தமிழகத்தில் மின்சார இலாகாவில் இலட்சம் கோடிகளில் ஊழல்!
தமிழகத்தில் மின்சார இலாகாவில் இலட்சம் கோடிகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சியும், முன்பே இவர்கள் ஆட்சியில் பெரும் கொள்ளை நடந்திருப்பதாக ஆளும் கட்சியினரும் மாறி மாறிக் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர்.
குடிசை வீடுகளுக்கு இலவசம் என அறிவித்து நடுத்தர மக்களின் பயன்பாட்டில் உபயோகத்திற்கு ஏற்பக் கட்டணம் எனப் பகற்கொள்ளை அடித்தும், சததமின்றித் தங்களின் இயக்கப் பொதுக்கூட்டங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தைக் கொக்கி போட்டுத் திருடும் சுயநல அரசியல்வாதிகள் இன்றுவரை ஒன்றை மட்டும் ஏன் புரிந்துகொள்ள மறுக்கின்றனர் என்பதுதாம் எம்போன்ற பாமரர்களுக்கு இன்னும் விளங்கவே இல்லை!
கோடி கோடியாகக் கொள்ளையிட்டு வாழ்ந்தாலும் ஒரு நாள் அந்த கொள்ளையிட்ட மனிதன் மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை வரும்.
அப்போது அந்த மனிதனின் உடலில் போர்த்தப்படுவது பிறந்த வீடு புகுந்த வீடு என்ற இரண்டு இடத்துத் துணிக் கோடி மட்டும்தாம்!
இதுதான் தமிழினம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மிக எளிதாக விளங்க வைக்கச் செய்த தத்துவ விளக்கம்.
சுடுகாடு போகின்ற உடம்பு இந்த இரு கோடிகளுடன் போகிறது! அதுவரை அந்த உடம்பு கொள்ளையிட்ட கோடிகளை அவர்தம் வாரிசுகள் அனுபவிக்கலாம்!
அவர்களும் ஒரு நாள் சுடுகாடு போகவேண்டிய நிலை வரும்! அவர்களுக்கும் இரண்டே இரண்டு கோடி எனப்படும் கோடித்துணிதான்!
ஒரு மனிதன் வாழும்போது அவனது வசதி கண்டு முகத்தின் முன்பு வாழ்த்திப் பேசுவதும், முதுகிற்குப் பின்னர் ஏசிப் பேசுவதும்தான் பொது வாழ்க்கைக்கு அழகென்றால் அப்படி ஒரு கேவலமான பொது வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்?
வாழ்ந்தால் தன் இறப்பிற்குப் பிறகும் பெயர் சொல்லும்படி வாழும் காமராசரைப்போல வாழ வேண்டும்!
அவர் போல எம் போன்றவர்களுக்கு பொது வாழ்க்கையில் வாழ வக்கில்லையென்றாலும் இயல்பு வாழ்க்கையிலாவது கடைப் பிடித்து வாழ முயல்கிறோம்!
அடுத்தவர் வியர்வையில் கோடிகளில் வாழ்ந்து சாவதை விடச் சொந்த வியர்வையில் வாழ்ந்து சுடுகாடு போகும்போது போடப்படும் இரண்டு கோடிகளே எமக்குப் போதும் என்ற மன நிறைவுடன்
கோடிகளில் புரளும் ஏமாற்றுப் பேர்வழிகளின் பரிதாபகரமான கடைசிக் கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைத் தீர்க்க தரிசியாக வருங்காலம் கணித்துக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்
(காசுக்காக எழுதியகாகச் சொல்லப்பட்டாலும் ஒரு பகுத்தறிவுவாதியாக அர்த்தமற்ற இந்து மதம் இரண்டு பாகங்களையும் நான் வாங்கிப் படித்துப் பாதுகாத்து வருகிறேன்)
நிகழ்காலத்திலும் எழுத்துச் சாட்சியமாக விளங்கும் அவர்தம் அர்த்தமுள்ள இந்துமதம் பத்தாம் பாகத்தின் கடைசிப் பக்கங்களை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கத்தான் இப்போதைக்கு எம்மால் இயலும்!
கருத்துகள்
கருத்துரையிடுக