அற மன்றங்கள்!
தஞ்சை அரண்மனை
அறியாத வயது! இளமைக்கே உரிய துள்ளல்! இளவரசனின் தேர் அதி வேகமாக அந்தி மாலை நேரத்துத் தென்றல் காற்றைக் கிழித்தவாறு விரைந்து கொண்டிருந்தது!
எதிர்பாராத விதமாகக் தேரின் குறுக்கே ஓடி வந்தது ஒரு கன்றுக்குட்டி! இளவரசன் தேர்க்குதிரைகளை இழுத்து நிறுத்துவதற்குள் விபரீதம் நிகழ்ந்தது!
அந்தோ! தேர்ச்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய அந்தக் கன்றுக்குட்டி பரிதாபமாகத் தன் இன்னுயிர் துறந்தது!
செய்வதறியாமல் அரண்மனைக்குத் திரும்பினான் இளவரசன்!
மறுநாள் விடிந்தது! அதிகாலைப்பொழுது! அரண்மனை வாயில் எதிரே கட்டப்பட்டுள்ள ஆராய்ச்சி மணி இடைவிடாது ஒலிக்கும் சப்தம்!
உறக்கம் கலைந்து எழுந்த மன்னர் ஏவலர்களை அனுப்பி விசாரிக்க, மணியை அடிப்பது ஒரு தாய்ப்பசு என்ற தகவல் கிடைத்ததும் விரைந்தோடி வெளியில் வந்தார்!
தன் கன்றின் மீது தேரை ஏற்றிக் கொன்ற குற்றத்திற்காக அறம் வேண்டிக் கண்ணீருடன் கதறி நின்றது அந்தப்பசு!
உடனடியாக அரசவை கூட்டப்பட்டது! மன்னர் இளவரசனை விசாரித்தார்! குற்றம் செய்ததாக அவனும் ஒப்புக்கொண்டான்!
மன்னர் உடனடியாகத் தம் தீர்ப்பினை வழங்கினார்!
தீர்ப்பின் விபரம் இதுதான்! இளவரசன் விரைவாகத் தம் தேரை ஓட்டிய அதில் சிக்கி உயிழந்த கன்றுக்குட்டி எவ்வாறு துடிதுடித்து இறந்ததோ அவ்வாறே இளவரசனையும் அதே தேர்ச்சக்கரத்தில் இடறச்செய்து மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதாம்!
மன்னரின் ஆணை உடனடியாக நிறைவேற்றப்பட்டு இளவரசன் தேர்ச்சக்கரத்தில் இடப்பட அவனது உயிரும் பிரிந்தது!
மதுரை அரண்மனை!
அழுத கண்ணீருடன் தலைவிரிக் கோலத்தில் படு கோபமாகக் காட்சியளித்த அந்தப்பெண் மன்னரைச் சந்திக்க வேண்டுமென்கிறாள்!
வாயிற் காவலர்கள் தடுக்கவே அவர்களின் வேல்களைத் தட்டிவிட்டுப் புயலென அரண்மனையின் விசாரணை மண்டபத்தை அடைகிறாள் அப்பெண்!
யாரம்மா நீ என்கிறார் மன்னர்! எடுத்த எடுப்பில் தேரா மன்னா என அழைத்துத் தன் வழக்கினை அஞ்சாது உரைத்து இறுதியாகத் தன் கையிலிருந்த சிலம்பினை ஓங்கித் தரையில் அடிக்கிறாள் அவள்! உடைபட்ட சிலம்பிலிருந்து மாணிக்கப் பரள்கள் மன்னரின் உதட்டிலும் பட்டு அவையெங்கும் பரவுகின்றன!
மன்னருக்குத் தம் தவறு புரிகிறது! ஆராயாமல் தவறாகத் தீர்ப்பளித்து அந்தப் பெண்ணின் கணவரைக் கொன்ற தானே கள்வன் என நெஞ்சம் பதறியவாறு தன் தவறான செய்கையால் தனது ஆட்சியின் செங்கோலும் வெண்கொற்றக் குடையும் தாழ்ந்ததெனக் கதறி அக்கணமே தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான் மன்னன்!
இது தமிழின மன்னர்களின் அறம் பற்றி இன்றுவரை உலகிற்குப் பறை சாற்றிக்கொண்டிருக்கும் உண்மை நிகழ்வுகள்!
சற்று கற்பனைக்காக இன்றைய நிலையில் இதே போன்று மன்னர்கள் இருந்திருந்தால் இந்த வழக்குகள் இப்படிக்கூடத் திசை மாறியிருக்கும்!
