இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எது இலாபம்?

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையும் முன்பு அமலில் இருந்த வாட் வரி விதிப்பு முறையும் ஒன்றேதான். வாட் வரி விதிப்பிற்கு உட்படாமல் அடம் பிடித்த வணிகர்கள் இப்பொழுதும் இந்த வரி விதிப்பிற்கு தங்களை உட்படுத்திக் கொள்ள முன் வராமல் இருப்பார்கள் என்று கருதிதான் மத்திய அரசு காம்பவுண்டிங் டேக்ஸ் என்ற முறையைப் புதிதாகப் புகுத்தியுள்ளது. அதன்படி 20 இலட்சத்திற்கு கீழ் உள்ள வணிகர்கள் ஜிஎஸ்டி வணிகத்திற்கு வேண்டியதில்லை என்றும் 20 இலட்சம் முதல் 70 இலட்சம் வரை உள்ள வணிகர்கள் தங்களின் ஆண்டு விற்பனையில் ஒரு சதவிகிதத்தை கட்டினால் போதுமென்றும் விளக்கமளித்துள்ளது. இதன்படி  உள்ளவர்கள் 20 இலட்சத்திற்கு மேல் 30 இலட்சம் ஆண்டு வணிகம் 30 ஆயிரம் ரூபாய்கள் காம்பவுண்டிங் வரி 40 இலட்சம் ஆண்டு வணிகம் 40 ஆயிரம் ரூபாய்கள் காம்பவுண்டிங் வரி என 69 இலட்சம் வரை 69 ஆயிரம் வரி என கட்ட வேண்டி வரும். பெரும்பாலான வணிகர்கள் இந்த முறையே தங்களுக்கு இடையூறு இல்லாதது எனக் கருதிக் கொண்டு தங்களை காம்பவுண்டிங் டேக்ஸ் முறையில் உட்படுத்திக் கொள்ள தயாராகி வருகின்றனர். இந்த முறைக்கு மாற விரும்பும்...

துறவும் நிர்வாணமும்!

புத்தர் ஆசை துறந்தார். துறவியானார்.  புத்தருக்கு ஆசையின்றிப்போனாலும் அவருக்குச் சீடர்கள் உருவாகினர். புத்தருக்குப் பின் சீடர்களின் ஆசையே புத்த மதமாகி இன்று உலகெங்கும் பரவி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலச் செயல்படுகிறது.  நிர்வாணத்தை வலியுறுத்தும் சமண மதமும் இதே நிலைதான்.  ஆதி சங்கரர், விவேகானந்தர் போன்றவர்களால் துவக்கப்பட்ட அமைப்புகள் துவங்கி  இன்றுள்ள ஆனந்தர்கள், ஸ்ரீஸ்ரீக்கள், சத்குருக்கள், மடாதிபதிகள் என அனைவரும்  துறவுக்குப் பின்னரே தங்களின் நிலைப்பாட்டை பொன், மண்,பொருட் சேர்க்கைகளோடு தம்மைப் பின்பற்றும் சீடர்களோடு கார்ப்பரேட் நிறுவனர்களாக உலா வருகின்றனர்.  ஒருவரின் துறவுக்குப் பின்னர் அவரால் ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் அது குறித்து சர்ச்சைகளும் எழுவதைப் படித்தும் நடைமுறையில் காண்பதாலும்  துறவுக்கும் நிர்வாணத்திற்கும் உரிய இலக்கணத்தைப் படித்துத் தொலைத்ததாலோ என்னவோ  நிர்வாண ஆசையைக் குளியலறையிலும், துறவு ஆசையைக் கல்லறையிலும் புதைத்து விட முடிவு செய்தோம்.  எம்முடைய துறவால் இன்னொரு கார்ப்பரேட் மதமோ, அமைப்போ இந்த ப...

பெருமைப்படுவதா? வெட்கப்படுவதா?

