அறமே வெல்லும்!

இது தமிழக அரசின் அதிகார முத்திரையில் இடம் பெற்றுள்ள வாசகம். சத்யமேவ ஜெயதே இது மத்திய அரசின் அதிகார முத்திரையில் உள்ள வாசகம். 

மகாத்மாவால் வழங்கப்பட்ட இந்த வாசகத்தின் பொருள் என்னவென்பது இந்த வாசகம் தாங்கிய வாகனங்களில் பயணிக்கும் அரசு அலுவலர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் விளங்கவில்லையோ எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது.

காவல், வருவாய், வனத்துறை, வரித்துறை எனப் பல்வேறு தரப்பட்ட அரசு வாகனங்களில் பயணிக்கும் அரசு சார்ந்த அலுவலர்கள் அவற்றை ஆங்காங்கே நிறுத்திவிட்டு சோதனை மேற்கொள்ளும்போது அரசுக்குச் சாதகமாக நடந்து கொள்கின்றனரா என்பது அவரவர் மனச்சாட்சிக்கே விட்டுவிடலாம்.

இந்த வாசகம் தாங்கிய வாகனங்களில் பயணித்துத் தங்கள் துறை சார்ந்த சோதனைகளை மேற்க்கொள்ளும்போது இவர்களின் கரங்களில் இலஞ்சக் கரை படிவதையும் நாம் ஊடகங்கள் வாயிலாக அவ்வப்போது அறிந்து கொண்டுதான் உள்ளோம். 

வாய்மையே வெல்லும் என்ற வாசகம் பொறித்த வாகனங்களில் பயணித்துக் கொண்டு இந்த வாசகத்திற்கு எதிராக இவர்கள் செயல்படுவதை நினைந்தால் பாரதியின் 

நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாடல்வரிகள்தாம் நினைவில் வந்து தொலைக்கும்.

வாய்மை என்றால் என்னவென்றே அறியாத இவர்கள்தம் அறியாமையைப் போக்க வேண்டிய கட்டாயம் இனி வரும் அடுத்த தலைமுறைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு நிச்சயம் உண்டு.

அறமே வெல்லும் என்பதுதாம் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் தலையாய முழக்கமாக வரும் காலங்களில் திகழும்.

அந்த நிலை உருவாகும்போது இந்த வாசகங்கள் தாங்கிய வாகனங்களில் இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வாசகத்தினைத் தங்களின் உடையில் பொறித்தவாறு கம்பீரமான நேர்மையாளர்கள் பயணிக்கப்போவதை இந்தத் தமிழகம் ஒரு நாள் காணத்தான் போகிறது.

அறம் என்ற சொல்லே சரியானது என்ற புரிதலோடு

தலைப்பை மாற்றி உள்ளேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!