இடுகைகள்

ஜூன், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தரமற்ற கட்டுமானங்கள்!

சென்னையில் புதியதாகக் கட்டிக் கொண்டிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்து தரை மட்டமானதில் ஏராளமான உயிர்ச் சேதங்களும் பலர் படுகாயங்களுக்கும் ஆளான நிலை உருவாகியுள்ளது! பலியானவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்! படுகாயமுற்றவர்கள் விரைவில் நலம் பெற நாம் அனைவரும் பிரபஞ்சப் பேராற்றலை வேண்டுவோம்! தரமற்ற கட்டுமானங்களின் விளைவினை இப்பொழுதாவது மனிதாபிமானம் உள்ளவர்கள் அனைவரும் உணர வேண்டும்! ஒரு வேளை இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகள் குடியேறிய நிலையில் இடிந்திருந்தால் நினைக்கவே மனம் பதறும் அளவிற்குப் பல அப்பாவிக் குடும்பங்களின் உயிரிழப்பினை இந்த நாடு சந்தித்திருககும்;! வண்ணம் பூசிப் பளபளப்பாகக் காட்சியளிக்கும் இது போன்ற புதிய கட்டுமானக் குடியிருப்புகளை வாங்கி அங்கு குடியேறவே அச்சப்படும் நிலையினை இந்தக் கட்டிடம் உருவாக்கியுள்ளதை நாம் மனதில் கொண்டாக வேண்டும்! இனியாவது கட்டப்படும் கட்டிடங்களின் தரத்தை அவை கட்ட அனுமதி கொடுக்கும் அரசு அலுவலர்கள் உரிய தரத்துடன் அவை கட்டப்படுகின்றனவா எனத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்!

இலக்கு 2016

வரும் 2016 ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலுக்கு இப்பொழுதே தமிழகத்திலுள்ள அனைத்து இயக்கங்களும் தயாராகி வருகின்றன! இலவசங்களில் மக்களை வீழ்த்தி வாக்கு வங்கியை வளைப்பதற்குத் தேவையான வழிமுறைகளை இது போன்ற இயக்கங்கள் நிச்சயம் வகுக்கும்! வழக்கம் போலவே இந்தத் தேர்தலிலும் வாக்காளர்களுக்குத் தாங்கள் கொள்ளையிட்ட பணத்தை வாரியிறைத்து வாக்கு வங்கியை வளைப்பதற்கு வலிமை மிக்க இயக்கங்கள் தயாராகக்கூடும்! எந்த இயக்கம் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டில் நிலவும் இலஞ்சமும் ஊழலும் அடியோடு தொலையப்போவதில்லை என்ற வறட்டு வாதம் பேசியே மக்கள் ஏதேனும் ஒரு ஊழல் இயக்கத்தைத்தான் இந்தத் தேர்தலிலும் ஆட்சியமைக்க வாய்ப்பளிப்பர்! இந்த நிலையில்  இந்த நாட்டில் நிலவும் இலஞ்சம், ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், கொலை, கொள்ளை, வழிப்பறி நிகழ்வுகள், கந்து வட்டிக் கொடுமைகள், கனிம வளக் கொள்ளைகள், வனக் கொள்ளைகள், சுகாதாரக்கேடு, மாசடைந்த கால்வாய்கள், மாசடைந்த ஆறுகள், வளைக்கப்பட்ட அரசு நிலங்கள், வளைக்கப்பட்ட வனங்கள், ஆறுகள், கால்வாய்கள், வசிப்பிடமற்ற மக்கள், இலவசங்களில் மயங்கி வேலை வெட்டியின்றிச் சுற்றும் கூட்டம், குடி

இசுலாமியச் சகோதர சகோதரிகளுக்கு இனிய இரமலான் நல்வாழ்த்துக்கள்!

