அடகுத் தமிழ் அறிவோம்
அன்னைத் தமிழில் ஏராளமான வடமொழிச் சொற்கள் புகுத்துப்பட்டு அவை இன்றளவும் நம் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தி வருகிறோம்.
வடமொழிச் சொற்கள் பெரும்பாலும் ன் ஸ் த் ப் என்ற மெய் எழுத்துகளை முதன்மையாக (<முக்கியமாக - முக்யம்) கொண்டவை. எனவே இவற்றை எளிதாக (<சுலபமாக - சுலப்) வடமொழிச் சொற்கள் என்று நாம் புரிந்து கொண்டு அவற்றை தவிர்த்து நம் அன்னைத் தமிழில் அதற்கெனப் பொருள் தரும் சொற்களைப் பயன்படுத்த முடியும்.
பிரபஞ்சம் தரும் எமது ஆழ்மன உணர்வின்படி வடமொழிக்கு எழுத்து
வடிவமும் சொற்களும் வழங்கியதே நம் தமிழன்னைதான் என உறுதியாகச் சொல்ல முடியும்.
தமிழின் பெரும்பாலான எழுத்துக்களே வடமொழியில் இருப்பதே இதற்குச் சான்றாகும்.
அது சரி எவையெல்லாம் வடமொழிச் சொற்கள் என்று இன்னும் எளிதாக நாம் கண்டறிவது என்ற உங்கள் கேள்விக்கான பதிலை நம் தமிழன்னையே மிக அருமையாக விளக்கி உள்ளார்.
தமிழின் முதல் எழுத்து அகரம் எனத்தான் துவங்குகிறது. நம் அன்னைத் தமிழில் கலந்து விட்ட வட மொழிச் சொற்களின் முன் எழுத்தாக இந்த அகரம் எனும் சிகர எழுத்தை நாம் சேர்த்துப் பார்த்தாலே போதும் அவை வடமொழிச் சொற்கள்தான் என்பது உறுதியாகும்.
சான்றாக சில
வடமொழிச் சொற்கள் அகரம் சேர்ந்து உருவாகும் போது அவற்றில் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்தால் சற்று வியப்பும் நம்முள் எழும்.
ஸத்யம் சத்தியம் அசத்தியம் சரியான தமிழ் சொல் ஆணை
தர்மம் அதர்மம் தானம்
கோரம் அகோரம் அறுவெருப்பு
ஸவுக்யம் அசவுக்யம் நலம்
நீதி அநீதி அறம்
ந்யாயம் அநியாயம் முறையீடு
நியாயமா தமிழில் சரியா
தமிழ் எழுத்தாளர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் இதுதாம். நீங்கள் எழுதும்போது முடிந்தவரை தமிழ்ச் சொற்களை முதன்மையாகக் கொண்டு எழுதுங்கள்.
ஒருவேளை இது செத்துப் போன வடமொழி சமஸ் எழுத்தாக இருக்குமோ என்று கருதினால் அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லை ஆய்ந்தறிந்து எழுதுங்கள்.
கவி பாரதி வேதனையுடன் பாடியபடி
தமிழ் என்றும் மெல்லச் சாவாது .
அது உயிர்மொழி
உடலுக்குத்தான் சாவு
உயிருக்கு சாவே கிடையாது
உயிர் எப்படி மீண்டும்
மீண்டும் உயிர்த்தெழுமோ அதேவிதமான இயல்பு கொண்டு இந்த பூமிப் பந்து உள்ளவரை தழைத்து வாழும் உயிர்மொழி எம் செந்தமிழ் மொழி
இது என்றும் வற்றாத (நதி? சமஸ்) காவிரி ஆறு. காவிரி ஆற்றை கருநாடக சகோதரர்கள் எத்தனை அணைகள் கட்டித் தடுத்து அதனைத் தமிழகம் வரவிடாது தடுத்தாலும் அது உருவாகும் கரு மூலத்தை எப்படித் தடுக்கவே முடியாதோ அப்படி உயிர்ப்புடன் இருக்கும் (ஜீவ _ சமஸ்) உயிர் ஆறு.
ஆறு என்றால் ஆற்றுப்படுத்தல் எனப் பொருள் தரும்.
ஆறு தன் தோற்றம் முதல் பல்லாயிரம் கல் தொலைவுகள் கடந்து கடலில் கலந்து மீண்டும் மேகமாகி தன் பிறப்பிடமான மலையை அடைந்து அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு ஒரு சுழற்சி முறையில் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் பயிர்களையும் தன் அமுத நீரால் எப்படி தாகம் தீர்த்து வளப்படுத்தி ஆற்றுப்படுத்துகிறதோ அவ்வாறே தன்னிடம் பிறந்த வளர்ந்த பயின்று உள்வாங்கிய ஆயிரக்கணக்கான மொழிகளையும் வளப்படுத்தும் தாய்மொழி.
அதுவே உலகோர்க்கு ஞான ஒளி
ராணித்தேனீயின் தலைமையில் ஓயாது உழைத்து அமுதத் தேன் சேகரிக்கும் தேன்மொழி.
மீண்டும் பாரதி வரிகளுடன்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று நிறைவு செய்கிறேன் அல்ல அல்ல துவங்கி வைக்கிறேன்
4.11.2024
கருத்துகள்
கருத்துரையிடுக