இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களின் நினைவிட இல்லம்

பகுத்தறிவு பற்றிய அறிமுகம் எனது ஏழாம் வகுப்பிலிருந்தே துவங்கி விட்டது!  எங்கள் பள்ளியில் சிறந்த தமிழாசிரியராகவும் சேலம் மாவட்ட பகுத்தறிவுக் கழகத்தில் ஒரு துடிப்பு  மிக்க தொண்டராகவும் தந்தை பெரியார் அவர்களின் தலைமையேற்று வழி நடக்கும் உயர்திரு ஆ.பெரியசாமி தமிழய்யா அவர்களால் என்னுள் இளம் வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு விதை ஊன்றப்பட்டுவிட்டதெனலாம்!  தமிழய்யா எங்கள் வகுப்பில் நுழைந்து பாடம் எடுத்து முடிக்கும்வரை எங்கள் வகுப்பறை ஆரவாரத்தில் உற்சாகிக்கும்! தமிழர் வரலாறு, இலக்கணம் எனத்துவங்கித் தவறாமல் சமுதாயச் சீர்கேடுகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும், பொய்யான இழிவான இதிகாசங்களையும் சாடி எங்களுக்குள் பகுத்தறிவு வளர்ப்பதற்குப் பாடுபட்டார்!  இலக்கண விதியில் எப்படி எழுதுகிறேன் என்பது எனக்குத் தெரியாவிட்டாலும், தமிழய்யா போன்றவர்களால்தான் ஓரளவு என்னால் தமிழில் எழுத்துப் பிழையின்றி இன்றும் எழுத முடிகிறது! எங்கள் ஊர் சந்தைத் திடலில் அமைந்திருந்த ஒரு மேடையில் தந்தை பெரியார் அவர்கள் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் ஆர்வமுடன் நானும் கலந்து கொண்டேன்! தந்தையை மேடையிலிரு

சென்னையில் எனது வேலை அனுபவம்!

நான் மேலாளராகப் பணி புரிந்த நிறுவனத்தில் எனக்குக் கீழ் வேலை பார்த்தவர்கள் எனக்குக் கட்டுப்பட்டு நடக்காததால் நிறுவன உரிமையாளரிடம் நான் பலமுறை இது குறித்து முறையிட வேண்டியதாயிற்று! அவரோ நீ மற்றவர்களைக் குறை சொல்லாதே அவர்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி நிர்வாகம் செய்ய வேண்டியது உனது பொறுப்பு எனவும்தான் அடிக்கடி கூறுவார்! இந்தக் காலத்து இளைய தலைமுறையினர் வேலை என வரும்போது தங்களுக்குரிய கடமையைச் செய்து அதற்கெனத் தனக்குக் கிடைக்கும் ஊதியத்தை உயர்த்திக்கொள்வதில் அவ்வளவாக அக்கரை காட்டுவதில்லை! முடிந்தவரை தனக்குத் தரப்பட்ட வேலையைச் செம்மையாகச் செய்து கொடுத்து நல்ல பேரை எடுக்க வேண்டுமென்ற ஆவலற்றும் இருக்கின்றனர்! பெரும்பாலான இளைய தலைமுறையினர் தங்களின் பெற்றோரால் செல்லமாக வளர்க்கப்பட்டதன் விளைவு இது! அது மட்டுமன்றி இவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பணியாற்றும் இடங்களில் அவர்களின் மேலாளர் அல்லது உரிமையாளர்களால் தங்களின் பணியில் கவனக்குறைவு காரணமாக ஏதேனும் திட்டு வாங்க நேர்ந்தால் தங்களின் பிள்ளைகள் செய்த தவறு என்னவென்பதை ஆராய்ந்து அவர்களை நல்வழிப்படுத்தாமல் நிறுவன மேலாளரை அல்லது

அவரவர் கோபம் அவரவருக்கு!

எனது தந்தையார் தனது மூத்த அண்ணாருடன் இணைந்து உணவகம் நடத்திச் சேர்த்த சொத்துக்களை ஒரு கட்டத்தில் என் பெரியப்பா தனக்கே உரிமையென எடுத்துக்கொள்ள எவ்வளவோ போராடிப் பார்த்தும் தனக்குரிய பங்கினை முறையாகப் பெற இயலாத என் தந்தை  பெருத்த ஏமாற்றத்துடன் அவரிடமிருந்து கிடைத்த சொற்பப்  பணத்துடன் அனைத்து சொத்துக்களிலும் இனி தனக்கோ தனது வாரிசுகளுக்கோ எந்தவித உரிமையும் கிடையாது என எழுதிக்கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டார்! இதன் காரணமாக எனது பெரியப்பா குடும்பத்துடன் எங்கள் குடும்பம் பேச்சு வார்த்தையின்றிப் போனது! பல ஆண்டுகள் செய்து வந்த வணிகத்திலிருந்து ஒரேயடியாக விலக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபமும், தன்னுடைய கடுமையான உழைப்பினால் சேர்த்த சொத்துக்களை இழந்துவிட்டதால் தனக்கு வாழ வழியின்றிப் போனதால் ஏற்பட்ட விரக்தியியிலும் சில ஆண்டுகள் என் தந்தை வேறு எந்த வணிகத்திலும் ஈடுபட விரும்பவில்லை! வருமானமின்றிப்போனதால் ஏற்பட்ட குடும்பச் சுமைகள் ஒரு பக்கம்! குடும்பம் ஒன்றாக இருந்தபோதே எனது மூத்த சகோதரிக்குத் திருமணம் ஆகியிருந்தாலும் எஞ்சியிருந்த எங்கள் மூவரையும் வளர்த்து படிக்க வைக்க எனது தந்தையார் பட்ட துன்பங்க

விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

நாடு தனது 68 ஆவது விடுதலை தினத்தைக் கொண்டாட உள்ளது! வழக்கம்போல விடுமுறை நாளைக் கொண்டாடுவது போல மக்கள் விடுதலை தினத்தைக் கொண்டாட உள்ளனர்! எவ்வளவுதான் நாட்டுப்பற்று மிக்கவர்களாக மக்கள் தங்களைப் பறை சாற்றிக்கொண்டாலும் மக்களிடம் நாட்டுப் பற்றுக் குறைந்துள்ளதை 12.08.14 அன்று  கண்கூடாகக் காண நேர்ந்தது! நேற்று ஈரோட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள்! பாரத மக்களின் பெருவிருப்பத்திற்கு உரிய மாண்புமிகு கலாம் அவர்கள் நிறைவுநாள் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்! அவரை நேரில் காண வேண்டுமென்ற ஆவலில் பத்து வயதிற்கும் குறைந்த பள்ளிச் சிறுவர்கள்கூட பெருந்திரளாக வந்திருந்தனர்! கடுமையான போக்குவரத்து நெரிசல்கூட திரு கலாம் அவர்களைக் காண வேண்டுமென்ற ஆவலில் வந்த கூட்டத்தால் உருவானதைக் கண்ணுற்றபோது நம் இளைய சமுதாயம் அவர் மேல் வைத்துள்ள ஏராளமான மதிப்பினை நேரில் காணும் வாய்ப்பு ஏற்பட்டதால் எமக்குள் மிகுந்த மகிழ்ச்சி அலைகள்! இந்த நிகழ்விற்கு எனது பணியை முடித்துவிட்டுச் சென்றதால் அரங்கில் நுழைய இயலாமல் புத்தக அரங்கில்தான் அதுவும் ஏராளமான மக

வணிகமும் வணிகவரித்துறையும்!

என்னுடைய வணிகம் துவங்கியது திராவிட ஆட்சியாளர்கள் காலத்தில்! இவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் வணிகவரித்துறையில் இலஞ்சம் ஆதிக்கம் செழுத்தத் துவங்கிவிட்டதெனலாம்! இவர்களைக் கேட்டால் இணை வணிகவரி அலுவலர் துவங்கி ஒவ்வொரு மட்டத்திலும் இவ்வளவு என ஒரு தொகையை மேலிடத்திற்கு வழங்க வேண்டும் அதனால்தான் நாங்கள் இலஞ்சம் வாங்க வேண்டியதாயிற்று என்பார்கள்! மேலிடம் என்பது எவரென இன்றுள்ள தமிழகத்தின் எல்கேஜி குழந்தைகூட சரியாகச் சொல்லிவிடும்! இப்படியாகத் துவங்கியதுதான் இந்தத் துறையின் இலஞ்ச வரலாறு! தேனெடுத்துத் தருபவர்கள் புறங்கையைச் சுவைக்காமலா இருப்பார்கள்? எப்படியோ ஓகோவென இலஞ்சம் இந்தத் துறையில் கொடிகட்டிப் பறந்தது! இன்னும் பறக்கிறது! எனக்குத் தெரிந்தவரையிலேயே இந்தத் துறை சார்ந்த அன்பர்கள் அடிக்கடி வணிகர்களிடம் கைநீட்டிக் கைநீட்டி தங்களின் வயோதிக காலத்தில் அட்டாக் வந்து செயலற்றவர்களாக நிறைய பேரைப் பார்த்துள்ளேன்! இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இதற்கு விதிவிலக்கல்ல! வணிகர்களுக்குள் விற்பனை வரி குறித்த விழிப்புணர்வு இன்றுவரை இல்லையெனத்தான் கருத வேண்டும்! வரி ஏய்ப்பு என்பது வேறு! வரிக்கு உட்பட

வணிகத் தவறுகள்!

