எது சிறந்த நிர்வாகம்?
பொதுவாக புதிதாக ஒரு இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றால் அவர்கள் பொறுப்பேற்கும் முன்னரே பழைய ஆட்சியாளர்களை மறந்துவிட்டு இவர்களை வரவேற்க மலர்க்கொத்துக்களுடன் உயர் அரசு அலுவலர்கள் படையெடுக்கத் துவங்கிவிடுவர். இந்தப் படையெடுப்புகள் அநேகமாக தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தவும் தங்களின் தவறுகளை புதியவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகத்தான். இதில் பழைய ஆட்சியாளர்களின்; விசுவாசிகள்தான் எங்கே தங்களை இடமாற்றம் செய்து அலைக்கழிப்பார்களோ என்ற பயத்தில் அதிகப்படியான பணிவை புதியவர்களிடம் காட்டுவர். புதிய ஆட்சியாளர்களின் விசுவாசிகள் காட்டும் பணிவோ பழைய நிர்வாகத்தினரால் தங்களுக்குப் புறக்கணிக்கப்பட்ட சலுகைகள் இட மாற்றங்கள் பதவி உயர்வுகள் போன்றவற்றை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமேதாம். இலஞ்சம் பெறாது நெஞ்சம் நிமிர்ந்தவர்கள் மட்டுமே இங்கு விதிவிலக்கானவர்கள். இவையெல்லாம் உயர் அலுவலர்களுக்கு மட்டும்தாம் பொருந்தும். சாதாரண அரசுப்பணியாளர்கள் ஆட்சியாளர்களை எங்கே இன்றுள்ள சூழலில் அருகே சென்று சந்திக்க இயலும்? எனினும் மக்கள் எதிர்பார்க்கும் ஒரு புதிய நிர்வாகம் இனி ஆட்சி...