துறவும் நிர்வாணமும்!
புத்தர் ஆசை துறந்தார். துறவியானார்.
புத்தருக்கு ஆசையின்றிப்போனாலும் அவருக்குச் சீடர்கள் உருவாகினர். புத்தருக்குப் பின் சீடர்களின் ஆசையே புத்த மதமாகி இன்று உலகெங்கும் பரவி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலச் செயல்படுகிறது.
நிர்வாணத்தை வலியுறுத்தும் சமண மதமும் இதே நிலைதான்.
ஆதி சங்கரர், விவேகானந்தர் போன்றவர்களால் துவக்கப்பட்ட அமைப்புகள் துவங்கி
இன்றுள்ள ஆனந்தர்கள், ஸ்ரீஸ்ரீக்கள், சத்குருக்கள், மடாதிபதிகள் என அனைவரும் துறவுக்குப் பின்னரே தங்களின் நிலைப்பாட்டை பொன், மண்,பொருட் சேர்க்கைகளோடு தம்மைப் பின்பற்றும் சீடர்களோடு கார்ப்பரேட் நிறுவனர்களாக உலா வருகின்றனர்.

ஒருவரின் துறவுக்குப் பின்னர் அவரால் ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் அது குறித்து சர்ச்சைகளும் எழுவதைப் படித்தும் நடைமுறையில் காண்பதாலும்
துறவுக்கும் நிர்வாணத்திற்கும் உரிய இலக்கணத்தைப் படித்துத் தொலைத்ததாலோ என்னவோ
நிர்வாண ஆசையைக் குளியலறையிலும், துறவு ஆசையைக் கல்லறையிலும் புதைத்து விட முடிவு செய்தோம்.
எம்முடைய துறவால் இன்னொரு கார்ப்பரேட் மதமோ, அமைப்போ இந்த பூமியில் உருவாகித் தொலைந்து அதனை எவர் நிர்வகிப்பதென்று ஒரு சாதிச் சண்டை உருவாகி விடக் கூடாதே என்ற நல்லெண்ணம்தான் இதற்கும் காரணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக