நீ தமிழனா

 வீட்டின் முன்னே திண்ணை கட்டு 

வழிப்போக்கர்கள் வந்தால் நல்வரவு என்று இன்முகம் காட்டி வரவேற்று  

உன் வீட்டுத் திண்ணையில் இளைப்பாற இடம் கொடு 

வெயிலில் நடந்து களைத்து தவித்த வாய்க்கு தண்ணீர் கொடு

வெகு தொலைவில் இருந்து வந்திருந்து பசித்து இருந்தால் உணவு கொடு 

வழிப்போக்கர் மனம் நிறைவானவுடன் உங்கள் பயணம் சிறப்பாக அமைய உன் குடும்பத்தின் சார்பாக வாழ்த்து

உங்கள் பயணம் முடிந்து திரும்பி வரும்போது எங்களிடம் ஏதேனும் உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள் என்று இன்முகம் காட்டி அனுப்பி வை

இது சங்க காலம்

பாகிஸ்தான் மீது நம் ராணுவம் குண்டு மழை பொழிந்தது

தெருவெங்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்ட நடனங்கள்

சிந்து நதிநீரை பாகிஸ்தான் செல்ல விடாமல் இந்தியா தடுத்து விட்டதாம்

இனி அவர்கள் விவசாயம் செய்ய முடியாமல் போகட்டும் 

குடிக்க தண்ணீர் இல்லாமல் அலையட்டும்

அந்த நாட்டு மக்கள் தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொத்துக் கொத்தாக மடிவதை தொலை ஊடகங்களில் கண்டு கைகொட்டி ரசித்து சிரியுங்கள்

நேற்று வரை பாய் வீட்டு பிரியாணி அருமையாக இருந்தது என்று அவர்கள் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு வந்த அதே வாய்

இன்று இஸ்லாமிய அடையாளத்துடன் தெருவில் எவரேனும் நடந்து சென்றால் கூட எரித்து விடும் பார்வை

கொன்று புதைக்க வேண்டும் என்ற கொலை வெறி 

ஊடகங்களில் வரும் போர் செய்திகளை ரசித்து ரசித்து உங்கள் ரத்தம் கொதிக்கிறது

 உங்கள் நரம்புகள் புடைக்கின்றன 

இபிஎஸ் ஆணையிட்டால் ஆயிரம் வீரர்களுடன் போர்க்களம் செல்ல தயார் என குங்குமம் வைத்த பெண் முக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆவேசம் பொங்கும் வீரவசனம் வாய்ச் சவுடால் பேர்வழி

எங்கோ டெக்சாஸ் மாநிலத்தில் எவன் செலவிலோ சுற்றிவிட்டு ஊர் திரும்பிய ஆடு அண்ணாமலை வாய்ச்சவடால் கேட்டு உள்ளம் பூரிக்கும் 

நீ தமிழனா

பத்தாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிய நீ தமிழனா

என்று என்னை பார்த்து 

ஞான தேசிக சித்தர் 

சிவன்மலை அடிவாரத்தில் கடுமையாக தன் கண்களில் நீர் வழிய எரித்து விடும் பார்வை பார்த்து எனக்குள் ஏதோ மறைபொருளாக உணர்த்திய செயலுக்கு விடை தேடினேன் 

இன்று அந்த முருகனின் பார்வையாக என்னுள் அவரது வார்த்தைகளும் பார்வையும் சுட்டெரிக்கின்றது

இந்த ரத்த வெறி கேட்கும் யுத்த பூமியில் பிறந்து தொலைத்த நான் தமிழனே அல்ல 

தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே அவர்க்கோர் குணமுண்டு 

அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும் 

என்றும் 

கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருது 

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர் 

என்றும் விடுதலைப் போருக்கு அகிம்சை எனும் ஆயுதத்தை ஏந்தி வரவேண்டும் என்று

ஒரு காந்தியவாதியாக ஏன் பாடினீர்கள் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அவர்களே 

உங்கள் பார்வையிலும் இந்த அணு ஆயுத இரத்த வெறி கொண்ட பூமியில் பிறந்து தொலைத்த 

நான் ஒரு தமிழனே அல்ல நாயினும் கடையேன்






























கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!