இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாக்காளர்களாகிய நீங்கள் இனி என்ன செய்யப் போகிறீர்கள்?

நாம் உபயோகப்படுத்துகின்ற செருப்பு (இனி காலணி என்றே பதிவு தொடரும்) அறுந்துவிட்டதெனில் அதனை நன்கு செப்பனிடுபவரிடம் கொடுத்துச் சரி செய்து கொள்வோம். அதுவே தேய்ந்து நைந்து பழுதான நிலையில் அசிங்கமாகக் காட்சியளித்தால் உடனடியாக அல்லது நம்மிடம் பணம் உள்ள போதாவது மாற்றிவிட முயற்சி செய்வோம். அதை விடுத்து இது இராசியான காலணி எனவோ அல்லது இதை விட்டுப் பிரிய முடியவில்லை எனவோ முரட்டுப் பிடிவாதம் கொண்டு கல்லிலும் முள்ளிலும் பயணப்பட்டால் காயம்படப் போவது நம் பாதங்கள்தானே தவிரக் காலணியல்ல. இதைப் போல நம்முடைய அரசாங்கம் பழுதுபட்டால் நாம் அதைச் செப்பனிடத் தகுதியானவர்களைத் தேடுகிறோமா என்று நான் அல்ல அய்யா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சாக்ரடீசு என்ற மேதை கேள்வி எழுப்பியுள்ளார். நாமோ தேய்ந்து கிழிந்துபோன காலணிகளைப் போன்ற அரசியல் இயக்கங்களைத்தாம் இன்றும் காலில் போட்டு அல்ல நம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தலை கால் புரியாமல் ஆடுகிறோம். கரடு முரடாக கல்லும் முள்ளுமாக இருந்தாலும் அவர்களின் போடாத சாலையிலும் போட்ட சாலையிலும் சகித்துக் கொண்டு பயணப்படப் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டோம். காலணி எனது அண்ணனுட

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே!

எனது மகளின் திருமணம் இனிதாக முடிந்த அந்த நன்னாளில் சேலத்திலிருந்து ஈரோட்டிற்கு இல்லம் திரும்பிக் கொண்டிருந்தோம். வழியில் காணப்பட்ட வங்கி ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பது கண்டு சற்று வியந்தவாரே எங்கள் பயணம் தொடர்ந்தது. சங்ககிரியைக் கடப்பதற்கு முன்பு எங்களின் செல்பேசிகளில் இன்றுவரை நாட்டையே அலங்கோலமாக்கிவிட்ட ஒட்டுமொத்த தமிழக மக்கள் மட்டுமல்ல, வந்தாரை வாழ வைக்கும் நம் தாய்நாடாம் தமிழகத்தில் பிழைப்புத் தேடி வந்துள்ள கோடிக்கணக்கான வட இந்தியர்கள் வரை, இந்திய வரலாற்றிலேயே இன்றுவரை திட்டித் தீர்க்கப்படும் ஒரே பெருமைக்குரிய நம் பாரதப் பிரதமர் அவர்கள் சர்வாதியாக அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் அந்தத் துயரகரமான செய்தி. அன்று துவங்கியதுதாம். ஒரே நாளில் மக்கள் அனைவரும் பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டனர். கையில் வைத்திருந்த சொற்பமான சில ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் திருப்பிக் கொடுக்க ரேசன் கடைகளில் காத்திருப்பதை விடக் கேவலமாக கடும் வெயிலிலும், தன் அன்றாட வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு நடுத்தெருவில் கால்கடுக்க நின்றனர் நாட்டு மக்கள்.  ஒரே சேமிப்பான மண்பாண்ட உண்டி

ஐவர் மலை இரசியம்!!!

படம்