தமிழுக்கும் இசுலாத்திற்கும் பல்லாயிரக்கணக்கான வருட நாகரீக உறவுகள் உண்டென்பது வரலாற்று உண்மை!  இசுலாமியர்களின் வழிபாட்டு முறைகளும் உலகமெங்கும் பல்வேறு காலகட்டங்களில்  ஏராளமான மாற்றங்கள் பெற்று வந்திருந்தாலும் தமிழர்களின் எண்ண ஆற்றலை வெளிப்படுத்தி இயற்கைச் சக்தியை வசப்படுத்தும் வழி முறையை இசுலாமும் பின்பற்றி வந்துள்ளதெனலாம்! இசுலாமியர்களின் உருவ வழிபாடு அற்ற வழிபாட்டு முறையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் பெற்றிருந்தாலும்;  தினசரி தவறாது அதிகாலை துவங்கி பாங்கு ஓதி அனைவரும் பள்ளி வாசலில் ஒன்று கூடித் தங்களின் எண்ணங்களை இயற்கை வெளியெங்கும் பரவச்செய்து தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வதை இன்றும் நாம் காணமுடிகிறது! தமிழகத்தில் வைணவர்கள் புரட்டாசி மாதத்திலும் சைவர்கள் தை மாதத்திலும் விரதமிருப்பதைப் போல இசுலாமியர்கள் தங்களின் இரமலான் மாதத்தில் விரதமிருந்து நோன்பு கடைப் பிடிக்கின்றனர்! இசுலாமியர்களும் ஆதியில் தமிழர்கள் போலவே சைவ உணவுப் பழக்க வழக்கத்தவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்! பின்னர் படிப்படியாக அவர்களும் அசைவ உணவுப் பழக்க வழக்கத்தி

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நட்டத் தவறுக்குக் காரணம்

அரசுப்பேருந்து வழித்தடங்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தைத் தனியாருக்கு ஒதுக்குவதாக அரசு முடிவெடுத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன! தரமற்ற கட்டுமானப் பொருட்களைக் கொண்டு அரசுப் பணிமனைகளில் கட்டப்படும் பேருந்துகள் வண்ணம் பூசி அழகாகக் காட்சியளித்தாலும் வெகு விரைவில் தளர்ச்சியுற்று சன்னல் கண்ணாடிகள் ஆடுதல், மேற்கூரைகளில் மழை நீர் ஒழுகுதல், லொடலொடவெனச் சத்தம் எழுப்புதல்! அரசுப் பேருந்துகளின் பணிமனைகளில் காணப்படும் அலட்சியம் காரணமாகத் தூய்மையின்றி இருத்தல், பழுதடைந்த பாகங்களை உடனடியாகச் சரி செய்யாததால் விரைவில் காயலான் கடைக்குச் செல்லும் தரத்தில் காட்சியளித்தல்! (சமீபத்தில்கூட ஏராளமான எலும்புக்கூடாகி நிற்கும் பேருந்து அணிவரிசையை ஒரு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் கண்டு நெஞ்சம் பதறியது) ஒரே தரத்திலுள்ள அரசுப் பேருந்துகள்! ஆயின் கட்டண விகிதமோ சாதாரணம், விரைவு, இடைநில்லா, குறித்த நிறுத்தங்களில், எனப் பல்வேறு விதத் தாறுமாறான கட்டணங்கள் காரணமாக சாதாரணப் பேருந்துகள் ஓரளவு நிறைந்த நிலையில் செல்ல அதிகக் கட்டணப் பேருந்துகள் இரவு நேரங்கள் தவிரப் பெரு

வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்!

