நாங்க ரொம்ப நல்லா இருக்கோம்

தலைப்பு தமிழக மக்களுக்கு தான் 

பதிவில் உள்ளவை கேள்விகளா அல்லது பதில்களா?

இரண்டிற்கும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம் என்றால்

வருகின்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் இருவருக்கும் தாராளமாக ஓட்டு போடுங்கள்.

எங்கள் சாலைகள் உலகத் தரத்தில். போக்குவரத்து நெரிசல்கள் என்பது அறவே இல்லை எனவே டோல்கேட் வசூல் பற்றி எங்களுக்கு கவலையில்லை.

எங்கள் விசாலமான தெருக்களில் சாலை வசதி, சாக்கடைகள் அடைபட்டு மழைகாலங்களில் வீடுகளில் புகாதவாறு சிறப்பான முறையில் பராமரிக்கபடுகின்றன.

சாதிகளை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். சாதி மத சண்டைகள் இயல்பானவை. சாதிகளும் மதங்களும் எங்களுக்கு நல்ல வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுக்கும் என்று நம்புகிறோம்.

விலைவாசிகள் எங்கள் வருமானத்திற்கு ஏற்றவாறு கட்டுபடியாகும் விலையில் கிடைக்கின்றன.
அரசியல், சாதிய மதவாத இயக்கங்கள் நடத்தும் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் இவைகளால் எங்களுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படுவதில்லை. 

அரசின் திட்டங்கள், கட்டுமானங்கள் உலக தரத்தில் உள்ளன. இப்போது என்ன இந்த நிலை எங்களுக்கு
மன நிறைவாக உள்ளது. எனவே இந்த நிலை தொடர்ந்தாலே போதும்.

இலவச திட்டங்கள் எங்களுக்கு இப்பொழுது இருப்பதை விட இன்னும் அதிகம் தேவை. 

குடி போதையில் மிதக்கும் நபர்கள் எங்களுக்கு தொல்லை தருவதில்லை குடியற்ற சமுதாயம் சாத்தியமில்லை என்பதால் நாங்கள் இதை சகிப்புடன் ஏற்றுக் கொண்டு வாழ்வோம்

கல்விக் கட்டணங்கள் எங்களுக்கு சிரமம் தருவதில்லை

அரசு மருத்துவம், தனியார்  மருத்துவமனைகள் சிறப்பாக உள்ளன. அவைகள் எங்கள் பொருளாதார நிலையை பாதிக்கவில்லை
அரசு வேலைகளுக்கு லஞ்சம் கொடுப்பதில் தவறு ஏதுமில்லை எங்களுக்கு வேலை விரைவாக முடித்துக் கொடுக்க எவ்வளவு வேண்டுமானாலும் லஞ்சம் கொடுக்க நாங்கள் தயார் 

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதுமில்லை காவல்துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர். 

தமிழ்நாட்டில் வம்பு வழக்குகள் தினசரி நடப்பது ஊழல் திராவிடம் VS அதர்ம சனாதன மட காட்டுமிராண்டி மடவாதிகள் இருவருக்கும் இடையேதான்.

இந்த இரண்டு சாம்ராஜ்யங்களுக்கு இடையில் தான் நசுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை 

இருவருமே கார்பொரேட் அளவில் வளர்ந்து செல்வச் செழிப்புடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வருவது கண்கூடான உண்மை.

இந்த இரண்டு சாம்ராஜ்யங்களின் இலக்கு வருகின்ற 2026 தேர்தல் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!