பொதுவாக ஒரு வணிகம் துவங்குபவர் தன்னுடைய சொந்தப் பணத்தை முதலீடாகக் கொண்டுதான் வணிகம் தொடங்க வேண்டும்! நாம் இந்த வணிகத்தை துவக்கிய பின்னர் இந்தத் துறை சார்ந்த மொத்த வணிகர்கள் நம் இருப்பிடம் தேடி வரத்துவங்குவர்! பெரும்பாலான மொத்த வணிகர்கள் கடன் கொடுத்து தங்கள் வணிகக் கணக்தை நம்மிடம் துவங்குவர்! ஒரு சில மொத்த வணிகர்கள் மட்டும் ரொக்கத்திற்கு விற்பனை எனக் கொள்கை வைத்திருப்பர்! எந்தத் தொழிலாக இருந்தாலும் கடனாகக் கிடைக்கிறதே என வாங்கி வாங்கி நம் கடையில் அடுக்கி வைத்துவிடக்கூடாது! குறிப்பாக வணிகம் தொடங்கிய புதிதில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு வணிகம் நடக்குமா என்பதுவே நமக்குத் தெரியாது! ஏற்கனவே வேறு ஒருவர் நமக்கு அருகில் இதே வணிகத்தைச் செய்து வந்திருந்தால் அவருக்கு வரும் வாடிக்கையாளர் அளவிற்கு நமக்கு வருவது கடினம்! நம்முடைய பொறுமையும், வாடிக்கையாளர்களிடம் பழகும் விதமும், நம்முடைய பொருட்களின் தரமும், நம்முடைய விலைக் கொள்கையுமே மெல்ல மெல்ல நம் வணிகம் உயர்வதற்கு உதவும்! எனவே இந்த நிலையில் நம்முடைய விற்பனை அளவிற்கேற்பவே நம்முடைய கொள்முதலும் இருந்தாக வேண்டும்! உதாரணத்திற்கு தினசரி ஆயிரம்

வாலிபம் என்பது கலைகின்ற மேகம்!

வாலிபம் என்பது கலைகின்ற மேகம்!  அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்!  வருமுன் காப்பவன்தான் அறிவாளி!  துயர் வந்த பின்னே தவிப்பவனோ ஏமாளி!  என்று பூம்புகார் திரைப்படத்தில் ஒரு பாடல் வரி வரும்! இந்தப் பாடல் வரிகள் எவருக்குப் பொருந்துமோ தெரியாது எனது  வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும்!  இளம் வயதிலேயே வணிக வாழ்க்கையில் நுழைந்துவிட்டேன்! எனக்கு அப்பொழுது பதினேழு வயதுதான்!  ஏமாற்றி வணிகம் செய்தால் இலட்சங்களில் லாபம் தரும் நல்ல தொழில்தான் என்னுடையது! ஆனால் என்னுள் இந்த தொழிலில் நேர்மையாக வாழ வேண்டும் என்ற ஒரே இலட்சியம் இளம் வயதிலேயே துளிர் விட்டுவிட்டது! வணிகம் வளரும்போதும் எப்போதும் மாறாத நேர்மை உணர்வு! வரவுக்கும் செலவிற்கும் சரியாக இருந்ததே ஒழிய உபரியான வருமானம் பார்க்க இயலவில்லை!  காலை ஒன்பது மணிக்கு கடை திறந்து மதியம் வரை வணிகம் செய்தபின்னர் மதிய உணவிற்குப் பின்னர் பெரு நகரங்களில் உள்ள மொத்த வணிகர்களிடம் கொள்முதல் செய்வதற்காக தினமும் எனது பயணம் துவங்கிவிடும்! அங்கு மாலை ஐந்து மணிக்குச் சென்றடைந்தால் ஐந்தாறு நிறுவனங்களில் பொருட்கள் வாங்கி அவற்றை பண்டல

வள்ளுவ மகுடம்! அதிகாரம் 9. விருந்தோம்பல்!

உலகிலேயே விருந்தோம்பலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்ற பெருமைக்குரிய மகுடத்தை இன்றைய தலைமுறைத் தமிழர்கள் இழந்து வருகின்றனரோ என ஐயுற்று இந்த இழி நிலை மாற வேண்டும் எனத் தவிக்கிறது நம் முன்னோர்களின் மனம்!  விருந்தோம்பலில் தவிர்க்க வேண்டிய இழி குண மகுடங்களெனப் பின்வருவனவற்றைப் பட்டியலிடுகின்றது வள்ளுவம். விருந்து வெளியிருக்கத் தான் மட்டும் தனித்து உண்ணல், முகரும்போதே வாடும் அனிச்சமலர் போன்று, வந்த விருந்தினரின் முகம் திரிந்து வாடுமாறு நோக்குதல், பொருளை வருந்திப் பாதுகாத்து அவற்றை மற்றவர்க்கு உதவாது பயனற்றதாக்குதல், இவையெல்லாம் அறிவற்றவர்களின் செயலாம். அதே சமயம் விருந்தோம்பலில் சிறந்தவர்களின் உயர் குண மகுடங்களாக வள்ளுவம் இவற்றையும் விவரிக்கின்றது. அகமும் முகமும் மலர்ந்து விருந்தினரை வரவேற்று உபசரித்துத் தம் உழைப்பில் கிடைத்த செல்வத்தை, மனைவியின் துணையுடன் சிக்கனம் செய்து, அச் செல்வத்தை விருந்தினருக்கென்றே செலவிட்டு வாழ்தல், விருந்தினர் உண்டது போக மீதமுள்ள உணவு குறைவாக இருந்தாலும் நிறைவாக உண்டு வாழும் குணநலம், வந்த விருந்தை உபசரித்து வழியனுப்பியபின்,