இடுகைகள்

டிசம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாரதியாரின் பிறந்தநாள்!

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று முழங்கிய மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று! மகாகவி நம் தாய்த்தமிழகம் எப்படியெல்லாம் திகழ வேண்டும் என்ற மாபெரும் கனவுகளுடன் வாழ்ந்து மறைந்தும் இன்றும் ஒரு தவச் சித்தராய்த் தமிழகத்தை தம் பாடல் வரிகளால் வழி நடத்துபவர்! அவரின் கனவுகள் அனைத்தும் நனவாகும் காலம் வெகு விரைவில் வருகிறது! ஐந்தாம் தமிழ்ச்சங்கம் மகாகவியின் கனவுகளைச் சுமந்து தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இன்னும் வேகமாகச் செயல்பட தமிழ்நாட்டில் வாழும் அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர வேண்டும் என அவர் பிறந்த இந்த நன்னாளில் பணிவன்புடன் வேண்டுகிறது!

தூய்மை பாரதம்! தூய்மைத் தமிழகம்!

நாடெங்கும் காந்திய வழியில் தூய்மைப் படுத்தும் திட்டத்தை பாரதப் பிரதமர் அவர்கள் அறிவித்து அவரே முறைப்படி தூய்மைப்படுத்தி இந்தத் திட்டத்தைத் துவங்கி வைத்துள்ளார்! நாடு முழுவதும் உள்ள அரசியல் பிரபலங்கள் பிரதமரைப் போலவே தூய்மைத் திட்டத்தில் இணைந்து ஆங்காங்கே தூய்மைப் பணிகளில் இறங்கியுள்ளனர்! இதனைத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களின் வாயிலாகக் காணும் போது பெரும்பாலானவர்களின் செயல் புகைப்படத்திற்கு காட்சி கொடுத்து தாங்கள் இந்தச் செயலைச் செய்வது மேலிடத்திற்குத் தெரிய வேண்டும் என்பது போலத்தான் உள்ளதே தவிர உண்மையான அக்கறையுடன் தூய்மைப் பணியில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை! எனினும் துப்புறவுத் தொழிலாளர்கள் வற்புறுத்தலின் பேரில் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவது ஆங்காங்கே தென்படுகிறது!  தனி மனிதர் தாமாக மனமுவந்து திருந்தாத வரை இந்த நாடு பாரதப் பிரதமர் அவர்கள் எதிர்பார்ப்பது போன்று உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவரது இலக்கு எட்டப்படும் என்பதாகத் தெரியவில்லை! ஒரு தெருவில் தனி மனிதர் திருந்தினால் அந்தத் தெருவே தூய்மையடையும்!  ஒரு தெரு தூய்மையடைந்தால் அந்தத் தெருவைக் காணும் அ

விவேகானந்த சித்தர்!

நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி! அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள்! கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே, என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே! இலக்கை நோக்கி அடியெடுத்து வை! தொடர்ந்து முன்னேறு!! சோதனைகள் விலகும்!!! பாதை தெளிவாகும்!!!! நோக்கத்தை அடைந்தே தீருவாய்!!!!! அதை யாராலும் தடுக்க முடியாது!!!!!!                                                                             இருபதாம் நூற்றாண்டுச் சித்தர் விவேகானந்தர்!