தேர்க்காலில் விழுந்து இறந்ததற்குக் கன்றுக்குட்டியின் தற்கொலை எண்ணமே காரணம்! தனது கன்றினைத் தனது கட்டுப்பாட்டில் வைக்கத் தவறி அக் கன்றினைத் தற்கொலைக்குத் தூண்டியதற்குக் காரணமான பசுவினைச் சிறையில் அடைக்கும்படி உத்தரவு!
வாதி கொண்டு வந்த இன்னொரு காற்சிலம்பும் மன்னருக்கே உரியது! மன்னர் சோழ நாட்டுக்கு ஒரு முறை மரியாதை நிமித்தம் வந்திருந்தபோது தனது மனைவிக்கு அணிவிப்பதற்காக மாணிக்கப் பரல்கள் இடப்பட்ட காற் சிலம்புகளை வாங்கி வந்திருந்தார்!
அதில் ஒன்றுதான் களவு போனது! எனவே வாதியின் போலியான வாதம் செல்லாது! மன்னர் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்காகவும், அரண்மனைக் காப்பாளர்களையும் மீறி அரசவைக்கு வந்து அவையின் நடவடிக்கைகளுக்குப் பாதகம் ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் வாதிக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்படுகிறது!
அதில் ஒன்றுதான் களவு போனது! எனவே வாதியின் போலியான வாதம் செல்லாது! மன்னர் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்காகவும், அரண்மனைக் காப்பாளர்களையும் மீறி அரசவைக்கு வந்து அவையின் நடவடிக்கைகளுக்குப் பாதகம் ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் வாதிக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்படுகிறது!
தமிழகத்தில் இன்றைய அற மன்றங்களின் நிலை இத்தகையதுதான் என்பதை ஊடகங்களில் அவ்வப்போது வரும் செய்திகள் பறை சாற்றுகின்றன! செல்வாக்குள்ள அரசியல்வாதிகளின் வழக்குகள் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன!
நில அபகரிப்பு போன்றவற்றிற்கு வழக்குரைஞர் நியமித்துச் செலவிட இயலாத வறியவர்களின் வழக்குகளும் நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கப்பட்டு அவற்றிற்கும் இதே நிலைதான்!
வாய்தா வாங்கியே நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கப்பட்டு வழக்குகள் தேங்கிக் கிடக்கும் இன்றைய வழக்கு மன்றங்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதுதாம்.
இதைவிடக் கொடுமையென ஊழல் செய்த நடுவர்களை மாற்ற வேண்டுமென வழக்குரைஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியதாக ஊடகங்களில் வரும் செய்தியையும் நாம் ஆழ்ந்த கவலையுடன் நோக்க வேண்டியுள்ளது!
எனினும் இந்த நிலை இப்படியே தொடரப் போவதில்லை! வழக்கு மன்றங்களில் வலியவர்களுக்கு ஒரு தீர்ப்பு,, எளியவர்களுக்கு ஒரு தீர்ப்பு என்ற நிலையும் ஒரு நாள் மாறத்தான் போகிறது!
அப்படி மாறும் காலம் வரும்போது இனி தமிழகத்திலுள்ள அனைத்து கிளை மாவட்ட, உயர் அற மன்றங்களும் இதோ இப்படித்தான் செயல்படப் போகின்றன!
எப்படி என்பதை நாம் நம் தமிழினத்தின் சங்க கால நிகழ்விற்குள் சென்றுதான் விரைவில் நனவாகப் போகும் கனவினைக் காணத் தயாராக வேண்டும்!
சோழர் அரண்மனை
அரச அவை! அரியாசனத்தில் பால் மணம் மாறாத இளம் சிறுவன்!
வழக்குத் தொடுக்க இரு நடுத்தர வயதினர் அவைக்கு வருகின்றனர்!
அரியாசனத்தில் அமர்ந்திருந்த சிறுவனைக் கண்டவுடன் அவர்களுக்குத் தயக்கம்!
இந்தச் சிறுவனா நம்முடைய வழக்கினைத் தீர்த்து வைக்கப் போகிறவன்?
வந்தவர்களின் தயக்கம் உடனடியாகச் சிறுவன் மனதில் பட்டது! அவன் இருவரையும் நோக்கித் தாங்கள் நாளை இதே அவைக்கு வாருங்கள்! வேறு ஒருவர் உங்களின் வழக்கினை விசாரித்து நியாயம் வழங்குவார் எனக்கூறி வழியனுப்பி வைக்கிறான்!
மறுநாள் அரச சபை கூடுகிறது! அரியாசனத்தில் மிகக் கம்பீரமாக நரைத்த முடியுடன் ஒரு வயோதிகர் அமர்ந்திருக்கிறார்!
வந்தவர்கள் தங்கள் வழக்கின் விபரங்களைத் தெரிவிக்கின்றனர். வழக்கின் தன்மையைக் கவனமாகக் கேட்டறிநத அந்த முதியவர் வந்தவர்களே வியக்கும் வண்ணம் மிகச் சரியான நியாயத்தை வழங்குகிறார்.
