கண்களிரண்டில் அருளிருக்கும்!


கண்களிரண்டில் அருளிருக்கும்!
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்!
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்!
அது உடன் பிறந்தோரையும் கருவருக்கும்!

பிரபல எழுத்தாளராகவும் விளங்கும் ஆன்மீகவாதி ஒருவரின் எங்கள் மாநகர வருகை பற்றி  ஒரு மாதத்திற்கு முன்னரே ஏராள விளம்பரங்களுடனும் பிரம்மாண்டமான கட்அவுட்களுடனும் அறிவிக்கப்பட்டிருந்ததால் அங்கு என்னதான் நடக்கிறதென காண ஒருமுறை நான் அங்கு செல்ல நேர்ந்தது! அங்கு சென்றவுடன் எமக்கு ஏதோ அரசியல்வாதியின் பொதுக்கூட்ட அரங்கிற்கு தவறி வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் எழுந்துவிட்டது!

அரசியல்வாதிகளின் மேடைகளையே தோற்கடிக்கும் வண்ணம் அதி பிரம்மாண்டமான கட் அவுட்களுடன் சினிமா பாணியில் ஏறக்குறைய ஒரு மாத காலமாக மாணவர்களின் விளையாட்டு திடலில் செட் அமைக்கப்பட்டு அவரது கார் மேடையின் அருகில் வந்து இறங்கியவுடன் மேடையேறி வலது மற்றும் இடது பக்கம் முழுவதும் நடக்க வசதியாக மிக நீண்ட சிவப்பு கம்பளம் போடப்பட்ட அதி பிரம்மாண்டமான மேடை!

மேடையை மேலும் அதி பிரம்மாண்டமாக காட்டுவதற்கு மேடையின் பக்கவாட்டுகளில் தொலை திரைகள்! மேடையை அமைத்து கொடுத்து அதில் அமர்ந்து அலங்கரித்தவர்கள்

ஏறக்குறைய அந்த நிகழ்ச்சிக்கு பத்து இலட்சத்திற்கும் மேல் செலவிட்டிருக்க வேண்டும்! இதற்கு நம் தொழிலதிபர்கள் செலவிட்ட தொகை முழுவதும் அவர்தம் உழைப்பில் வந்ததல்ல! அந்த தொகை முழுவதும் அவர்தம் தொழிலகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வியர்வையில் வந்தது என்பது ஏனோ நம் தொழிலதிபர்களுக்கு விளங்குவதில்லை!

அதனை தவிர அந்த ஆன்மீக சாமியாருக்கு செலவின்றியே ஏகப்பட்ட விளம்பரங்கள்! தனக்கு வரும் வருமானத்தில் ஒரு டிரஸ்ட் அமைத்து நற்சேவை புரியும் அவரின் நல்ல குணங்களையோ அவரது ஒழுக்கம் பற்றியோ விமர்சித்து குறை கூறுவதல்ல எமது நோக்கம்!

துறவு என்பதற்கு இலக்கணமாக விளங்குபவர்களைத்தான் யாம் துறவிகளாக ஏற்று மதிக்க முடியும்! அவர்களின் இருப்பிடம் இன்றைய வாழ்வியல் சூழல் கருதி அடக்கமாக எளிய மக்கள் கூட அவர்களை நெருங்குமிடமாக இருக்க வேண்டும்! அல்லது அவர்களே நேரடியாக மக்களை தம் உடல் உழைப்பால் அணுகி அவர்தம் துன்பங்களுக்கு வடிகாலாகி நன்மை போதிப்பவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களின் நற்போதனைகளை ஏற்க முடியும்!

இதை தவிர இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருக்குறளில் கூறப்பட்ட கருத்துகளை பல்வேறு வடிவங்களில் தத்தம் திறமைக்கேற்ப போதித்து அவற்றை புத்தகங்களாக வெளியிட்டு இன்றுள்ள ஊடகங்களின் வாயிலாக தமது வாழ்க்கை முறைகளைப் பண நிர்வாகத்தில் புகுத்தி;க்கொண்ட இவர்கள் மதம் சார்ந்த வணிக பிரிவில் வருபவர்கள்தாம்!

