நீ தமிழனா
வீட்டின் முன்னே திண்ணை கட்டு வழிப்போக்கர்கள் வந்தால் நல்வரவு என்று இன்முகம் காட்டி வரவேற்று உன் வீட்டுத் திண்ணையில் இளைப்பாற இடம் கொடு வெயிலில் நடந்து களைத்து தவித்த வாய்க்கு தண்ணீர் கொடு வெகு தொலைவில் இருந்து வந்திருந்து பசித்து இருந்தால் உணவு கொடு வழிப்போக்கர் மனம் நிறைவானவுடன் உங்கள் பயணம் சிறப்பாக அமைய உன் குடும்பத்தின் சார்பாக வாழ்த்து உங்கள் பயணம் முடிந்து திரும்பி வரும்போது எங்களிடம் ஏதேனும் உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள் என்று இன்முகம் காட்டி அனுப்பி வை இது சங்க காலம் பாகிஸ்தான் மீது நம் ராணுவம் குண்டு மழை பொழிந்தது தெருவெங்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்ட நடனங்கள் சிந்து நதிநீரை பாகிஸ்தான் செல்ல விடாமல் இந்தியா தடுத்து விட்டதாம் இனி அவர்கள் விவசாயம் செய்ய முடியாமல் போகட்டும் குடிக்க தண்ணீர் இல்லாமல் அலையட்டும் அந்த நாட்டு மக்கள் தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொத்துக் கொத்தாக மடிவதை தொலை ஊடகங்களில் கண்டு கைகொட்டி ரசித்து சிரியுங்கள் நேற்று வரை பாய் வீட்டு பிரியாணி அருமையாக இருந்தது என்று அவர்கள் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு வந்த அதே ...