இடுகைகள்

மார்ச், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுமைப் பெண்களடா

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா என்று பெண்மையைப் போற்றிய பாரதி "நாடும் தாயும்" போற்றுதலுக்கு உரியவர்கள் எனத் தம் கவிகளால் முழங்கியவர். பாரதி கண்ட "புதுமைப் பெண்கள் என நம் பாரத தேசத்திலும் தமிழகத்திலும் ஏராளமான புதுமைப் பெண்கள் வலம் வந்தாலும்,  நம் நாட்டில் இன்னும் பெண்ணடிமை, பெண்களைக் கேலிப் பொருளாக்குதல், வன்கொடுமை, பெண்களை மூடத்தன்மையில் புகுத்திவைத்து சாமியார்கள் கூட்டம் காசு பார்ப்பது,  தொலைக்காட்சிகளில் சோதிடர்கள் அபத்தமாக பேசிப் பெண்களின் பொன்னான நேரத்தை வீணடிப்பது என ஏராளமான பழமையான பிற்போக்குத்தனங்கள் இன்னும் குறையவே இல்லை என்பதுதாம் வேதனைக்குரியது.  வரதட்சணைக் கொடுமைகள், பெண்களைத் துயரத்தில் ஆழ்த்தி வைக்கும் மதுபோதைக் கலாச்சாரம்,  நகையும், பணமுமே வாழ்க்கை என்ற தவறான கண்ணோட்டத்தில் கடவுள்களை அலங்கரித்து வழி நடத்தப்படுதல்,  பெண் சிசுக் கொலைகள், பெண்களுக்கு இன்றுவரை சரிக்குச் சமமான இட ஒதுக்கீடு இன்மை, என ஏராளமான அடக்குமுறைகளைப்  பெண்கள் சமுதாயம் இன்றுவரை சந்தித்து வந்துள்ளது என்பதை விடச் சகித்து வந்துள்ளது எனவே கருதலாம். எ

புதிய துறைகள்!

ஆறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள், கால்வாய்கள், கண்மாய்கள், ஊருணிகள், அனைத்தையும் பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும்,  கனிம வளங்கள், மணல், தாது மணல், என தமிழகத்திலுள்ள அனைத்து இயற்கை வளங்களும் சூறையாடப்படுவதைத் தடுக்கவும், விளை நிலங்கள், அரசின் புறம் போக்கு நிலங்கள், வனப் பகுதிகள், போன்றவை அரசியல் இயக்கங்களால் வளைக்கப்படுவதை தடுக்கவும், அரசு நிலங்களும், மக்களிடமிருந்து அரசின் திட்டங்களுக்கெனக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் இனி தனியாருக்கு விற்கப்படுவதைத் தவிர்க்கவும், தனியாரிடமுள்ள அரசு நிலங்கள் மீட்கப்படவும், சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கவும், சுற்றுச்சூழலுக்கு எதிரானவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட தனிமனிதப் பங்கினை மேம்படுத்தவும், இது போன்ற ஏராளமான நல்வழித் திட்டங்களுக்கென புதிதாகத் துறைகள் ஏற்படுத்தப்படும்.  இந்தத் துறைகளில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் என எவருமே அங்கம் வகிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  முழுக்க முழுக்க அந்தந்தப் பகுதி மக்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் , வெளிப்படையான நிர்வாகத்துடன், மக்களுக

இனி ஒரு விதி செய்வோம். இது சுயேட்சைகளின் வெற்றிக் கொண்டாட்ட காலம்.

இந்த சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் ஊழல் இயக்கங்களுக்கு எதிராக, இதுவரை அவர்களிடம் ஒட்டிக்கொண்டிருந்துவிட்டு இப்பொழுது நல்லவர்களாகத் தங்களை அறிவித்துக் கொள்ளும் பச்சோந்தி குண அரசியல்வாதிகளுக்கு எதிராக வாக்களிக்க உள்ளவரா?  தேர்தல் நேரத்தில் முளைக்கும் காளான் இயக்கங்களின் பசப்புரைகள் நம்பி உங்கள் வாக்கை இவர்களுக்கும் அளித்து வீணாக்கிவிடாதீர்கள்.  மக்களின் பலவீன மனநிலையைத் தங்களுக்குச் சாதகமாக மடை திருப்பி அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கும் புதிய அரசியல் வணிகக்கூட்டங்கள் இவை.  ஏனெனில் இவர்கள் தேர்தல் நேரத்தில் இப்பொழுது முளைத்த காளான்கள், தேர்தலுக்குப் பிறகு இவர்கள் காணாமலும் போகக்கூடும்.  தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள நோடோவிலும் வாக்களிக்காதீர்கள். நான்கூட முன்பு நோடோவில் வாக்களிக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் நோடோவுக்கு குறைவான வாக்குகளே முந்தைய தேர்தலில் விழுந்திருந்தன. எனவே நாம் நம்முடைய மனநிலையை மாற்றிக்கொள்வோம். உங்கள் தொகுதியில் நிற்கும் சுயேட்சைகள் உட்பட அனைத்து இயக்கங்களின் பிரதிநிதிகளின் பணபலம், அவர்களிடம் உள்ள குணநலன்கள், மக்களுக்கு இதுவரை அவர்கள் ஆற்றியுள்ள தொண்டுகள்,