பிரதமர் சென்னை வருகை வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்!  முதல்வர் திருச்சி வருகை ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிப்பு! பிரச்சினைக்குரிய தலைவர் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன!  இது போன்ற செய்திகளை நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்க நேர்கிறது! ஒரு சனநாயக நாட்டில் தலைவர்களின் பாதுகாப்பிற்கெனச் செலவிடப்படும் தொகையைக் கொண்டே ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்றிவிடலாம்! அந்த அளவிற்கு இன்றுள்ள தலைவர்களின் பாதுகாப்பிற்கென ஏராளமான வரித்தொகை இது போன்ற செலவினங்களுக்காகத் திருப்பி விடப்படுகிறது! தலைவர்களுக்குக் கடுமையான பாதுகாப்பு தேவைப்படும் நிலை உள்ளதென்றால் இவர்கள் தங்களிடமுள்ள ஏதோ ஒருவித குறையினால் எதிரிகளைப் பெற்றுள்ளனர் என்றுதான் அர்த்தம்!  ஒருபக்கம் எதிரிகளைக் கொண்டுள்ள இவர்கள் மறுபக்கம் மக்களின் ஆதரவினையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது! அப்படியெனில் இவர்கள் நிச்சயம் அனைத்து மக்களின் ஆதரவினையும் பெற்ற சமநிலைத் தலைவராக விளங்கவில்லை என்றுதான் நாம் எண்ணத் தோன்றுகிறது!  எது எப்படியாயினும் இவர்கள் பொதுமக்களிடமிருந்து பாதுகாப்புக் கார

அப்துல் ரகுமான்!

அதிகாலை இருட்டில் பாரதக் கப்பற்படையின் கண்களில் மண்ணைத் தூவியவாறு அந்தச் சிறிய கப்பல் வெகு வேகமாக ப்   பாரத க்  கடல் எல்லைக்குள் நுழைந்து கேரளப் பகுதிக்குள் ஊடுருவியது! கப்பலின் மேல்தளத்தில் நின்றவாறு பாரதத்தின் நிலப்பகுதியைத் தொலைநோக்குக் கருவியால் கண்களில் கொலை வெறி தாண்டவமாடியவாறு கண்காணித்த அப்துலின் தலைமையில் பத்து பேர்கள் கொண்ட அணியென்று புனிதப் போருக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு பாரதம் நோக்கி நேற்றிரவுதான் பாகிஸ்தானின் லாகூரிலிருந்து புறப்பட்டிருந்தது! பாகிஸ்தானின் லாகூர் அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல் ரகுமானுக்கு இளம் வயது முதலே பாரதம் என்றாலே எதிரி நாடுதான் என்ற உறுதியான எண்ணம் விதைக்கப்பட்டிருந்தது!  சரியான கல்வி வாய்ப்பு கிடைக்காததால் வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடிய அவனுக்குள் இருந்த வெறியுணர்வை மேலும் அதிகரிப்பதற்கெனவே அருகிலிருந்த தீவிரவாதப் பயிற்சி முகாம் உதவி செய்தது!  தீவிரவாத முகாமில் பயிற்சி பெற்ற இரு ஆண்டுகளிலேயே பலவித ஆயுதங்களையும் பயன்படுத்துவதில் திறமை பெற்றதால் இன்றைய புனிதப் பயணத்திற்குத் தலைமையேற

அமைச்சர்! அரை பிளேடு!

படம்
இது எனது வணிக வாழ்வில் நேர்ந்த அனுபவம்! எங்கள் பல்பொருள் விற்பனை அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்காக ஒரு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் வந்திருந்தனர்! விலை உயர்ந்த சவரக் கத்தி, சவரத் தூரிகை, சவரப்பசை, சவரத்திற்குப் பின் போடப்படும் விலை உயர்ந்த வாசனை திரவியம்,  விலை உயர்ந்த பற்பசை, பல்குச்சி, விலை உயர்ந்த குளியல் சோப்பு,  முகப் பவுடர், தலைக்குப் போட விலை உயர்ந்த எண்ணெய்ப்புட்டி, சீப்பு,  உடலில் தெளிக்கும் விலை உயர்ந்த வாசைன திரவியம், விலை உயர்ந்த எவர்சில்வரினால் ஆன பிளாஸ்க் சூடாகப் பானம் அருந்த, அதே அளவில் குளிர்ச்சியான பானம் பருக மற்றொரு பிளாஸ்க்,  இன்னும் ஏராளமான பொருட்களை அவர்கள் வாங்கினர். இவையெல்லாம் எதற்கு என அவர்களிடம் வினவினோம்! அதற்கு அவர்கள் தெரிவித்த பதில் இதுதான்! இன்று எங்கள் துறை சார்ந்த அமைச்சர் ஆய்விற்காக வருகிறார். அவர் தங்கும் அறையில் வைப்பதற்காகத்தான் இவைகளை நாங்கள் வாங்குகிறோம் என்றனர்! இங்கு வாங்கியவை தவிர அமைச்சருக்கு அணிவிப்பதற்கென சால்வை, சந்தன மாலை, உள்ளிட்ட ஏராளமான பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு  இடங்களுக்

