுமென்பதே எனது உறுதியான எண்ணங்களாகும்! அத்தகு உறுதியான எனது எண்ணங்களை விரிவாக விளக்குவதற்கு முன்னர் அடிக்கடி என்னுள் சலனங்களை ஏற்படுத்தும் பாவேந்தரின் கவிதை வரிகளை அப்படியே ஒருமுறை உங்கள் பார்வைக்கு வைக்க வேண்டியதும் இங்கு அவசியமாகிறது! கவி