இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுமைப் பெண்களடா

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா என்று பெண்மையைப் போற்றிய பாரதி "நாடும் தாயும்" போற்றுதலுக்கு உரியவர்கள் எனத் தம் கவிகளால் முழங்கியவர். பாரதி கண்ட "புதுமைப் பெண்கள் என நம் பாரத தேசத்திலும் தமிழகத்திலும் ஏராளமான புதுமைப் பெண்கள் வலம் வந்தாலும்,  நம் நாட்டில் இன்னும் பெண்ணடிமை, பெண்களைக் கேலிப் பொருளாக்குதல், வன்கொடுமை, பெண்களை மூடத்தன்மையில் புகுத்திவைத்து சாமியார்கள் கூட்டம் காசு பார்ப்பது,  தொலைக்காட்சிகளில் சோதிடர்கள் அபத்தமாக பேசிப் பெண்களின் பொன்னான நேரத்தை வீணடிப்பது என ஏராளமான பழமையான பிற்போக்குத்தனங்கள் இன்னும் குறையவே இல்லை என்பதுதாம் வேதனைக்குரியது.  வரதட்சணைக் கொடுமைகள், பெண்களைத் துயரத்தில் ஆழ்த்தி வைக்கும் மதுபோதைக் கலாச்சாரம்,  நகையும், பணமுமே வாழ்க்கை என்ற தவறான கண்ணோட்டத்தில் கடவுள்களை அலங்கரித்து வழி நடத்தப்படுதல்,  பெண் சிசுக் கொலைகள், பெண்களுக்கு இன்றுவரை சரிக்குச் சமமான இட ஒதுக்கீடு இன்மை, என ஏராளமான அடக்குமுறைகளைப்  பெண்கள் சமுதாயம் இன்றுவரை சந்தித்து வந்துள்ளது என்பதை விடச் சகித்து வந்துள்ளது எனவே கருதலாம். எ

புதிய துறைகள்!

ஆறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள், கால்வாய்கள், கண்மாய்கள், ஊருணிகள், அனைத்தையும் பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும்,  கனிம வளங்கள், மணல், தாது மணல், என தமிழகத்திலுள்ள அனைத்து இயற்கை வளங்களும் சூறையாடப்படுவதைத் தடுக்கவும், விளை நிலங்கள், அரசின் புறம் போக்கு நிலங்கள், வனப் பகுதிகள், போன்றவை அரசியல் இயக்கங்களால் வளைக்கப்படுவதை தடுக்கவும், அரசு நிலங்களும், மக்களிடமிருந்து அரசின் திட்டங்களுக்கெனக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் இனி தனியாருக்கு விற்கப்படுவதைத் தவிர்க்கவும், தனியாரிடமுள்ள அரசு நிலங்கள் மீட்கப்படவும், சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கவும், சுற்றுச்சூழலுக்கு எதிரானவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட தனிமனிதப் பங்கினை மேம்படுத்தவும், இது போன்ற ஏராளமான நல்வழித் திட்டங்களுக்கென புதிதாகத் துறைகள் ஏற்படுத்தப்படும்.  இந்தத் துறைகளில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் என எவருமே அங்கம் வகிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  முழுக்க முழுக்க அந்தந்தப் பகுதி மக்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் , வெளிப்படையான நிர்வாகத்துடன், மக்களுக

இனி ஒரு விதி செய்வோம். இது சுயேட்சைகளின் வெற்றிக் கொண்டாட்ட காலம்.

இந்த சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் ஊழல் இயக்கங்களுக்கு எதிராக, இதுவரை அவர்களிடம் ஒட்டிக்கொண்டிருந்துவிட்டு இப்பொழுது நல்லவர்களாகத் தங்களை அறிவித்துக் கொள்ளும் பச்சோந்தி குண அரசியல்வாதிகளுக்கு எதிராக வாக்களிக்க உள்ளவரா?  தேர்தல் நேரத்தில் முளைக்கும் காளான் இயக்கங்களின் பசப்புரைகள் நம்பி உங்கள் வாக்கை இவர்களுக்கும் அளித்து வீணாக்கிவிடாதீர்கள்.  மக்களின் பலவீன மனநிலையைத் தங்களுக்குச் சாதகமாக மடை திருப்பி அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கும் புதிய அரசியல் வணிகக்கூட்டங்கள் இவை.  ஏனெனில் இவர்கள் தேர்தல் நேரத்தில் இப்பொழுது முளைத்த காளான்கள், தேர்தலுக்குப் பிறகு இவர்கள் காணாமலும் போகக்கூடும்.  தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள நோடோவிலும் வாக்களிக்காதீர்கள். நான்கூட முன்பு நோடோவில் வாக்களிக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் நோடோவுக்கு குறைவான வாக்குகளே முந்தைய தேர்தலில் விழுந்திருந்தன. எனவே நாம் நம்முடைய மனநிலையை மாற்றிக்கொள்வோம். உங்கள் தொகுதியில் நிற்கும் சுயேட்சைகள் உட்பட அனைத்து இயக்கங்களின் பிரதிநிதிகளின் பணபலம், அவர்களிடம் உள்ள குணநலன்கள், மக்களுக்கு இதுவரை அவர்கள் ஆற்றியுள்ள தொண்டுகள்,

குடிமைப் பொருட்கள் விநியோகம்!

