தமிழகத்தின் இப்போதய தேவை! சர்வாதிகாரமற்ற அரசியல் இயக்கங்கள்!


வல்லரசு நாடாக உலகெங்கும் கருதப்படும் அமெரிக்காவில்

ஆளும் கட்சி எதிர்க்கட்சி என இரு அரசியல் இயக்கங்கள் மட்டுமே உள்ளன.

பாரதப் பாராளுமன்ற அமைப்பு உருவாகக் காரணமான பிரிட்டன் பாராளுமன்றத்தில்கூட இதே நிலைதாம்.

இது மட்டுமன்றி இந்த இயக்கங்களில் இயக்க உறுப்பினர்களின் ஒட்டு மொத்த ஆதரவினைப் பெற்று விளங்கும் தலைவர்கள் 

நாட்டு மக்களின் அமோக ஆதரவு பெற்று நாடாளும் நிலை வந்தால்கூட அவர்களின் பதவிக்காலம் அதிகபட்சம் பத்தாண்டுகள்தாம். 

அதன் பிறகு இந்தத் தலைவர்கள் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் வெளியேறி  

தகுதி மிக்க பல்வேறு புதிய தலைவர்கள் வருவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதே இந்த நாடுகளில் உள்ள சனநாயக நடைமுறை!

வாசிங்டன், கென்னடி, லிங்கன்****என   அமெரிக்காவிலும், 

தாட்சர், கேமரூன் என பிரிட்டனிலும் 

தொடர்ந்து ஆரோக்கியமான தலைவர்களைக் கண்டு வருகின்றனர்.

நம்நாட்டின் நிலையோ இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது பரிதாபகரமான நிலைதாம். 

சர்வாதிகாரத் தலைவர்களைக் கொண்ட இயக்கங்களையும் 

அவர்களின் தலைவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டால் இந்தக் கட்டுரையை நிறைவு செய்யஇடமே கிட்டாது! 

உலகிலேயேஅதிக மக்கள்தொகையில் இரண்டாவதுஇடம் பிடித்துஏராளமான வாக்காளர்களை உடைய

நம் பாரத நாட்டில் உள்ள இயக்கங்கள் சர்வாதிகாரத் தலைமை யோடே திகழ்கின்றன! 

அரசியல் துவங்கி, சாதி, மத,இன, இயக்கங்கள் முழுக்க சர்வாதிகாரிகள்தாம்!

தனி மனித ஆதிக்கம்தான் இந்த இயக்கங்களில் தலைவிரித்து ஆடுகிறது.

இவர்களை எதிர்ப்பவர்கள் இயக்கத்தைவிட்டு வெளியேற்றப்படும் பரிதாப நிலை!

தனிமனிதத் துதிபாடிகள் நிறைந்த பக்திச்சபை போலத்தான் இவை உள்ளன!

இயக்கத்தை துவக்கும் தனி நபரோ அல்லது இயக்கத்தைக் கைப்பற்றித் 

தன்பிடிக்குக் கொண்டுவரும் எவரும் அந்த இயக்கம் உள்ளவரை இயக்கத்தின் தலைவராகத் தொடர முடியும்! 

அந்தத் தலைவருக்கு வாரிசுகள் இருந்து தொலைத்துவிட்டால் வேறு எவரும் அந்தத் தலைவர் குடும்பம் தவிர தலைமை ஏற்க முடியவே முடியாது!

தேர்தல் ஆணைய நடைமுறைக்கென இந்த இயக்கங்களில் தேர்தல் நடத்தப்பட்டாலும் அவை கண் துடைப்பிற்கு மட்டுமே!

சன நாயக அமைப்புகள் எனஇவைகள் மார்தட்டிக் கொண்டாலும் 

சர்வாதிகார அமைப்புகள்தாம் இவை என்பது தேர்தல் ஆணையத்திற்கே நன்கு விளங்கும்!

நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதற்கொண்டும் அதற்கு முன்னர் துவக்கப்பட்ட இயக்கங்களில்கூட 

இதுவரை செல்வாக்கு மிக்க தலைவர்கள் ஆதிக்கம் செழுத்தி வந்துள்ள பதவிக்கு எதிராக 

ஒரு சாமான்யன்கூடப் போட்டியிட்டதாகவோ வெற்றி பெற்றதாகவோ

எமதுஅறிவிற்கு எட்டியவரை செய்தி கிட்டியதில்லை!

படிக்காத மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு திகழ்ந்த இந்த நாடு இன்றோ 

படித்த மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்தும் 

தனி மனிதத் துதிபாட்டு மன்றங்களாகத் திகழும் இதுபோன்ற இயக்கங்களை இன்னமும் ஆதரிப்பதுதாம் எம்முள் வியப்பலைகளை ஏற்படுத்துகிறது!

தனி மனித ஆதிக்கம் செழுத்தும் இது போன்ற அமைப்புகளை முற்றிலும் நிராகரிக்கும் அறிவுத் தெளிவு மிக்கவர்களாக 

பாரத அளவில் இல்லாமல் போனாலும் 

ஏராளமான படித்த இளைய சமுதாயம் நிறைந்த நம் தமிழகத்திலாவது 

புதிய ஒரு சகாப்தம் உருவாக வேண்டுமென்பதே 

இப்போதைக்கு எம்முன் நிறைவேறாத எதிர்காலத்தில் நிறைவேறப் போகும் ஏக்கமுள்ள தமிழ்க்கனவாகும்! 

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் ஒரு வேளை தமிழக இளைய சமுதாயத்தின் துணை கொண்டு துவங்கி வளர்ந்து மக்களால் ஏற்கப்படும் காலம் உருவானால்

 அது நிச்சயம் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ளது போன்று உண்மையான ஒரு சனநாயக அமைப்பாக விளங்கி 

உலகிற்கு  வழி காட்டியாகத் திகழும் என்பதில் எம்முள் எவ்வித ஐயமும் கிடையாது!

பழைய  பதிவு

தெகுரா

பிகு

நாளை புதிய அதிபராகப் பதவி ஏற்கும் பெரியண்ணன்

ஆயுதமற்ற அன்பு நிறைந்த
எல்லைகளற்ற

புதுமை உலகம் மலர

வழி செய்வாராக!!!!!

அவர் "வாழ்வாங்கு" வாழ்க! வாழ்க!! வாழ்க !!வாழ்க!! வாழ்க!!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!