வரிப்பணம்!
ஆட்டோக்காரர் செழுத்தும் வரிப்பணம்! நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நமது மத்திய மாநில அரசுகள் தங்களின் திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கும் வரி எப்படி இந்த அரசுகளுக்குச் சென்றடைகின்றன என்ற விபரம் கூடத் தெரியாதவர்களாகவே விளங்;கி வருகிறோம்! இதனை முறையாக அறிந்து கொள்ளும் ஆற்றலுக்கு பெரிய அளவிலான கல்வி அறிவு கூட மக்களுக்கு தேவையில்லை! இந்த அரசுகளுக்கு வரி வருவாய் எப்படி வந்தால் எங்களுக்கென்ன? அதனைத் தெரிந்து கொண்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்ற பதில் நம்மிருந்து வருகின்றது என்றால் நாம் நமது தற்போதைய துயர வாழ்க்கையைக் களைவதற்கும் நமது சந்ததியின் எதிர்காலத்தை உயர்த்துவதற்கும் முன் வராதவர் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்! சரி அதைப் பற்றி நாங்கள் தெரிந்து கொண்டால் நமக்கு என்ன பயன் என்று நாம் கேட்க ஆரம்பித்தாலே நமக்குள் வரிப்பணம் பற்றிய விழிப்புணர்வு தோன்றி விட்டது நமது தேர்தல் நேரத்து வாக்கு வங்கி வீணாவது தடுக்கப்படுகிறது என்றுதான் அர்த்தம்! இதன் விழைவால் ஊழல் அரசியல்வாதிகள் நம் தமிழகத்தில் உருவாவது தடுக்கப்பட்டு ஒரு ஊழலற்ற புதிய அமைப்பு உருவாவதற்கு ந...