தமிழ்த் தாய் வாழ்த்து
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்!
தமிழ்த்தாயின் மலரடி வணங்கிடுவோம்!
பள்ளிகள் அருகமைந்த எங்களது வணிக நிறுவனத்தில் ஒரு முறை ஒரு ஆய்வு செய்தோம்!
கடைக்கு வந்த மாணவச் செல்வங்களிடம் நம் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார்? என கேட்டோம்!
நூற்றுக்கு தொன்னூற்றைந்து பேரிடமிருந்து தவறான பதில்களும் ஐந்து பேரிடமிருந்து மட்டும் சரியான பதில்களும் வந்தன!
அடுத்த முறை இதே மாணவச் செல்வங்களிடமிருந்து அடுத்த கேள்வியை கேட்டோம்!
உங்கள் சாதிப் பெயர் என்ன? தொன்னூற்றைம்பது சதம் பேர்கள் தத்தம் சாதிகளின் பெயர்களை உடனடியாகக் கூறினர்!
ஐந்து சதவீதத்தினர் மட்டும் தங்களின் சாதிப் பெயர்களைத் தெரிவிக்க மறுத்தனர்! காரணம் கேட்டபோது தங்களின் சாதி பற்றித் தாங்களுக்குத் தெரியும் ஆனாலும் நாங்கள் அதைப்பற்றிக் கூற விரும்ப மாட்டோம் என பதிலுரைத்தனர்!
பல ஆண்டுகள் தமிழ்ப்பாடப் புத்தகத்தை சுமக்கும் நம் மாணவச் செல்வங்களுக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் யார் எனத் தெரியாமல் போனதற்கு அதி முக்கிய காரணமே நம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இன்றுவரை பெரும்பாலான பள்ளிகளில் காலை நேரச் சந்திப்பின்போது பாடப்படாத காரணத்தால்தான்!
அதே போன்று தங்களின் சாதி என்னவென்று மிகச்சரியாக மாணவ செல்வங்கள் சொல்வதற்குக் காரணம் நம் அரசு நிர்வாகம் சாதிச் சான்றிதழ் கேட்டு நம் மாணவ செல்வங்களிடம் இன்றும் பிரிவினை விதை விதைப்பதால்தான்!
இனி வரும் காலங்களிலாவது தமிழ்வழி ஆங்கில வழி கல்விக்கூடங்கள் என்ற பாகுபாடு மறைய வேண்டும்! அனைத்து கல்வித்தலங்களிலும் நம் தமிழ்த்தாய் வாழ்த்து தங்களால் தமது அன்றாட காலைச் சந்திப்பின்போது பாடப்பட வேண்டுமென நம் மாணவ சமுதாயம் உறுதி கொள்ள வேண்டுமென்பதே எனது சிரம் தாழ்ந்த வேண்டுகோள்!
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்!
தமிழ்த்தாயின் மலரடி வணங்கிடுவோம்!
கருத்துகள்
கருத்துரையிடுக