நான் எனது 55ஆவது வயதில் தற்பொழுது செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டுச் சொந்தமாக வணிகம் செய்யலாம் என முடிவெடுத்து வேலையிலிருந்து விலகிவிட்டேன். வணிகம் துவக்குவதற்குத் தாமதமாவதால் தற்பொழுது வேலையின்றி இருக்கிறேன். இதுவரை எனது துணைவியார் குடிமைப் பொருட்கள் (அதாங்க ரேசன் பொருட்கள்) வாங்குவதற்காக விற்பனை அங்காடிக்குச்  சென்று வந்திருந்தார். வேலையின்றி இருப்பதால் குடிமைப் பொருட்கள் வாங்குவதற்காக அங்காடிக்கு நான் செல்லத் துவங்கினேன். மாதத்தின் முதல் நாள் துவங்கி அந்த வாரம் முழுவதும் அங்கு ஏராளமாக மக்கள் கூடியிருப்பர். குறிப்பாக அறுபது வயதைத் தாண்டிய முதிய  பெண்கள் அதிக எண்ணிக்கையிலும், வயதான ஆண்கள் குறைந்த எண்ணிக்கையிலும் வரிசையில் நிற்பர். வயதானவர்கள் என்பதால் பெரும்பாலானவர்கள் வயது மூப்பின் காரணமாக கடும் வெயிலில் வரிசையில் நிற்க இயலாமல் கடுமையான மன உலைச்சலுடன்தான் காணப்படுவர்.  இடையே காலை ஆறு மணிக்கே வந்ததாகவும், கடை திறக்காததால்  ஒன்பது மணிக்கு வீடு சென்று திரும்பி வந்தால் தன் இடத்தில் வேறு யாரோ நிற்கிறார்கள் என ஒரு 65 வயது பாட்டி அனைவரிடமும் சண்டையிட்டுக் கொண்டு கடை

கட்டுமான ஒப்பந்தங்கள் இனி நூறாண்டுகால உத்தரவாதத்துடன் மட்டுமே.

கட்டுமான ஒப்பந்தங்கள் இனி நூறாண்டுகால உத்தரவாதத்துடன் மட்டுமே. ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையிலும் உலகின் முதல் கிரானைட் கோயில் என்ற பெருமை பெரும் தஞ்சை பெரிய அரண்மனை ( இன்றைய பிரகதீசுவரர் கோயில் ) நூறாண்டுகள் கடந்த நிலையிலும் கம்பீரமாக நிற்கும் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் போன்று தமிழகமெங்கும் இன்றும் காலத்தை வென்ற நிலையில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஏராளமான வட்டாட்சியர் அற மன்றம், அணைகள், பாலங்கள், இதர வெள்ளையர் காலக் கட்டுமானங்கள். இவையெல்லாம் ஊழலில்லாக் கட்டுமானத்திற்கு இன்றும் வலுவான சாட்சியங்கள். தமிழக்தில் இனி எந்தக் கட்டுமானமாயினும், அதன் ஒப்பந்ததாரர் அந்தக் கட்டுமானத்திற்கு எத்தனை ஆண்டுகள் உத்தரவாதம் தருவார் என்ற உறுதிமொழியுடன்,  தற்பொழுதுள்ள விலைகுறைவு ஒப்பந்தப் புள்ளிகளுக்குப் பதில் நீடித்த ஆண்டுகள் உத்தரவாதமுள்ள, அதிகவிலை ஒப்பந்தப் பணிகள் மட்டுமே விலைப்பட்டியல் கோரப்படும். கொடுத்த உத்தரவாதத்திலும் தரத்திலும் தவறு இழைக்கும் ஒப்பந்ததாரர்கள் தமிழகத்தில் இனி எவ்விதக் கட்டுமானத் தொழிலும் செய்ய இயலாத வண்ணம் சட்டமும், அவர்தம் கட்டுமான ஒப்பந்தத் தொகையைச்

இங்கு யாரும் தோற்கவில்லை!

இளைஞன் ஒருவன் ஒரு ஸென் மதகுருவிடம் வந்து நான் எல்லாவித தீமைகளையும் செய்து விட்டேன். அதனால் தனக்கு வாழ்வே வெறுத்துவிட்டது. ஞானம் பெற இனி நான் என்ன செய்ய வேண்டும் என வினவினான். அந்த குரு உனக்கு வாழ்க்கையில் இன்னும் விடவே முடியாதது எதுவென்று கேட்டார்.  அதற்கு அவன் எனக்கு சதுரங்க விளையாட்டில்தான் தீவிர ஆர்வம் அதை மட்டுமே என்னால் இப்பொழுதும் விடமுடியாது என்றான். அப்படியானால் ஒரு உன்னுடன் சதுரங்கம் விளையாட இங்குள்ள எனது சீடர் ஒருவரை அழைக்கிறேன். நீ அவருடன் விளையாட வேண்டும். இந்த விளையாட்டில் நீ வென்றுவிட்டால் அவரது தலையை நான் வெட்டிவிடுவேன். அதே சமயம் அவர் வென்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டிவிடுவேன். இதுதான் விதி சம்மதமா என்றார். அந்த இளைஞனோ ஒரு போர்க்குணம் மிக்க சமுராயின் மகன். எனவே தனக்குள் இயல்பாக உள்ள போர்க்குணத்துடன் இந்த விளையாட்டிற்கு ஒப்புக் கொண்டான். அவனை எதிர்த்து விளையாட வந்த சீடரோ இந்தக் குருவிடம் சீடராகிப் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் பழகியவர். ஒளி பொருந்திய முகத்துடன் குருவின் நிபந்தனைக்கு மறுப்பேதும் சொல்லாமல் விளையாட ஒப்புக்கொண்டார். விளையாட்டு துவ

இன்றைய இளைஞர்கள் கட்டாயம் தட்டச்சு பழக வேண்டும்

வணிக உபயோகத்திற்கென முதன் முதலாக நான் 2003 ஆம் ஆண்டில் கணினி வாங்கியபோது எனக்கு அதனை எப்படி இயக்குவது என்பதுகூடத் தெரியாது. எனக்கு அப்பொழுது வயது 41. எனது 43 வயதில் வணிக வாழ்வில் நான் நட்டமுற்றதன் விளைவாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த வயதில் ஒரு கணக்காளராக வேலை செய்யக்கூடிய அளவில்தான் நான் இருந்தேன். பல ஆண்டுகள் வணிகத்தில் இருந்ததால் வரவு செலவு கணக்குகளை எழுதுவதில் ஓரளவிற்கு எனக்குப் பயிற்சி இருந்தது. கணினியில் டேலி பற்றிய அறிவும் ஓரளவு இருந்தது. எனவே நான் டேலியில் எனது கவனத்தை செழுத்தி அதில் ஓரளவு பயிற்சி பெற்றேன். அதை விட முக்கியமாக நான் கணினியின் கீ போர்டில் தட்டச்சு செய்வதை முறைப்படி கற்றுச் செய்ய வேண்டும் என விரும்பினேன். தட்டச்சு நிலையம் சென்று பயிலும் அளவிற்கு அப்பொழுது எனது நிதிநிலை கை கொடுக்காததால் நான் ஒரு தட்டச்சு பயிற்சி புத்தகத்தை எனக்கு மகள் முறையுடைய ஒருவரிடமிருந்து பெற்று அதில் வழி காட்டியபடி நானாகவே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து பழகத் துவங்கினேன். கிட்டத்தட்ட ஒரு மாதம் கடுமையான பயிற்சி மேற்கொண்டேன். அதனால் ஆங்கி

அன்னைத் தமிழால் என்னைச் செதுக்கியவர்கள்

உயர்நிலைப்பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கத் துவங்கியபோது எனது உறவினரும் தமிழாசிரியருமான சித்தையா அவர்கள் எனது வகுப்பாசிரியராக இருந்தார். பத்து வயதில் முதன் முதலாக விபரம் புரிந்து அவரிடம் தமிழ் கற்க நேர்ந்தது. அதன் பின்னர் ஏழாம் வகுப்பு துவங்கி பள்ளி இறுதி வரை அடுத்தடுத்த வகுப்புகளில் தமிழாசிரியர்களாகச் சிலர் இருந்தாலும் பெரும்பாலும் எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் ஆபெ என பள்ளி வளாகம் முழுவதும் ஆசிரியப் பெருமக்களால் அழைக்கப்பட்ட மதிப்பிற்குரிய திரு ஆ.பெரியசாமி அவர்கள். தமிழில் நான் இன்று இலக்கண சுத்தமாக எழுதுகிறேனா என்பது எனக்கே தெரியாது. மேலும் எல்லோரைப் போலவும் இப்பொழுதும் எனது எழுத்துக்களில் அவ்வப்போது எழுத்துப் பிழை என்னை அறியாமலேயே வெளிப்பட்டுவிடுகிறது. இதற்கு நான் எனது படைப்பை மீண்டும் படித்துத் திருத்தாமல் அவசரமாக வெளியிட்டுவிடுவதுதாம். எனினும் என்னை தமிழில் எழுதுவதற்கு ஒரு உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திரு ஆபெ என்பதில் இன்றளவும் எனக்குள் சந்தேகம் இல்லை. திரு ஆபெ அவர்கள் மிகுந்த பகுத்தறிவுச் சிந்தனைகள் நிறைந்தவர் தந்தை பெரியாரின் வழியில் நடந்தவர். சேலம் ம

