அடகுத் தமிழ் அறிவோம்
அன்னைத் தமிழில் ஏராளமான வடமொழிச் சொற்கள் புகுத்துப்பட்டு அவை இன்றளவும் நம் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தி வருகிறோம். வடமொழிச் சொற்கள் பெரும்பாலும் ன் ஸ் த் ப் என்ற மெய் எழுத்துகளை முதன்மையாக (<முக்கியமாக - முக்யம்) கொண்டவை. எனவே இவற்றை எளிதாக (<சுலபமாக - சுலப்) வடமொழிச் சொற்கள் என்று நாம் புரிந்து கொண்டு அவற்றை தவிர்த்து நம் அன்னைத் தமிழில் அதற்கெனப் பொருள் தரும் சொற்களைப் பயன்படுத்த முடியும். பிரபஞ்சம் தரும் எமது ஆழ்மன உணர்வின்படி வடமொழிக்கு எழுத்து வடிவமும் சொற்களும் வழங்கியதே நம் தமிழன்னைதான் என உறுதியாகச் சொல்ல முடியும். தமிழின் பெரும்பாலான எழுத்துக்களே வடமொழியில் இருப்பதே இதற்குச் சான்றாகும். அது சரி எவையெல்லாம் வடமொழிச் சொற்கள் என்று இன்னும் எளிதாக நாம் கண்டறிவது என்ற உங்கள் கேள்விக்கான பதிலை நம் தமிழன்னையே மிக அருமையாக விளக்கி உள்ளார். தமிழின் முதல் எழுத்து அகரம் எனத்தான் துவங்குகிறது. நம் அன்னைத் தமிழில் கலந்து விட்ட வட மொழிச் சொற்களின் முன் எழுத்தாக இந்த அகரம் எனும் சிகர எழுத்தை நாம் சேர்த்துப் பார்த்தாலே போதும் அவை வடமொழிச் சொற்கள்தான் என்பது உறுதிய...