இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாங்க ரொம்ப நல்லா இருக்கோம்

தலைப்பு தமிழக மக்களுக்கு தான்  பதிவில் உள்ளவை கேள்விகளா அல்லது பதில்களா? இரண்டிற்கும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம் என்றால் வருகின்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் இருவருக்கும் தாராளமாக ஓட்டு போடுங்கள். எங்கள் சாலைகள் உலகத் தரத்தில். போக்குவரத்து நெரிசல்கள் என்பது அறவே இல்லை எனவே டோல்கேட் வசூல் பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்கள் விசாலமான தெருக்களில் சாலை வசதி, சாக்கடைகள் அடைபட்டு மழைகாலங்களில் வீடுகளில் புகாதவாறு சிறப்பான முறையில் பராமரிக்கபடுகின்றன. சாதிகளை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். சாதி மத சண்டைகள் இயல்பானவை. சாதிகளும் மதங்களும் எங்களுக்கு நல்ல வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுக்கும் என்று நம்புகிறோம். விலைவாசிகள் எங்கள் வருமானத்திற்கு ஏற்றவாறு கட்டுபடியாகும் விலையில் கிடைக்கின்றன. அரசியல், சாதிய மதவாத இயக்கங்கள் நடத்தும் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் இவைகளால் எங்களுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படுவதில்லை.  அரசின் திட்டங்கள், கட்டுமானங்கள் உலக தரத்தில் உள்ளன. இப்போது என்ன இந்த நிலை எங்களுக்கு மன நிறைவாக உள்ளது. எனவே இந்த நிலை தொடர்ந்தாலே போதும். இலவச திட்டங்கள் எங்களுக்கு இப்...