தனது மகன் தேரோட்டிச் சென்றபோது அடிபட்டு இறந்த கன்றுக்காக மணியடித்து அறம் கேட்ட பசுவின் கண்ணீருக்குத் தனது மகனையே தேரிலிட்டுக் கொன்று அறம் நிலை நாட்டிய சோழனின் ஆட்சியின்போது இளவரசன் மேல் பரிதாபப்பட்டு அரசனது குடும்பமோ அமைச்சர் பெருமக்களோ ஏன் நாட்டு மக்கள்கூட எவரும் அரசனிடம் பரிந்து பேசியதாக வரலாற்றில் எந்தப் பதிவுமில்லை. கண்ணகியின் வழக்கின்போது ஆராயாமல் தீர்ப்பளித்த குற்றத்திற்காகத் தன் வெண்கொற்றக்கொடி தாழ்ந்து உயிர் நீப்பதற்கு முன்பு அரசனையே எதிர்த்துத் திமிராகப் பேசிய கண்ணகியை அரசரை அவமதித்த குற்றத்துக்காகச் சிறை தண்டனை கொடுங்கள் எனவோ கண்ணகி தங்கள் எதிரி நாடாகிய சோழ நாட்டைச் சேர்ந்தவள் எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிடுங்கள் எனவோ, அமைச்சர் பெருமக்கள் எவரும் மன்னருக்கு வக்காலத்து வாங்கியதாக வரலாற்றில் எந்தப் பதிவுமில்லை. அரசனுக்கும் அரச குமாரனுக்கும் என நாட்டிலுள்ள அனைவருக்கும்  அறம் பொதுவானதுதாம் என எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாது அறம் நிலை நாட்டிய ஒரு மகத்தான நாட்டில் பிறந்தோமெனப் பெருமைப்படுவதா? பணம் இல்லாதவன் குற்றம் செய்தால் உடனடியாக விசாரித்து தண்ட...

எது சிறந்த நிர்வாகம்?

பொதுவாக புதிதாக ஒரு இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றால் அவர்கள் பொறுப்பேற்கும் முன்னரே பழைய ஆட்சியாளர்களை மறந்துவிட்டு இவர்களை வரவேற்க மலர்க்கொத்துக்களுடன் உயர் அரசு அலுவலர்கள் படையெடுக்கத் துவங்கிவிடுவர். இந்தப் படையெடுப்புகள் அநேகமாக தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தவும் தங்களின் தவறுகளை புதியவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகத்தான். இதில் பழைய ஆட்சியாளர்களின்; விசுவாசிகள்தான் எங்கே தங்களை இடமாற்றம் செய்து அலைக்கழிப்பார்களோ என்ற பயத்தில் அதிகப்படியான பணிவை புதியவர்களிடம் காட்டுவர்.  புதிய ஆட்சியாளர்களின் விசுவாசிகள் காட்டும் பணிவோ பழைய நிர்வாகத்தினரால் தங்களுக்குப் புறக்கணிக்கப்பட்ட சலுகைகள் இட மாற்றங்கள் பதவி உயர்வுகள் போன்றவற்றை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமேதாம். இலஞ்சம் பெறாது நெஞ்சம் நிமிர்ந்தவர்கள் மட்டுமே இங்கு விதிவிலக்கானவர்கள். இவையெல்லாம் உயர் அலுவலர்களுக்கு மட்டும்தாம் பொருந்தும்.  சாதாரண அரசுப்பணியாளர்கள் ஆட்சியாளர்களை எங்கே இன்றுள்ள சூழலில் அருகே சென்று சந்திக்க இயலும்? எனினும் மக்கள் எதிர்பார்க்கும் ஒரு புதிய நிர்வாகம் இனி ஆட்சி...

பதவிக்கு எது அழகு?

நேரு மறைந்தவுடன் நாடு ஒரு நெருக்கடியான நிலையைச் சந்தித்த நேரம். அடுத்த பிரதமர் யார் எனும் கேள்வி எழுந்தபோது அதற்குச் சரியான தீர்வான பிரதமரைத் தேர்ந்தெடுத்தார் ஒருவர். அவரது மறைவிற்குப் பின்னரும் இதே நிலை. நாடே இவர்தாம் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று கருதிய நேரத்தில் தனக்கு வந்த வாய்ப்பினை நிராகரித்து இந்திரா அம்மையாரைத் தேர்ந்தெடுத்தவரும் அவரே. அவர்தான் ஒப்பற்ற தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்கள். பிரதமராகும் தகுதியையும் மறுத்தும், தான் முதல்வராக வகித்த பதவியையே வேண்டாமென மறுத்து  அதற்கும் வேறு தகுதியான ஒருவரை பரிந்துரை செய்தவர் உலகிலேயே இவர் ஒருவராகத்தான் இருப்பார். பதவி ஒருவரைத் தேடி வர வேண்டும். அதனைத் தேடி அலைபவர்கள் சுயநலவாதிகள். தன்னைத் தேடி வந்த பதவியை மறுத்து தன்னைவிட மேலானவர் இவர் என மற்றவரை தேர்வு செய்பவர்கள்தாம் சுயநலமற்ற அப்பழுக்கற்ற பொதுநலவாதிகள். இவர்களைப் போன்றவர்களால்தான் பதவிகள் அழகு பெறுகின்றன. பதவிகள் ஆடம்பரமானவை! அழகானவை! மேன்மையானவை! ஆனால் அவை அசிங்கப்படுவதும் அழகாக்கப்படுவதும் அதை வகிப்பவர்களின் தராதரத்தைப் பொருத்தது. இனியாவது பதவிக்கு அ...