தமிழக இளைய சமுதாயத்திற்கு ஒரு வேண்டுகோள்!

தமிழக மக்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களைத் தரிசிக்கச் செல்லும்போது அங்கு நிலவுகின்ற ஒழுக்கக் கேடுகளை ஏனோ கவனிக்கத் தவறுகின்றனர். அப்படிக் கவனிக்க நேர்ந்தும் சகிப்புத்தன்மையுடன் வழிபட்டுத் திரும்பி விடும் காரணமும் புரிபடவில்லை! சமீபத்தில் திருக்கடையூர் அம்மன் சந்நிதிக்கு எனது மாமனாரின் எண்பது வயது முடிவடைந்ததை அடுத்து அவருக்குச் சோதிடர்கள் அறிவுறுத்தியபடி வழிபாடு செய்யச் சென்றோம்! அந்த ஆலயம் முழுவதும் அறுபது மற்றும் எண்பதாம் ஆண்டு நிறைவு பெற்ற வயதான தம்பதியர்களுக்கு ஏராளமான புரோகிதர்கள் தலைமையில் மறு திருமணம் செய்விக்கும் காட்சிகள் நிறையக் கண்டோம்! இந்தத் திருமணங்களுக்காக அம்மனின் சன்னிதி தொடங்கி சுற்றுப் பிரகாரம் முழுக்க மட்டுமன்றி வெளியிலும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன! இதன் காரணமாக ஆலயம் முழுவதும் ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்தது! அம்மனின் சன்னிதி முழுக்க கருகருவெனப் புகை படிந்து காட்சியளித்தது! அதோடு மட்டுமன்றி சந்நிதி முழுவதும், மலர்களும், அட்சதைகளும், தண்ணீரும் நிறைந்து கால் வைக்கவே இயலாமல் சகதிமயமாகக் காட்சியளித்தது!  ஒரு வரலாற்றுப் புதையலாகப் பாதுகாக்கப்

சித்தர்கள் அறிவோம்! சித்தம் தெளிவோம்!

           சித்தர்களைப் பற்றி நம் தமிழக மக்களுக்கு சரியாக விளக்கப்படவில்லை என்றே நாம் கருத வேண்டும். சித்தம் தெளிந்தால் அனைவரும் சித்தர்கள்தாம்! அதிலும் குறிப்பாக இயற்கையை முழுமையாக உணர்ந்தவர்கள்தாம் சித்தர்கள்! வள்ளுவர்தாம் உலகில் தோன்றிய முதல் சித்தராவார்! வள்ளுவர் வாழ்ந்த காலத்தையும் நம் மக்கள் தவறாகப் புரிந்துகொள்ளுமாறு திசை திருப்பப்பட்டுவிட்டனர்! திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் அவர் காலத்திலும் நிலவியதாக நம் மக்கள் மனதில் தவறான விதை விதைக்கப்பட்டு ஆலாக விழுது விட்டுவிட்டது! உண்மை என்னவென்றால் திருவள்ளுவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னோக்கிச் சிந்திக்கவல்ல ஞானியாவார்!  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் வாழும் மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதைத் தம்முடைய தீர்க்க சிந்தையால் உணர்ந்து  பிற்காலத்தில் தவறான செயல்களால் வாழ்வு தொலைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளப் பயன்படுகின்ற வழி முறைகளையும் அவரே திருக்குறள்களாகப் பாடி வைத்தார்! அவர் போன்றே தமிழ்க்கடவுள் எனக் கருதப்படும் முருகனின் தலைமையில் ஒன்று திரண்ட சித்தர்

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த உணர்வு பூர்வ அனுபவம்!