வழக்கு தொடுக்க வந்தவர்களின் முகத்தில் வழக்கு எவருக்கும் பாதகமின்றி முடிந்ததற்காக மகிழ்ச்சிப் புன்னகை! அவையோ தீர்ப்பின் தன்மையை நினைந்து வியந்து சிலிர்த்தது!
அரியாசனத்திலிருந்த முதியவர் தன்னுடைய நரைமுடியைக் கலைகிறார்!
வழக்கு தொடுத்தவர்கள் உட்பட அவையுமே ஒரு கணம் திகைப்பில் ஆழ்ந்து அடுத்த கணம் அவை முழுக்க ஆரவாரத்துடன் அரியாசனத்தில் அமர்ந்திருந்தவரை வாழ்த்திய ஒலி விண்ணில் எதிரொலித்தது!
நரை முடித்து நியாயம் சொன்னது நேற்று அதே அரியாசனத்தை அலங்கரித்த இளம் பால் மணம் மாறாச் சிறுவன்தாம்!
நியாயம் சொல்ல வயது ஒரு தடையாகாது என நிரூபித்த இந்தச் சிறுவன் ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழின வரலாற்றில் இன்றும் பேசப்படுகிறான்! அவன் தான் உலகில் கட்டப்பட்ட முதல் அணக்கட்டினக் கட்டிய கரிகாலச் சோழன்.
இவன் போலவே மிக இளம் வயதில் வாய்மை மன்ற நடுவராகி ஏராளமான சிக்கலான வழக்குகளைத் தீர்த்து வைத்த கதைகளுக்குச் சொந்தமானவன் மரியாதை இராமன்!
நான்கு சுவர்களுக்குள் சட்டப் பிரிவுகளையும், திறமையான வாதங்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் பாரபட்சமான தீர்ப்புகள் இனி வரும் தமிழகத்தில் வழங்கப்படப்போவதில்லை!
இதோ மேற்கண்ட வழியில் வழக்கின் தன்மையை அது நிகழிடத்திலேயே உரிய புலனாய்வுகளை தேவைப்பட்டால் நடுவர்களே மேற்கொண்டு இனி வரும் காலங்களில் வழக்குகளைக் கையாண்டு நியாயம் வழங்கும் நிலை உருவாகும்!
ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைக்கப் போகும் தலைமை அற மன்றத்தின் புதுமையான செயல்பாடுகளால் ஏராளமான
சிபிச்சக்ரவர்த்திகளும், நெடுஞ்செழியன்களும், கரிகாலர்களும்,
சிபிச்சக்ரவர்த்திகளும், நெடுஞ்செழியன்களும், கரிகாலர்களும்,
மரியாதை இராமர்களும் நடுவர்களாக அமர்ந்து
வழக்குகளைத் தெள்ளத்தெளிவாக வழக்கின் நிகழ்விடமும் நடுவர்களே நேரடியாகவோ மறைமுகமாகவோ சென்று ஆராய்ந்து நியாயம் வழங்கும் வகையில் அற மன்றங்கள் செயல்பட்டு
இனி வரும் காலங்களில் வழக்குகள் இன்றி வழக்குரைஞர்களின் தேவையும் குறைந்து சட்டப் படிப்பிறகும் அவசியமின்றிச்
சட்டக் கல்லூரிகளே காத்து வாங்கும் நிலையும் நிச்சயம் ஒரு நாள் வரத்தான் போகிறது!
வழக்குகளைத் தெள்ளத்தெளிவாக வழக்கின் நிகழ்விடமும் நடுவர்களே நேரடியாகவோ மறைமுகமாகவோ சென்று ஆராய்ந்து நியாயம் வழங்கும் வகையில் அற மன்றங்கள் செயல்பட்டு
இனி வரும் காலங்களில் வழக்குகள் இன்றி வழக்குரைஞர்களின் தேவையும் குறைந்து சட்டப் படிப்பிறகும் அவசியமின்றிச்
சட்டக் கல்லூரிகளே காத்து வாங்கும் நிலையும் நிச்சயம் ஒரு நாள் வரத்தான் போகிறது!
வாய்மையின் எதிர்ப்பதம் பொய்மை
அறம் என்பதன் எதிர்ப்பதம் அறமின்மை. எனவே
அறம் என்ற சொல்லே
சரியானது என
2014 மே 5 ல் வாய்மையே வெல்லும் என்ற எனது முந்தைய தலைப்பை நீக்கி அறமே வெல்லும் எனத் தற்போது மாற்றி எழுதி உள்ளேன்
கருத்துகள்
கருத்துரையிடுக