எது இலாபம்?
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையும் முன்பு அமலில் இருந்த வாட் வரி விதிப்பு முறையும் ஒன்றேதான். வாட் வரி விதிப்பிற்கு உட்படாமல் அடம் பிடித்த வணிகர்கள் இப்பொழுதும் இந்த வரி விதிப்பிற்கு தங்களை உட்படுத்திக் கொள்ள முன் வராமல் இருப்பார்கள் என்று கருதிதான் மத்திய அரசு காம்பவுண்டிங் டேக்ஸ் என்ற முறையைப் புதிதாகப் புகுத்தியுள்ளது. அதன்படி 20 இலட்சத்திற்கு கீழ் உள்ள வணிகர்கள் ஜிஎஸ்டி வணிகத்திற்கு வேண்டியதில்லை என்றும் 20 இலட்சம் முதல் 70 இலட்சம் வரை உள்ள வணிகர்கள் தங்களின் ஆண்டு விற்பனையில் ஒரு சதவிகிதத்தை கட்டினால் போதுமென்றும் விளக்கமளித்துள்ளது. இதன்படி உள்ளவர்கள் 20 இலட்சத்திற்கு மேல் 30 இலட்சம் ஆண்டு வணிகம் 30 ஆயிரம் ரூபாய்கள் காம்பவுண்டிங் வரி 40 இலட்சம் ஆண்டு வணிகம் 40 ஆயிரம் ரூபாய்கள் காம்பவுண்டிங் வரி என 69 இலட்சம் வரை 69 ஆயிரம் வரி என கட்ட வேண்டி வரும். பெரும்பாலான வணிகர்கள் இந்த முறையே தங்களுக்கு இடையூறு இல்லாதது எனக் கருதிக் கொண்டு தங்களை காம்பவுண்டிங் டேக்ஸ் முறையில் உட்படுத்திக் கொள்ள தயாராகி வருகின்றனர். இந்த முறைக்கு மாற விரும்பும்...