எனது தந்தை மரணப்படுக்கையில் இருந்த நேரம் அது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அவரை மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கியது மருத்துவமனை நிர்வாகம். அவரின் உடலை வெகுவாகப் பாதித்த மஞ்சள் காமாலை நோய் காரணமாக அவருக்கு அப்போது கடுமையான உடல்வலி இருந்ததால் எனது சிறிய தமக்கை அவருடைய உடம்பினை அழுத்தி அவரது வேதனையைக் குறைக்க முயன்றார். அவர் ஏதோ வேலையாக வெளியில் செல்லவே அவரது வேதiனையைக் குறைக்கும் பொறுப்பு என்னிடம் வந்தது. நானும் அவரது உடம்பினை அழுத்தி விட்டவாறு அவரது வேதனையைக் குறைக்க முயன்றேன். அதோடு மட்டுமன்றி அவரின் முதுகில் ஆறுதலாகத் தட்டியவாறு அவரிடம் மானசீகமாக நான் இதுவரை அவரிடம் ஏதேனும் கோபமாக அவரது மனம் புண்படும்படியாக நடந்து கொண்டிருந்தால் என்னை மன்னித்துவிடுமாறு உள்ளுக்குள் வேண்டினேன். என்னுடைய வேண்டுகோள் அவருக்குள் நிச்சயம் பதிந்திருக்கும். ஏனெனில் வாழ்க்கையின் முடிவுப் பகுதிக்குள் அவர் வந்துவிட்ட நேரம் அது. எனது வேண்டுகோள் அவரின் ஆழ் மனதில் பதிவதை நான் அந்த நிமிடமே உணரத் துவங்கினேன். என் தந்தையிடம் நான் நடந்து கொண்ட தவறான ந

மதவாத வன்முறைகள்!

சித்தர்கள் எச்சரித்தது போன்றே மதவாத வன்முறைகள் தமிழகத்தில் அரங்கேறத் துவங்கிவிட்டன! மதவாதத்திற்கும் சாதியவாதத்திற்கும் விலைபோன தமிழக அரசியல் இயக்கங்கள் தேர்தல் அரங்கிலிருந்து தமிழக மக்கள் சக்தியால் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் தம் இயக்கத்தைச் சார்ந்தவர் படுகொலை செய்யப்பட்டார் என்ற காரணத்திற்காக மத்தியில் ஆட்சியைப் பிடித்த மமதையில் தமிழகத் தலைநகர் சென்னையில் வன்முறையைப் பரப்பியுள்ளனர் மதவாத அமைப்பினர்! படுகொலைக்கு ஆளானவரின் மரணம் நிச்சயமாகக் கண்டனத்திற்கு உரியது! இரங்கத்தக்கது! வருத்தத்திற்குரியது! அனுதாபத்திற்கு உரியது! அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் உடனடியாகக் காவல்துறை வாயிலாக அடையாளம் காணப்பட்டு குற்றத்திற்குரிய தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் இங்கு மாற்றுக் கருத்தும் கிடையாது! எந்தக் காரணத்தினால் இந்தப் படுகொலை நடந்தது என்பதை அறிய முடியாத நிலையில் இதற்கு மதவாத முத்திரை குத்தி அரசியலாக்குவது அரசியல்  நாகரீகத்திற்கு எதிரானது! அதோடு மட்டுமன்றிச் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதும் ஏதுமறியா அப்ப

எடுபிடிகள்!