குடிமைப் பொருட்கள் விநியோகம்!

நான் எனது 55ஆவது வயதில் தற்பொழுது செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டுச் சொந்தமாக வணிகம் செய்யலாம் என முடிவெடுத்து வேலையிலிருந்து விலகிவிட்டேன். வணிகம் துவக்குவதற்குத் தாமதமாவதால் தற்பொழுது வேலையின்றி இருக்கிறேன். இதுவரை எனது துணைவியார் குடிமைப் பொருட்கள் (அதாங்க ரேசன் பொருட்கள்) வாங்குவதற்காக விற்பனை அங்காடிக்குச்  சென்று வந்திருந்தார். வேலையின்றி இருப்பதால் குடிமைப் பொருட்கள் வாங்குவதற்காக அங்காடிக்கு நான் செல்லத் துவங்கினேன். மாதத்தின் முதல் நாள் துவங்கி அந்த வாரம் முழுவதும் அங்கு ஏராளமாக மக்கள் கூடியிருப்பர். குறிப்பாக அறுபது வயதைத் தாண்டிய முதிய  பெண்கள் அதிக எண்ணிக்கையிலும், வயதான ஆண்கள் குறைந்த எண்ணிக்கையிலும் வரிசையில் நிற்பர். வயதானவர்கள் என்பதால் பெரும்பாலானவர்கள் வயது மூப்பின் காரணமாக கடும் வெயிலில் வரிசையில் நிற்க இயலாமல் கடுமையான மன உலைச்சலுடன்தான் காணப்படுவர்.  இடையே காலை ஆறு மணிக்கே வந்ததாகவும், கடை திறக்காததால்  ஒன்பது மணிக்கு வீடு சென்று திரும்பி வந்தால் தன் இடத்தில் வேறு யாரோ நிற்கிறார்கள் என ஒரு 65 வயது பாட்டி அனைவரிடமும் சண்டையிட்டுக் கொண்டு கடை

கட்டுமான ஒப்பந்தங்கள் இனி நூறாண்டுகால உத்தரவாதத்துடன் மட்டுமே.

கட்டுமான ஒப்பந்தங்கள் இனி நூறாண்டுகால உத்தரவாதத்துடன் மட்டுமே. ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையிலும் உலகின் முதல் கிரானைட் கோயில் என்ற பெருமை பெரும் தஞ்சை பெரிய அரண்மனை ( இன்றைய பிரகதீசுவரர் கோயில் ) நூறாண்டுகள் கடந்த நிலையிலும் கம்பீரமாக நிற்கும் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் போன்று தமிழகமெங்கும் இன்றும் காலத்தை வென்ற நிலையில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஏராளமான வட்டாட்சியர் அற மன்றம், அணைகள், பாலங்கள், இதர வெள்ளையர் காலக் கட்டுமானங்கள். இவையெல்லாம் ஊழலில்லாக் கட்டுமானத்திற்கு இன்றும் வலுவான சாட்சியங்கள். தமிழக்தில் இனி எந்தக் கட்டுமானமாயினும், அதன் ஒப்பந்ததாரர் அந்தக் கட்டுமானத்திற்கு எத்தனை ஆண்டுகள் உத்தரவாதம் தருவார் என்ற உறுதிமொழியுடன்,  தற்பொழுதுள்ள விலைகுறைவு ஒப்பந்தப் புள்ளிகளுக்குப் பதில் நீடித்த ஆண்டுகள் உத்தரவாதமுள்ள, அதிகவிலை ஒப்பந்தப் பணிகள் மட்டுமே விலைப்பட்டியல் கோரப்படும். கொடுத்த உத்தரவாதத்திலும் தரத்திலும் தவறு இழைக்கும் ஒப்பந்ததாரர்கள் தமிழகத்தில் இனி எவ்விதக் கட்டுமானத் தொழிலும் செய்ய இயலாத வண்ணம் சட்டமும், அவர்தம் கட்டுமான ஒப்பந்தத் தொகையைச்