இத்தகு வழியில் பெரும் தொழிலதிபர்கள் வழங்கும் பணத்தை கொண்டு இவர்கள் செய்யும் தொண்டினை பாமரர்கள் வேண்டுமானால் வரவேற்கலாம்! ஆனால் படித்தவர்கள் நிச்சயம் வரவேற்கவே கூடாது! அவர்தம் செயல்களை எக்காலத்திலும் ஆதரிக்கவும் கூடாது!

என்ன செய்வது! மக்களிடம் முறையான வரிகளை பெற்று திறமையான ஆட்சி நிர்வாகம் செய்ய வேண்டிய அரசியல்வாதிகள் இது போன்ற சாமியார்கள் கூட்டம் தருகின்ற நிதிக்கு கையேந்துகின்ற நிலை தமிழகத்தில் உருவாகியிருப்பதையும்; துறவிகள் பண நிர்வாகம் செய்து அதில் அரசுகள் செய்ய வேண்டிய திட்டங்களை நிறைவேற்றி அதை மக்களுக்கு வழங்குகின்ற நிகழ்ச்சிகளில் நம் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு சிறப்பிப்பதுவும் பகுத்தறிவு பகலவன் தந்த தமிழக மண்ணிற்கு நிச்சயம் பெருமை சேர்ப்பதாக அமையாது!

தனது மகத்தான எண்ணங்களை தமக்கு ஆதரவாக்கிக்கொண்டு பதவி சுகம் அனுபவிக்கும் அரசியல் தலைவர்களை நிச்சயம் அந்த பகுத்தறிவு பகலவன் காண்கின்ற நிலை இன்றிருந்திருந்தால் நூறு முறை மனம் நொந்து இறந்திருப்பார்! ஆனால் அவரால் வளம் பெற்ற  இன்றைய அரசியல்வாதிகள் வாக்கு வங்கிக்கெனவே மேற்கண்ட பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து வருகின்றனர்!

மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு நம் தொழிலதிபர்கள் செலவிட்ட பத்து இலட்ச ரூபாய்களில் தங்கள் நிறுவனம் சார்ந்த பத்து தொழிலாளர் குடும்பங்கள் நிம்மதியாக குடும்பம் நடவாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!துவதற்கு தரமான வீடுகள்  கட்டி தந்திருந்தால் பத்து குடும்பங்களாவது சொந்த இல்லங்களில் வசிக்கும் வாய்ப்பு பெற்று மகிழ்ச்சியுற்றிருக்கும்!

அது போலவே இன்று வேலூர் அருகில் நானூறு கோடி செலவிட்டு ஆன்மீகவாதிகள் தொழிலதிபர்களிடம் பெற்ற பணத்தால் கட்டியுள்ள தங்க கோவிலுக்கு ஆன தொகையில் ஒரு தொழிற்சாலை கட்டியிருந்தால் ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டியிருக்கும்! அல்லது அந்த தொகையில் நாற்பதாயிரம் வீடுகள் கட்டி தந்து ஓட்டை குடிசைகளில் வாடி வதங்கும் ஏழைகளுக்கு நிரந்த வாழ்க்கை அமைத்து தந்திருக்கலாம்!

இது போன்ற சமூக சிந்தனைகளை நல்ல சிந்தனையாளர்கள் கைக்கொண்டு தங்களின் உழைப்பில் உருவான தொகையை தங்க கோவில் உண்டியல்களை நிரப்புவதை விட உண்டியற்ற ஏழைகளுக்கு உறைவிடமும் வேலை வாய்ப்பும் உருவாக்கி தந்தால் மேற்கண்ட பாடல்வரிகளை நம் தமிழ் அகராதியிலிருந்தே நீக்கிவிட முடியும்!

உழைத்து வாழ வேண்டும்!
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!

உடல் உழைக்க சொல்வோம்!
அதில் பிழைக்க சொல்வோம்!
பிறர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!