ஒற்றை இலக்கப் பரிதாப மார்ச்சியம்
மார்ச்சிய லெனினியப் பார்வையில் சங்க இலக்கியம் என்ற ஒரு நூலை 1987 வாக்கில் ஈரோடு பள்ளிபாளையம் பகுதி வாழ் கம்யூனிச(தோற்றுப் போன) சிந்தனையாளர் எழுதியதை இன்று படிக்க நேர்ந்தது.
அவர் வாழ்ந்த காலகட்டத்தில், இளம் வயதில் ஏற்பட்ட எழுச்சி காரணமாக மார்க்சியத் தத்துவத்தில் ஈர்க்கப்பட்ட அவர் அன்றைய சூழலுக்கு ஏற்றவாறு எழுதப்பட்ட நூல் அது.
சங்கம் என்ற சொல் பவுத்த சமணத்துக்கு உரியதாம்.
கழகம் என்ற சொல்லே சரியானதாம்.
இரு பெரும் திராவிட ஊழல் கழகங்களிடம் தேர்தல் காலங்களில் ஒற்றை இலக்கத் தொகுதிகள் கேட்டு மடிப்பிச்சை ஏந்தும் மார்ச்சிய இயக்கத்தின் இன்றைய அவலநிலை அறியாத சிந்தனையாளர்.
சங்கம் என்ற சொல் சங்கமித்த என்பதாக பொருள் படும்.
குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் படிப்படியாக கடல் கோளுக்கு ஆளாகும் போதெல்லாம் தம் நிலப்பரப்பை தெற்கிலிருந்து அவ்வப்போது இழந்து வந்துள்ள ஒவ்வொரு காலகட்டத்திலும்
தாங்கள் நிறுவிய தமிழ் ஆராய்ச்சி சபைகளை முறையே முதல் தமிழ்ச்சங்கம் இடை தமிழ்ச்சங்கம் கடை தமிழ்ச் சங்கம் என்றுதான் அழைத்து வந்துள்ளனர்
இன்றைக்கு மதுரையில் இருப்பது நான்காம் தமிழ்ச் சங்கம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த வரிசையில் தமிழ் மொழிக்கு தொண்டு செய்ய ஏராளம் பேர் இருப்பதால் அதற்கு எனக்கு வேலை இல்லை என்று கருதி
தமிழர் பண்பாடு தமிழர் நாகரிகம் தமிழர் அரசியல் தமிழர் அறிவியல் தமிழர் மருத்துவம் தமிழர் வேளாண்மை தமிழர் கட்டுமானம் தமிழர் பொறியியல் போன்ற தமிழர்கள் இழந்த அனைத்து உரிமைகளையும் மீட்டெடுத்து
வரலாறு தன்னையே திருப்பிக் காட்டி
தமிழ் அன்னையின் அடிமை விலங்கை தகர்த்தெறிந்து
தமிழ் அன்னை உலகிற்கு தலைமை தாங்கி வழி நடத்த அரியணை ஏறிட
தமிழ்க்கடவுள் குமரனின் தலைமையில் சித்தர்கள் வழி நடத்த என்னைக் கருவியாக்கி துவக்கப்பட்ட
இந்த ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்றாவது ஒருநாள் வரலாறு தன்னையே திருப்பிக் காட்டும் நிகழ்வை உருவாக்கும்
தமிழ் அன்னையின் அடிமை விலங்கை தகர்த்து எரியும் கடமையை நிறைவேற்றியே தீரும்
கருத்துகள்
கருத்துரையிடுக