இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன!

தமிழகத்தில் உள்ள ஆளும் இயக்கத்திற்கு எதிரான மத்திய மற்றும் மாநில இயக்கங்கள் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்குக் கோரி அடிக்கடி அறிக்கைகள், போராட்டங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், விழிப்புணர்வு நடைப்பயணங்கள் போன்றவற்றை மேற்கொண்டிருக்கின்றன! தேசத்தந்தையின் பெயர் தாங்கிய இயக்கமும் இவற்றில் அடக்கம்! இந்த இயக்கங்கள் எல்லாம் ஏதோ தற்பொழுதுதாம் தமிழகத்தில் துவங்கியவை போலவும், தமிழக மக்களை தற்பொழுதுள்ள ஆளும் இயக்கம் மது போதையில் வீழ்த்தியிருப்பதை இந்த இயக்கங்கள் இப்பொழுதுதாம் கண்ணுற்றது போலவும் பரப்புரைகள் மேற்கொண்டு வருகின்றன! பொதுவாக போதை ஏறிய ஒரு நபருக்கு சுயநினைவு தப்பிவிடுவது இயற்கை! போதை ஏறிய நிலையில் அவரிடம் எந்தவித அறிவுரைகளும் ஏறாதென்பதும் அனைவரும் அறிந்ததே!  மதுவால் வரும் வருமானத்தில் திலைக்கும் தமிழகத்தை ஆளும் இயக்கமும் ஏறக்குறைய இதே போதை நிலையில்தான் உள்ளதென்பதும் மதுவால் விளையும் கேடுகள் பற்றிய அறிவுரைகள் இவர்களிடம் எடுபடாதென்பதும் இந்த இயக்கங்களுக்கு விளங்காததல்ல! மதுவிற்கு எதிராகப் பரப்புரை நிகழ்த்தும் மத்திய மாநில இயங்கங்கள் அனைத்துமே தமிழகத்தில் மதுவை அறிமுகப்

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

நவபாரதச் சிற்பி என்றழைக்கப்பட்ட பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் பிறந்த இந்த நன்னாள் பாரதத்தில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது ! தமிழகத்திலுள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக கீழ்க்ண்ட வேண்டுகோள்களை விடுக்கிறோம் ! தமிழகத்தில் பிறப்பெடுத்துள்ள பிறப்பெடுக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் அளவற்ற அறிவுடன் திகழக்கூடியவை ! எனவே தங்களின் குழந்தைகளின் கேள்விகளைப் புறக்கணிக்காதீர்கள் ! கேள்விகள் கேட்கக்கேட்கத்தான் அந்தக் குழந்தைகளின் அறிவுத் திறன் வளரும் !  அவர்களின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க இயலாவிட்டால் முடிந்தவரை அடுத்தவரிடம் கேட்டாவது அவர்களி ; ன் அறிவுத்திறன் மேம்பட உதவுங்கள் ! எந்தக் காரணம் கொண்டும் குழந்தைகளை அடித்து வளர்க்காதீர்கள் ! உங்களின் தனிப்பட்ட கோபங்களுக்கு வடிகாலாகக் குழந்தைகளை அடிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள் ! அடிபட்டு வளரும் குழந்தைகள்தாம் எதிர்காலத்தில் எவர் பேச்சையும் கேளாமல் முரட்டுத்தனமாக வளர்ந்து தீவிரவாதிகளாக மாறும் வாய்ப்புகளுக்குக் கா

தமிழக இளைய சமுதாயமே உங்களின் வருங்கால நிலைப்பாடு என்ன?

தமிழகத்தில் புதிதாகத் துவக்கியுள்ள பிரபலமான நாளிதழின் தiலைப்புச் செய்தியினைப் படிக்க நேர்ந்தது! 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் இயக்கங்கள் தயாராகி வருவதாகவும் குறிப்பாகக் கூட்டணிகள் எவ்வாறு அமையுமென்பது குறித்தும் அந்த நாளிதழ் இன்றைய அரசியல் இயக்கங்களின் மன நிலையைக் கணித்துச் செய்தி வெளியிட்டுள்ளது! இந்தத் தேர்தலைச் சந்திக்க உள்ள தமிழகத்தின் இரு பிரதான இயக்கங்களின் நிலைப்பாடு அந்த இயக்கங்களின் தலைவர்கள் செய்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக வெளிவர இருக்கும் வாய்மை மன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில்தாம் அவற்றின் எதிர்காலத்தைத் தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள் என அந்தச் செய்தி கூறுகிறது! இந்த இரு அணிகளில் மட்டுமே தேர்தலுக்குத் தேர்தல் பச்சோந்தி குண நி;றம் காட்டி அணி மாறித் தங்களின் வாக்கு வங்கிச் சதவிகிதத்தை இங்குள்ள ஏராளமான உதிரி இயக்கங்கள் (குறிப்பாக சாதியம் சார்ந்த அரசியல் இயக்கங்கள்) தக்க வைத்துக் கொண்டு தங்கள் இயக்கம் சாதிய அடிப்படையில் செல்வாக்கு வகிக்கும் குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே கைப்பற்றித் தொடர்ந்து தங்களி