இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ தமிழனா

 வீட்டின் முன்னே திண்ணை கட்டு  வழிப்போக்கர்கள் வந்தால் நல்வரவு என்று இன்முகம் காட்டி வரவேற்று   உன் வீட்டுத் திண்ணையில் இளைப்பாற இடம் கொடு  வெயிலில் நடந்து களைத்து தவித்த வாய்க்கு தண்ணீர் கொடு வெகு தொலைவில் இருந்து வந்திருந்து பசித்து இருந்தால் உணவு கொடு  வழிப்போக்கர் மனம் நிறைவானவுடன் உங்கள் பயணம் சிறப்பாக அமைய உன் குடும்பத்தின் சார்பாக வாழ்த்து உங்கள் பயணம் முடிந்து திரும்பி வரும்போது எங்களிடம் ஏதேனும் உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள் என்று இன்முகம் காட்டி அனுப்பி வை இது சங்க காலம் பாகிஸ்தான் மீது நம் ராணுவம் குண்டு மழை பொழிந்தது தெருவெங்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்ட நடனங்கள் சிந்து நதிநீரை பாகிஸ்தான் செல்ல விடாமல் இந்தியா தடுத்து விட்டதாம் இனி அவர்கள் விவசாயம் செய்ய முடியாமல் போகட்டும்  குடிக்க தண்ணீர் இல்லாமல் அலையட்டும் அந்த நாட்டு மக்கள் தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொத்துக் கொத்தாக மடிவதை தொலை ஊடகங்களில் கண்டு கைகொட்டி ரசித்து சிரியுங்கள் நேற்று வரை பாய் வீட்டு பிரியாணி அருமையாக இருந்தது என்று அவர்கள் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு வந்த அதே ...

ஒற்றை இலக்கப் பரிதாப மார்ச்சியம்

மார்ச்சிய லெனினியப் பார்வையில் சங்க இலக்கியம் என்ற ஒரு நூலை 1987 வாக்கில் ஈரோடு பள்ளிபாளையம் பகுதி வாழ் கம்யூனிச(தோற்றுப் போன)  சிந்தனையாளர் எழுதியதை இன்று படிக்க நேர்ந்தது. அவர் வாழ்ந்த காலகட்டத்தில், இளம் வயதில் ஏற்பட்ட எழுச்சி காரணமாக மார்க்சியத் தத்துவத்தில் ஈர்க்கப்பட்ட அவர் அன்றைய சூழலுக்கு ஏற்றவாறு எழுதப்பட்ட நூல் அது. சங்கம் என்ற சொல் பவுத்த சமணத்துக்கு உரியதாம். கழகம் என்ற சொல்லே சரியானதாம்.  இரு பெரும் திராவிட ஊழல் கழகங்களிடம் தேர்தல் காலங்களில் ஒற்றை இலக்கத் தொகுதிகள் கேட்டு மடிப்பிச்சை ஏந்தும் மார்ச்சிய இயக்கத்தின் இன்றைய அவலநிலை அறியாத சிந்தனையாளர். சங்கம் என்ற சொல் சங்கமித்த என்பதாக பொருள் படும்.  குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் படிப்படியாக கடல் கோளுக்கு ஆளாகும் போதெல்லாம் தம் நிலப்பரப்பை தெற்கிலிருந்து அவ்வப்போது இழந்து வந்துள்ள ஒவ்வொரு காலகட்டத்திலும் தாங்கள் நிறுவிய தமிழ் ஆராய்ச்சி சபைகளை முறையே முதல் தமிழ்ச்சங்கம் இடை தமிழ்ச்சங்கம் கடை தமிழ்ச் சங்கம் என்றுதான் அழைத்து வந்துள்ளனர்  இன்றைக்கு மதுரையில் இருப்பது நான்காம் தமிழ்ச் சங்கம் என்று அழைக்க...