வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்த பாடங்கள்! வினையான விளையாட்டு!
எனக்கு நான்கு வயது இருக்கும்போது நடந்த சம்பவம் இது. விடுமுறை நாட்களில் எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான தோட்டத்திற்கு சென்று விளையாடுவது சிறுவர்களாகிய எங்களது வழக்கம். அவ்வாறே ஒரு விடுமுறை நாளின் காலைப் பொழுதில் தோட்டத்திற்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்தோம். பல்வேறு விளையாட்டுகள் விளையாடி முடித்தவுடன் வேறு புதிதாக ஏதாவது விளையாடுவதென முடிவெடுத்து தோட்டத்துத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டிகளுக்கு எங்களில் யாரோ கன்றுக்குட்டிக்கு எண்ணை தேய்த்துவிடுகிறேன் என்று கூறிக்கொண்டு தொழுவத்தின் சுவர் மீதிருந்த ஒரு புட்டியில் இருந்த திரவத்தை எடுத்து கன்றுக்குட்டிகளுக்கு தேய்த்துவிட்டு பின்னர் தலைவாரி விளையாடினோம். சிறிது நேரம் சென்றபின் அந்த விளையாட்டும் சலித்துவிட அங்கிருந்து அகன்று வேறு விளையாட்டில் திளைத்திருந்தோம். வெளியில் சென்றிருந்த தோட்டக்காவலர் தொழுவத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் கண்ட காட்சியை கண்டு திடுக்கிட்டு உடனடியாக எங்களின் உணவகத்திற்கு விரைந்து சென்று தகவல் தர மேலும் சிலர் அங்கு வந்து குவிந்தனர். விபரம் அறிந்த எங்களின் பாட்டியும...