அரசியல்வாதிகள், நடிகர்கள், சாமியார்கள், இவர்கள எல்லாம் வணிகம் சார்ந்த பிரிவினர்!  இவர்கள் தங்களின் செல்வாக்கினையும் செல்வத்தையும் உயர்த்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளும் நபர்களைத்தான் இங்கு நாம் எடுபிடிகள் என வேதனையாகக் குறிப்பிட வேண்டியிருக்கிறது! அரசியல்வாதிகள், நடிகர்கள், சாமியார்கள், இவர்களின் பிறந்தநாள், உள்ளுர் வெளியூர்ப் பயண வரவேற்புகள், துவங்கிப் பல்வேறு வருமான வாய்ப்புகளைப் பெருக்குவதற்குத் தேவைப்படும் கட்அவுட்டுகள்,  கொடி தோரணங்கள், விளம்பரத் தாள்கள் விநியோகித்தல், சுவரொட்டிகள் ஒட்டுதல், பொதுக்கூட்ட மேடைகள் அமைத்தல், இன்ன பிற வேலைகளுக்கெனவே  இளைய சமுதாயத்தைஇவர்களுக்கு எடுபிடிகளாக்கிச் சம்பளம் கொடுத்தும் பதவிகள் கொடுத்தும் பயன்படுத்திக்கொள்கின்றனர்! குறிப்பாக இன்றைக்குத் திரையுலகில் சிரிப்பு நடிகர் தொடங்கி வில்லன் நடிகர்கள், கவர்ச்சி நடிகையர் வரை இவர்களுக்குக் கட்அவுட் வைத்துப் பாலாபிசேகம் செய்து ஆரவாரித்து இவர்களின் திரையுலக வளர்ச்சியை அதிகப்படுத்திக் கொள்வதற்கென்றே இளைய சமுதாயத்தை எடுபிடிகளாகப் பயன்படுத்துகின்றனர்! இவர்களின் ஆரவாரத்த

ஊடகங்கள்

தினசரி செய்தித் தாள்களைப் படிக்கும்போது, தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகளைக் காணும்போது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல், இலஞ்சம், நில அபகரிப்பு, கடத்தல், கடையடைப்புப் போராட்டங்கள், சூதாட்டம், சாலை மறியல்கள், விபத்துகளால் மரணம், படுகாயம், வன்முறைகள், சாதி மதச் சண்டைகள் தற்கொலைகள், காவல் நிலைய மரணங்கள், ஆளும் கட்சியினரின் சுய தம்பட்டங்கள், எதிர் இயக்கத்தவரின் கண்டன அறிக்கைகள், இது போள்ற செய்திகள் இல்லாது, தமிழர் பண்பாடு, நாகரீகம், தமிழர்தம் சாதனைகள், தமிழர்தம் வாழ்க்கை நிகழ்வுகள் போன்ற செய்திகள் மட்டுமே ஏராளம் காணும் நிலை வரும் காலம் எப்போது?

காந்தியார் வழங்கிய அகிம்சை குணங்கள்!

மகாத்மா அவர்கள் அகிம்சா வழியில் போராடி நம் நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கித் தந்துவிட்டு மறைந்தாலும் அவர் வழி காட்டிய அகிம்சை குணம் மட்டும் நம் மக்களிடமிருந்து அகலவே இல்லை எனலாம்! நம் தமிழக மக்களில் பெரும்பாலானோர் தங்களுக்குப் பிடித்த சின்னங்களுக்கும், தங்களுக்குப் பிடித்த இயக்கங்களுக்கும்தான் வாக்களிப்போம் எனப் பிடிவாத மனப்பான்மையுடன் வாக்களித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக எந்த இயக்கம் அதிகப் பணம் கொடுக்குமோ அந்த இயக்கத்திற்கு பணம் பெற்ற விசுவாசம் குறையாமல் வேறு எவருக்கும் வாக்களிக்காது அந்த இயக்கத்திற்கே வாக்களிப்பதில் கடமை தவறாதவர்களாக விளங்குகின்றனர். மக்களின் விசுவாசமும் நன்றி உணர்வும் பாராட்டத் தக்கதுதான். ஆனால் இந்த நன்றி உணர்வால் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தீர்ந்து விடுகின்றனவா என்றால் அது கேள்விக்குறிதான்! குடி தண்ணீர், சாலை வசதி பேருந்து வசதி, மின்சார வசதி, சாக்கடை வசதி, சுகாதார வசதி, பள்ளிக் கட்டிடம், வீட்டு வசதி, இது போன்ற ஏராளமான அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டாமலே ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தல் திருவிழாக்களை எதிர் கொள்கி

