அயோத்திப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு!
அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில்தான் மத்தியில் தற்பொழுது ஆட்சிக்கு வந்துள்ளது திரு மோடி அரசு! அயோத்தியில் மீண்டும் பாபர் மசூதியும், புதிதாக இராமர் கோவிலும் அருகருகே கட்டப்படும் சுமுகமான நிலை உருவாகிறது என வைத்துக்கொள்வோம்! இந்துக்களுக்கு ஆண்டு முழுவதும் ஏதேனுமொரு காரணத்திற்காகத் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்! இசுலாமிர்களுக்கும் இந்த அளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவிற்கு வழிபாடுகள் மாதந்தோறும் நடைபெறும். அது மட்டுமன்றி அவர்களின் தினசரி வழிபாட்டு வழக்கமாக ஐந்து வேளைகள் தொழுவதற்காக பாபர் மசூதிக்கு வருவர்! இப்வாறான நிலையில் இரு வழிபாட்டுத் தலங்களும் அருகருகே அமைக்கப்பட்டால் இரு தரப்பாரில் தீவிர மதப் பற்றுள்ள எவரேனும் ஏதேனுமொரு அற்ப காரணத்திற்காகக் கலகத்தை ஏற்படுத்த முயலுவார்! இது பெரிய அளவில் பரவி நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் உருவாவதுடன், வருடம் முழுக்க அயோத்தி மீண்டும் மீண்டும் கலவர பூமியாகத்தான் மதவாத சக்திகள் உள்ளவரை இரத்தச் சகதியில் குளித்து நிலைத்திருக்கும். இதனால் முழுமையாகப் பாதிக்கப்படப்போகும் பரி...