தமிழகத்தில் மது ஆலைகளையும் மதுக்கடைகளையும் மூட வேண்டிய அவசியமே இல்லை!!!
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கினை அமல்படுத்த அரசினை வலியுறுத்திப் போராடி வந்த திரு சசிபெருமாள் அவர்கள், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் செல்பேசி மின் கோபுரததில் ஏறிப் போராடத் துவங்கியிருக்கிறார். அவரது கோரிக்கையை அரசு அலுவலர்கள் உடனடியாகச் செவி சாய்க்காமல் காலம் தாழ்த்திய பின்னர் அவர் வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கப்படும் நிலை உருவாகி அதன் காரணமாக அவர் உடல்நிலை மோசமடைந்து மரணமேற்படக் காரணமானதென ஊடகங்கள் வாயிலாக அறிய நேரிட்டது கண்டு ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக எமது ஆழ்ந்த வருத்தங்களைப் பதிவு செய்கிறோம். காந்தியவாதியாகத் தம் வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்ட திரு சசிபெருமாள் அவர்கள் இது போன்ற மாற்று வழிப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததுதாம் அவரது மரணத்திற்கென எழுதப்பட்ட விதியோ என்னவோ சட்டவிதிகள் இது போன்ற போராட்டங்களைத் தற்கொலை முயற்சியாகத்தாம் பதிவு செய்யும் என்பதை ஏனோ அவர் மனதில் கொள்ளத் தவறித் தன் இன்னுயிரையும் ஈந்து விட்டார். காந்தியவாதிகளுக்கு அடக்குமுறையாளர்களால் ஏற்படும் கதியினை நாம் சுதந்திரத்திற்கு முன்னரே வெள்ளையர் ஏகாதிபத்தியத்தில் ஏராளம் கண்டுள்...