தொலைந்து போன ஆறுகள்!

மழை காலங்களில் பெருகும் ஆற்று நீரைக் குறைவான மக்கள் தொகை இருந்த காலத்திலும் நம் முன்னோர்கள் நிலம் குழிந்த இடங்களில் எல்லாம் ஏராளமான ஏரிகளையும், குளங்களையும் வெட்டிக் கால்வாய்கள் வழியாகக் கொண்டு சேர்த்து வெள்ள நீரைச் சேமித்து வந்துள்ளனர்! இன்றைக்கும் நம் கண் முன்னே பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் ஏரிகள் குளங்களே இதற்கான சாட்சியாகும்! குறிப்பாகக் காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரம்மாண்டமான குளங்கள்! நம் முன்னோர்களின் மனித உழைப்;பும் இயற்கையைச் சரிவர நிர்வகிக்கும் ஆற்றலும் அளவிட இயலாதது! இன்றோ நாம் எல்லாவற்றையும் இழந்த நிலையில் உள்ளோம்! அதுவாவது பரவாயில்லை! இருப்பதையாவது தக்க வைத்துள்ளோமா என்பதுதான் இன்றைய கேள்வி! ஏரிகள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிரமிப்புச் செய்து அங்கு அவை இருந்த இடமே சுத்தமாகத் தெரியாமல் வீட்டு மனைகளாக்கப்பட்டுள்ளன. இயற்கையாகவே நீர் குழிந்த இது போன்ற இடங்களில் கடும் மழைக் காலங்களில் வெள்ள நீர் வழக்கம் போலத் தன் இருப்பிடம் தேடி வரும்போது அந்த இடத்தில் முளைத்துள்ள வீடுகளைச் சூழ்ந்துவிட மக்கள் இயற்கை தமக்குச் சதி செய்வதாகக் கற்பனை செய்து கொ

சொர்க்கம் நரகம்

சொர்க்கம் நரகம் என்ற கதைகளைப் பகுத்தறிவுள்ள எவரும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்!  பூமிப்பந்திற்கு அப்பால் உள்ள இந்தக் கற்பனை இடங்களைப் பற்றி நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்! எனினும் இந்த பூமிப்பந்திலேயேதான் உண்மையிலேயே சொர்க்கமும் நரகமும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது!  நற்குடிப் பிறப்பு, நல்ல தாய் தந்தையர், சிறந்த உற்றார் உறவினர், நல்ல கல்வி, நல்ல துணை அழகான அறிவான குழந்தைகள் உழைப்பிற்கேற்ற ஊதியம்! மன நிறைவான வாழ்க்கை! இவை ஒருங்கே அமையப்பெற்றவருக்கு இந்த பூமிப்பந்துதான் சொர்க்கம்! இதற்கு நேர்மாறான வாழ்க்கை முறையை அனுபவித்து என்றென்றும் துன்பத்திலேயே உழன்று கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் புவி வாழ்க்கையே நரகம்தாம்! இவையெல்லாம் நியமப்படி அமைவது அவரவர்தம் முற் பிறவிப் பயன்!  அதே சமயம்  அறிது அறிது மானிடராய்ப் பிறத்தல் அறிது!  அதனினும் அறிது கூன் குருடு செவிடு அற்ற மனிதராய்ப் பிறத்தல் அறிது!  எனப்பாடிய நமது முது பெரும் பெண் தமிழறிஞர் அவ்வையின் குமுறலுக்கேற்ப உலகில் இத்தகைய குறையுடன் பிறப்பவர்களையும்,  அல்லது பிறக்கும்போது நல்ல நிலையில் பிறந்து ஊனமடை

உயிர்த் தத்துவம் அறிவோம்!

