கங்க்ராஜ்லேசன் காக்காப் பாள்யம் போலீஸ் ஸ்டேசன் VS கமலா அக்கா
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அறிமுகமானவர் கமலா அக்கா. எனது இரண்டு சகோதரிகள் மற்றும் தம்பி உட்பட நானும் அவர்களை அக்கா என்றே அழைப்பதுண்டு. எனது தாய்வழித் தாத்தா அமரர் கந்தசாமி அவர்களின் கடை அருகில் உள்ள கட்டிடத்தில் வாடகைக்குத் தனது தொழிலைச் செய்து வந்தவர் கமலா அக்காவின் கணவர். அவரது பெயரும் கந்தசாமிதாம். எப்பொழுது பார்க்க நேர்ந்தாலும் பளிச்சென்று சிரித்து புன்னகை பூக்கும் முகத்துக்குச் சொந்தக்காரர் கமலா அக்கா. எனது மூத்த சகோதரியின் வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்குக் குடியிருந்ததால் எங்கள் குடும்பம் அங்கு செல்லும்போதெல்லாம் எனது பெற்றோரை வாங்க சம்பந்தி என அன்போடு அழைத்துச் சாப்பிட்டுப் போக வேண்டும் என வற்புறுத்துவர் கணவன் மனைவி இருவரும். ஒரு சில நாட்களில் அவர்கள் தேநீர் அருந்தும் வேளையில் அவர்கள் வீட்டைக் கடக்க முற்பட்டால் தேநீர் அருந்த அழைத்துத் தட்டாமல் சில நாட்கள் நாங்கள் தேநீர் அருந்தியதும் உண்டு. அவர்களின் மூத்த பெண் வயதுக்கு வந்தபோது அவர்கள் வீட்டில் விருந்து சாப்பிட்டதுகூட இன்றும் என் நினைவில் ஆடும் நிகழ்வுகளில் ஒன்று. அவர்களின் மூத்த மகன் குமாருக்கு என்னை விட ஒரு வயதே அதிகம்....