இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாக்காளர்களாகிய நீங்கள் இனி என்ன செய்யப் போகிறீர்கள்?

நாம் உபயோகப்படுத்துகின்ற செருப்பு (இனி காலணி என்றே பதிவு தொடரும்) அறுந்துவிட்டதெனில் அதனை நன்கு செப்பனிடுபவரிடம் கொடுத்துச் சரி செய்து கொள்வோம். அதுவே தேய்ந்து நைந்து பழுதான நிலையில் அசிங்கமாகக் காட்சியளித்தால் உடனடியாக அல்லது நம்மிடம் பணம் உள்ள போதாவது மாற்றிவிட முயற்சி செய்வோம். அதை விடுத்து இது இராசியான காலணி எனவோ அல்லது இதை விட்டுப் பிரிய முடியவில்லை எனவோ முரட்டுப் பிடிவாதம் கொண்டு கல்லிலும் முள்ளிலும் பயணப்பட்டால் காயம்படப் போவது நம் பாதங்கள்தானே தவிரக் காலணியல்ல. இதைப் போல நம்முடைய அரசாங்கம் பழுதுபட்டால் நாம் அதைச் செப்பனிடத் தகுதியானவர்களைத் தேடுகிறோமா என்று நான் அல்ல அய்யா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சாக்ரடீசு என்ற மேதை கேள்வி எழுப்பியுள்ளார். நாமோ தேய்ந்து கிழிந்துபோன காலணிகளைப் போன்ற அரசியல் இயக்கங்களைத்தாம் இன்றும் காலில் போட்டு அல்ல நம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தலை கால் புரியாமல் ஆடுகிறோம். கரடு முரடாக கல்லும் முள்ளுமாக இருந்தாலும் அவர்களின் போடாத சாலையிலும் போட்ட சாலையிலும் சகித்துக் கொண்டு பயணப்படப் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டோம். காலணி எனது அண்ணனுட