இடுகைகள்

அக்டோபர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வள்ளலார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என மனம் கசிந்துருகி கொல்லாமையை வலியுறுத்தி உயிர்களையும் பயிர்களையும் நேசிக்கக் கற்றுத்தந்து சாதி பேதம் மறுத்து சமரச சன்மார்க்க சங்கம் அமைத்து பிரபஞ்சத்தில் நிலை பெற்று வாழும் தவச்சித்தர் வள்ளலார் அவர்களின் பிறந்த தினம் இன்று. பக்தி மார்க்கத்தில் இருந்தபோது வள்ளலாரைப் புரிந்து கொள்ள இயலாது போனாலும்  சித்த மார்க்கத்தில் அறிவு தெளிந்து அசைவ உணவு தவிர்த்து ஓரளவேனும் அவர் வழியில் வாழ முற்பட்டாலும்  நம் தமிழக மக்கள் அனைவரும் வள்ளலார் அவர்களின் கருணை குணம் நினைந்து வாழ வேண்டும் என விரும்பி  வள்ளலார் வகுத்த சமரச சன்மார்க்க தத்துவம் உலகெங்கும் தழைக்க வேண்டும் என்ற விருப்பங்களுடன் அவர்தம்  நினைவினை ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாகப் போற்றுகிறோம்.

அறமே வெல்லும்!

வாய்மையே வெல்லும்! இது தேசத் தந்தை நம் மக்களுக்கு விட்டுச் சென்ற முழக்கம்! இதுவே நம் பாரத இலட்சினையில் சத்யமேவ ஜெயதே எனவும் தமிழகத்தின் இலட்சினையில் வாய்மையே வெல்லும் எனவும் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களாகும். இவை வெறும் வாசகங்கள் மட்டுமல்ல. இந்த வாசகங்கள் எழுதப்பட்டுள்ள வாகனங்கள் சுமந்து செல்லும் அரசு அலுவலர்கள் தங்களின் நெஞ்சில் இந்த வாசகங்களைச் சுமந்தால் இந்த நாட்டில் வாய்மை தழைக்கும்! ஊழல் ஒழியும்! தீமைகளின் இருள் தொலைந்து நன்மைகளின் விடியல் தோன்றும்! விடியலைக் காண இருளில் தவிக்கும் மக்களில் ஒருவனாக அகிம்சை ஆயுதம் கொண்டு கத்தியின்றி இரத்தமின்றிச் சுதந்திரம் வாங்கித் தந்த அண்ணல் மகாத்மாவிற்கு  எமது கோடி கோடி வணக்கங்கள்! இந்தப் பதிவின் தலைப்பை அறமே வெல்லும் என்று மாற்றியுள்ளேன். வாய்மை என்றால் பொய்மை என்ற எதிர்ப்பதம் அறம் என்றால் அறமின்மை என்ற எதிர்ப்பதம் வருகிறது. சத்தியம் _ அசத்தியம் தர்மம்_ அதர்மம் பகுத்தறிவீர் நண்பர்களே

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

நாங்கள் தற்பொழுது புதிதாகக் குடியிருக்கும் இல்லம் வீட்டு உரிமையாளர் இல்லத்துடன் முதல் தளத்தில் உள்ளது. இங்கு நாங்கள் குடியேறிய முதல் நாள் துவங்கியே வீட்டு உரிமையாளரின் ஒன்றரை வயதுச் சிறுமி எங்களைச் சொந்தம் கொண்டாடத் துவங்கிவிட்டாள்.  குறிப்பாக அவள் (ப்ரனிதா அவளது பெயர்) அப்புச்சி என முகம் நிறைந்த மகிழ்வுடன்தான் என்னைக் காணும்போதெல்லாம் அழைப்பாள்.  காலை எழுந்தது முதல் இரவு பத்து மணி வரை அவளின் பொழுது போக்கிடம் எங்கள் இல்லம்தாம்.  மழலைகளுக்கே உரிய குறும்புகள் ஏராளம் அவளுக்கும் உண்டு. அதன் பொருட்டு அவள் செய்யும் குறும்புகள் எல்லை மீறும் போது எனது மகள் கோபப்படுவது போல சற்று மிரட்டுவார்.  உடனே அவள் முகம் வாட்டமடைந்து எங்கள் இல்லத்திலிருந்து அவளது வீட்டிற்குச் சென்று அவளது தாய் தந்தையர் மற்றும் பாட்டியிடம் மழலையில் முறையிடுவாள்.  அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியாவிட்டாலும் அவளை அவர்கள் சமாதானப்படுத்துவர். கோபித்துச் சென்ற ஒரு நிமிடத்தில் மீண்டும் அவள் எங்கள் இல்லத்துக் கதவோரம் அத்தா என (என் மகளை அவள் அவ்வாறுதான் அழைப்பாள்) முகம் நிறைந்த சிரிப்பு...