கண்ணாடிச் சட்டம் போட்டுக் கதறித் துடிக்கவா படித்துப் பட்டம் வாங்க கல்விக்கூடம் அனுப்பினோம்?

சமீபகாலமாக ஊடகங்களில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி பயின்ற இளம் பெண்களின் தற்கொலைச் செய்திகள் வரத்துவங்கி இருப்பது தமிழகம் எங்கே போகிறது என்ற கேள்வியை எழுப்பத் துவங்கியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட பெண்களின் செய்தியைக் காணும்போதெல்லாம் தங்கள் உறவில் ஒருவரை இழந்துவிட்டது போன்ற வேதனை அலைகள் ஒவ்வொரு நல்ல உள்ளத்திலும் எழாதிருக்காது.  பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் தரமிக்க கல்வி கிடைக்கும் இடங்கள் எங்கிருந்தாலும் கடன்பட்டாவது தங்களின் பிள்ளைகளை விடுதியில் தங்கிப் படிக்க வைத்துவிட்டுக் குறிப்பாகப் பெண் குழந்தைகளை அனுப்பிவைக்கும் பெற்றோர்களின் தூக்கமில்லா இரவுகளை ஒரு கட்டத்தில் எங்கள் ஒரே மகளை சென்னையில் கிடைத்த வேலைக்காக விடுதியில் தங்கி வேலை செய்ய சில மாதங்கள் அனுப்பி  நாங்களே அனுபவித்துள்ளோம். படிக்காத மேதையின் ஆட்சிக்காலத்தில் கல்விக்கூடங்களில் ஆரம்பக் கல்வியும், உயர் கல்வியும்  பெற தமிழகமெங்கும் பட்டிதொட்டியெங்கும் ஏராளமாகக் கல்விக்கூடங்கள் திறந்திருந்தார்.  அந்த மேதைக்கு நீண்ட ஆயுளை இயற்கை வழங்கியிருந்தால் ஒவ்வொரு வட்டத்திலும் இன்று தரமான பல்கலைக் கல்விக்கூடங்களை ஏராளம்

உன்னை நான் சந்தித்தேன்! நீ ஆயிரத்தில் ஒருவன்!

ஐந்து வயதில் முதன் முதலாக நான் துவக்கப்பள்ளியில் சேர்ந்து எழுது பலகையை எனது வலது கையில்  பிடித்துக்கொண்டு இடது கையில் எழுதுகுச்சியால் எழுதத் துவங்கினேன். இதைக்கண்ணுற்ற எனது வகுப்பாசிரியை திருமதி புஸ்பா அவர்கள் எனது இடது கையில் தனது கரத்தில் இருந்த பிரம்பால் சில அடிகள் வைத்து என்னை வலது கையால் எழுதும்படி பயிற்றுவித்தார். அன்றைக்கிருந்த ஆசிரியர்களின் மனநிலையயும் மக்களிடம் நிலவிய மூடத்தனமான தவறான எண்ணங்களும் இடது கையால் எழுதுவது தவறெனப் பட்டதின் விளைவு நான் எனது எழுதும் பழக்கத்துடன் எனது தலையெழுத்தையும் அவர்கள் மாற்றி எழுதத் துவங்கிவிட்டதாகத்தான் கருதி வந்தேன். அது தவறு. என்னை வழி நடத்தும் மகா சக்தியின் வில் பொதுவாக இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் உலகத்தில் சுமார் ஆயிரத்தில் ஒருவராகத்தான் பிறக்கின்றனர். வலது கைப்பழக்கம் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் அமைப்பு எங்களைப்போன்ற இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இடம்மாறி இருப்பதால் எங்களின் அனைத்துப் பழக்க வழக்கங்களும் வலதுகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு நேரெதிராகத்தான் இருக்கும். எந்தப் பொருளை எடுப்பதாக இருந்தாலும், மிதிவண்டி ம