இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மேகதாதுவில் அணை கட்டுவதால் யாருக்கு இலாபம்?

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணைகள் கட்டுவதை எதிர்த்து இன்றைக்கு தமிழக விவசாய சங்கங்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாகக் தமிழகம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. வெள்ளையர்கள் நம் நாட்டு மக்களைப் பிரித்தாண்ட சூழ்ச்சியின் ஒரு பகுதிதான் ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டியதற்குப் பிரதான் காரணம். மாநிலம் விட்டு வேறு மாநிலங்களில் ஓடும் ஆறுகளை அவை உற்பத்தியாகும் இடம் அமைந்துள்ள மாநிலங்கள் இந்த ஆறுகள் முற்றிலும் தமக்கே உரியவை என்ற தவறான நோக்கில் அணை கட்டித் தேக்க முற்படுவதும் இவற்றை மத்தியில் ஆளும் அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும், இது குறித்து உச்ச வாய்மை மன்றம் வரை வழக்குகள் வருடக்கணக்கில் நடைபெற்று வருவதும் இயற்கைக்கு எதிராக மனிதர்கள் நடத்தும் ஒரு மோசமான யுத்தம் எனவே கூறலாம். ஆறுகள் உற்பத்தியாகும் மலைப் பிரதேசங்கள் ஊழல் அரசியல்வாதிகளால் காபி, தேயிலை எனப் பணப்பயிர்கள் நிறைந்த எஸ்டேட்டுகளாக வளைக்கப்பட்டு அங்கிருந்த அடர் மரங்கள் நிறைந்த வன வளம் முற்றிலும் சூறையாடப்பட்டதின் விளைவுதான் இன்று ஆறுகள் போதிய மழையின்றி வற்றிப் போகும் நிலைக்கு அதி முக