இதயத்தை விலையாய் கொடுத்துவிட்டு அன்பினை வாங்கப் பிறந்து விட்டேன்
செல்வம் சேர்த்தல் என்பது என் இலக்காக இருந்தே இல்லை. பணம் உள்ளவர்களிடம் இருக்கும் அகந்தை குணாதிசயங்கள் என்னிடம் வளர நான் அனுமதித்தது கிடையாது. இளம் வயதில் வறுமை நிலையினை அங்குலம் அங்குலமாக அனுபவித்தவன் நான். சொந்த ஊரை விட்டு நாடோடியாகிப் பல ஆண்டுகள் கடந்தும் 100 கல் தொலைவில் இருந்தும் உறவுகளைப் பிரிந்த தவிப்பும் அன்பும் அவர்கள் உதாசீனம் காட்டியபோதும் மாறவே இல்லை. சிறு கோபம் வந்தாலும் அவர்கள் குணம் அப்படியே இருக்கட்டும். நாம் நமக்குள் எழும் கோப எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சமாதானம் ஆவேன். ஏராளமாகப் பணம் புரளும் வணிகம் செய்தபோதும் எனக்கெனச் செலவிட்ட தொகை மாதம் நூறு ரூபாய்களை தாண்டியதில்லை. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி என்ற தமிழன்னையின் பாடல் வரிகளுக்கேற்ப இன்று வரை வாழ்ந்து வருபவன். நான் எவருக்கும் போட்டியாகவும் ஓடவில்லை. எவர் வாழ்வையும் பொறாமையாகப் பார்த்ததும் இல்லை. எவர் வாழ்வையும் கெடுத்ததும் இல்லை. வணிகத்தில் பட்ட கடனை அடைக்க என் வாழ் நாள் முடிவதற்குள் என்னை வழி நடத்தும் மகா சக்தி ஆற்றல் தரும் என்ற நம்பிக்கையை நெஞ்சில...