பிறவிகள் தொடரக்கூடிய இயல்படையவை என்பதை உலகிற்கு ஆணித்தரமாக உணர்த்தியவர்கள் நம் முன்னோர்கள்! இவ்வாறு தொடரும் உயிர்கள் தங்களின் முற்பிறவி வாழ்விற்கேற்பத்தான் அடுத்த பிறவியினை அமைத்துக் கொள்ள முடியும் என்பதையும் நம் முன்னோர்கள் அறிந்துள்ளனர். முற்பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்பவே அவர்தம் அடுத்த பிறவி அமையும் என்பதும்,  முற்பிறவியில் கொடியவர்களாக விளங்கியிருப்பின் அவர்தம் ஊழ்வினை அடுத்த பிறவியில் தொடரும் என்பதையும் உணர்ந்த நம் முன்னோர்கள்  வாழ்க்கை முறையில் கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கையாக ஊழ்வினையைத் தவிர்த்து வாழ்ந்து வந்துள்ளனர்! வள்ளுவமும் ஊழ்வினை எனக் குறிப்பிட்டுப் பிறவிகள் உண்டென உறுதிபடுத்தியுள்ளார்!  அதே சமயம் அவரது குறளிலுள்ள கருத்துகளுக்குத் தவறாகத் தெளிவுரைகள் வழங்கப்பட்டு தவறான அர்த்தம் கொள்ளப்பட்டுவிட்டது!  உதாரணத்திற்கு எழு பிறப்பும், எழுமை எழுபிறப்பும் என அவர் எழுதியுள்ள பல குறள்களுக்கும் தெளிவுரை எழுதிய அறிஞர்கள் பக்தி மார்க்கத்தவர்களாக இருந்ததால்  அவரது கருத்தாகிய எழு பிறப்பு என்பதை ஏழு பிறவிகள் எனத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டனர்!

தமிழக அரசின் அதிகாரச் சின்னம்!

இன்றைக்கு ஆட்சியாளர்களின் எல்லை மீறுதல் வரம்பு கடந்த நிலையில் காணப்படுகிறது!  பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட ஒரே காரணத்திற்காக தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதும் தட்டிக் கேட்பவர்கள் பழி வாங்கப்படுவதும் ஆரோக்கியமான அரசியல் நெறியாகாது! மக்களின் உழைப்பில் கிடைத்த வரிப்பணத்தில்தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படை அறிவுகூட மக்களுக்கு இல்லாத காரணத்தால்தான்  இது போன்ற திட்டங்களை முதல் போட்டு நடைமுறைப்படுத்துவது ஆளும் அரசியல்வாதிகள்தான் என்ற தவறான எண்ணத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்! இதன் விளைவுதான் முந்தைய ஆட்சியாளர்களால் துவக்கி வைக்கப்பட்டு இன்றைய ஆட்சியில் வரைமுறை கடந்து போன சுய தம்பட்டத் திட்டங்கள்!  எங்கு பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட தலைவர் அல்லது தலைவியின் படங்கள் அடங்கிய அரசின் திட்டங்கள்!  போகிற போக்கில் தமிழ்நாடு என்ற பெயர்கூட இது போன்ற தான்தோன்றித்தனமான ஆட்சியாளர்களால் மாற்றம் செய்யப்பட்டுவிடுமோ என அஞ்சுமளவிற்கு இவர்களின் ஆர்ப்பாட்டங்களும் சுய தம்பட்டங்களும் தொடர்கின்றன!  எஙகு பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட நபரின் படங்கள்