தேவை ஒரு சர்வாதிகாரமற்ற மக்களுக்கான அரசியல் இயக்கம்.

சர்வாதிகார தலைமையற்ற சுழற்சி முறை கொண்ட தன்னலமற்ற நிர்வாகம் நிறைந்த அரசியல் மாண்பு.

வாரிசுகளோ, உறவினர்களோ ஆதிக்கமற்ற அரசியல் கொள்கை,

ஐந்தாண்டுக்கொருமுறை சுழற்சி முறையில் நிர்வாகிகள் மாறும் மாண்பு.

 ஐந்தாம் தேன் தமிழ்ச்சங்கத்தில் இணையும் ஒவ்வொருவரும் தமிழகம் வளம் பெற வேண்டும் என்ற ஒத்த கருத்துடையவர்களாக பணியாற்றும் சமத்துவம்.

ஒவ்வொரு கிளை, ஒன்றியம், வட்டம், மாவட்டம், என எங்கும் சாதி, மத பேதமற்ற நிர்வாகிகள் கொண்ட சமத்துவ அரசியல் பண்பு,

ஆட்சி நிர்வாகத்தில் அணு அளவும் தலையிடாத ஒழுக்கம்,

இயக்கச் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை,

கொடி,  நிதி என மக்களிடமோ, மற்றவர்களிடமோ கையேந்தாமல் இணையம் வாயிலாக மட்டுமே செயல்படல்,

இன்னும் தேவைப்படும் ஏராளமான மாற்றங்களுடன் ஒரு மகத்தான அரசியல் இயக்கம் உருவாக்குவோம்.

தமிழ்நாடு மட்டுமல்ல உலகிற்கே இந்த அரசியல் இயக்கம் ஒரு முன்னோடி இயக்கமாகத் திகழ வேண்டும்.

இந்த இயக்கத்தின் அப்பழுக்கற்ற மக்கள் தொண்டெனும் உயரிய தன்மையால்

இன்றுள்ள அரசியல் இயக்கங்கள் ஒன்றுகூட வரும் காலங்களில் மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடுவதற்குத் துளியும் வாய்ப்பின்றி மறைந்தோடச் செய்வோம்.

பதவிவெறி, ஆட்சியில் குறுக்கீடு, அதிகார தர்பார், வாரிசு அரசியல், ஆதிக்க மனப்பான்மை என தற்பொழுதுள்ள அரசியல் இயக்கங்களின் ஏராள தீய குணங்கள் ஏதுமற்று

தமிழ்நாட்டில் இனி மக்களுக்கான அரசியல் இயக்கம் ஒன்று மட்டுமே இருக்க வேண்டும்.

இனியொரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம்.

இது ஒரு எளிய கருத்து இன்னும் இன்னும்  ஏராளமான என்னிடமும் நம் தமிழ் மக்களிடமும் உள்ளன. 

ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று சேர்ந்தால் ஒட்டு மொத்த தமிழகத்தையே மாற்றி அமைக்க முடியும் என்ற நோக்கத்தில் உருவான

ஐந்தாம் தேன் தமிழ்ச்சங்கத்தின் ஒரே இலக்கு

"மகுடம் சாவடி"
ஆம் தமிழகத்தில் ஊழல்வாத மதவாத சாதியவாத மகுடங்கள் சாகடிக்கப் பட வேண்டும் 
 தமிழ்நாட்டில் மக்களால் மக்களுக்கான உண்மையான சனநாயகம் தோற்றுவிக்கப் படவேண்டும்

இதுவே எமது தாய்நாட்டின் அடிமை விலங்கை உடைத்தெறிய யாம் ஏற்றுள்ள சபதம்
வெற்றி நிச்சயம்
அறம் வெல்லும் நாள் விரைவில் வரும்



26.6.25

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!