எது இலாபம்?
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையும் முன்பு அமலில் இருந்த வாட் வரி விதிப்பு முறையும் ஒன்றேதான்.
வாட் வரி விதிப்பிற்கு உட்படாமல் அடம் பிடித்த வணிகர்கள் இப்பொழுதும் இந்த வரி விதிப்பிற்கு தங்களை உட்படுத்திக் கொள்ள முன் வராமல் இருப்பார்கள் என்று கருதிதான் மத்திய அரசு காம்பவுண்டிங் டேக்ஸ் என்ற முறையைப் புதிதாகப் புகுத்தியுள்ளது.
அதன்படி 20 இலட்சத்திற்கு கீழ் உள்ள வணிகர்கள் ஜிஎஸ்டி வணிகத்திற்கு வேண்டியதில்லை என்றும் 20 இலட்சம் முதல் 70 இலட்சம் வரை உள்ள வணிகர்கள் தங்களின் ஆண்டு விற்பனையில் ஒரு சதவிகிதத்தை கட்டினால் போதுமென்றும் விளக்கமளித்துள்ளது.
இதன்படி உள்ளவர்கள்
20 இலட்சத்திற்கு மேல் 30 இலட்சம் ஆண்டு வணிகம் 30 ஆயிரம் ரூபாய்கள் காம்பவுண்டிங் வரி
40 இலட்சம் ஆண்டு வணிகம் 40 ஆயிரம் ரூபாய்கள் காம்பவுண்டிங் வரி
என 69 இலட்சம் வரை 69 ஆயிரம் வரி என கட்ட வேண்டி வரும்.
பெரும்பாலான வணிகர்கள் இந்த முறையே தங்களுக்கு இடையூறு இல்லாதது எனக் கருதிக் கொண்டு தங்களை காம்பவுண்டிங் டேக்ஸ் முறையில் உட்படுத்திக் கொள்ள தயாராகி வருகின்றனர்.
இந்த முறைக்கு மாற விரும்பும் வணிகர்கள் தேவையின்றி அனாவசியமாக வரி விதிப்பில் தங்களை பிணைத்துக் கொண்டு ஏற்கனவே உள்ள வணிகச் சுமையை மேலும் அதிகமாக்கிக் கொண்டு தங்கள் உழைப்பை வீண் செய்யத் தயாராகின்றனர் என்பதுதாம் உண்மை.
இதோ 20 இலட்சத்திற்கு உள்ளேயே வணிகம் செய்யும் சிறிய வணிகர்கூட கூடுதலாக எவ்வித வரிச் சுமையும் இன்றி தங்களை ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு உட்படுத்திக் கொண்டு வணிகம் செய்ய முடியும் என்பதைச் சுலபமாகக் புரிந்து கொள்ளும் விதமாக விளக்கியுள்ளேன்.
உதாரணத்திற்கு ஒருவர் ஆண்டுக்கு 12 சதவிகித வரியுள்ள பொருட்களை 15 இலட்சத்திற்கு கொள்முதல் செய்து 20 சதவிகித இலாபம் வைத்து விற்பனை செய்கிறார் என வைத்துக் கொள்வோம்.
அவர் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் தன்னை இணைத்துக் கொண்டு வணிகம் செய்தால் அவரது வரி விதிப்பு முறை கீழ்க்கண்டவாறுதான் இருக்கும்.
ஆண்டு மொத்த கொள்முதல் வரியுள்ள பொருட்கள் வரிக்கு முன்பு = 15 இலட்ச ரூபாய்கள்
ஜிஎஸ்டியில் அதற்கு அவர் செழுத்தும் மத்திய மாநில வரிகள் = 180000 ரூபாய்கள்.;.
15 இலட்சம் மதிப்புள்ள வணிகத்திற்கு 20 சத லாபம் சேர்த்து
அவர் பொதுமக்களிடம் விற்பனை வரியாக வசூலிப்பது = 216000 ரூபாய்கள்.
விற்பனையில் வசூலித்த வரியைக் கொள்முதல் வரியிலிருந்து
கழித்துக் கொண்டு அவர் அரசுக்கு செழுத்த வேண்டிய தொகை = 36000 ரூபாய்கள்.
இது ஒரு ஆண்டுக்கான கணக்கு.
இதை அரசுக்கு தங்களின் கொள்முதல் மற்றும்
விற்பனைக்கேற்ப மாதாமாதம்கட்டுவது சராசரியாக = 3000 ரூபாய்கள்தாம்.
இந்த தொகை முழுவதும் வணிகர் தனது சொந்த லாபத்திலிருந்து கட்டுவதே கிடையாது.
வாங்கிய கொள்முதலுக்கு உரிய வரித்தொகையை பொதுமக்களுக்கு பில் போட்டு விற்பனை செய்து வசூலிக்கும் வரித்தொகையில் கழித்துக் கொண்டு உபரியாக உள்ள வரித் தொகையைத்தான் மத்திய மாநில அரசுகளுக்கு வரியாகக் கட்டுகிறார்.
கணினி இல்லாத வீடுகளே இல்லை எனும் நிலை இன்று உருவாகி உள்ளது. அரசே மடிக்கணியை இலவசமாக கொடுத்துள்ளதே இதற்கு சாட்சி.
கணினி வைத்திராத ஒருவர் 30 ஆயிரம் ரூபாயில் கணினி, பில்லிங் சாப்ட்வேர், பிரிண்டர் வாங்க முடியும்.
ஒரு ஆடிட்டரிடம் முறையாகத் தங்களின் வரவு செலவுக் கணக்கினைச் சமர்ப்பித்தால் (இன்றுள்ள அதிகமான வாடிக்கையாளர்களைக் கணக்கில் கொண்டு அவர் நியாயமாகத்தான் தனது சம்பளத்தை நிர்ணயிப்பார் என நினைக்கிறேன்) அதற்கும் ஆண்டிற்கு பத்தாயிரம்தான் கூடுதலாகச் செலவாகும்.
இதற்கு செலவிடும் தொகையை விட 20 இலட்சத்திற்கு மேல் 70 இலட்சம் வரை காம்பவுண்டிங் டேக்ஸ் முறையில் நுழைந்து ஒவ்வொரு ஆண்டும் தண்டமாக தனது சொந்த உழைப்பினை வணிகர்கள் வீண் செய்வது சரியா?
ஆக எவ்வித நட்டமும் இன்றி அரசுகளுடன் இணக்கமாகச் செயல்பட்டு ஆண்டுக்கு இருபது இலட்சம் வணிகம் உள்ள ஒரு சிறு வணிகர்கூட தனது வணிகத்தை ஜிஎஸ்டி வரி முறைக்கு மாற்றிக்கொண்டு மேற்கண்ட முறையில் செயல்பட்டால்
காம்பவுண்டிங் முறையில் நுழைந்து தங்களின் சொந்த பணத்தை இழப்பதை விட ஜிஎஸ்டி வரி முறையே மேல் என புத்தியுள்ள வணிகர்கள் இதனைப் பயன்படுத்திப் பயனடைவர் என நம்புகிறேன்.
மத்திய மாநில அரசுகளின் குழப்பமான வரி விதிப்பு முறைகளால் அதிகம் பாதிக்கப்பட்டு வணிகத்தை விட்டே விலகி வேலைக்கு வந்துவிட்ட ஒரு பாமரனின் எளிய வேண்டுகோள் இது.
வணிகர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

விற்பனைக்கேற்ப மாதாமாதம்கட்டுவது சராசரியாக

கருத்துகள்
கருத்துரையிடுக