புதுமைப் பெண்களடா
தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா என்று பெண்மையைப் போற்றிய பாரதி "நாடும் தாயும்" போற்றுதலுக்கு உரியவர்கள் எனத் தம் கவிகளால் முழங்கியவர். பாரதி கண்ட "புதுமைப் பெண்கள் என நம் பாரத தேசத்திலும் தமிழகத்திலும் ஏராளமான புதுமைப் பெண்கள் வலம் வந்தாலும், நம் நாட்டில் இன்னும் பெண்ணடிமை, பெண்களைக் கேலிப் பொருளாக்குதல், வன்கொடுமை, பெண்களை மூடத்தன்மையில் புகுத்திவைத்து சாமியார்கள் கூட்டம் காசு பார்ப்பது, தொலைக்காட்சிகளில் சோதிடர்கள் அபத்தமாக பேசிப் பெண்களின் பொன்னான நேரத்தை வீணடிப்பது என ஏராளமான பழமையான பிற்போக்குத்தனங்கள் இன்னும் குறையவே இல்லை என்பதுதாம் வேதனைக்குரியது. வரதட்சணைக் கொடுமைகள், பெண்களைத் துயரத்தில் ஆழ்த்தி வைக்கும் மதுபோதைக் கலாச்சாரம், நகையும், பணமுமே வாழ்க்கை என்ற தவறான கண்ணோட்டத்தில் கடவுள்களை அலங்கரித்து வழி நடத்தப்படுதல், பெண் சிசுக் கொலைகள், பெண்களுக்கு இன்றுவரை சரிக்குச் சமமான இட ஒதுக்கீடு இன்மை, என ஏராளமான அடக்குமுறைகளைப் பெண்கள் சமுதாயம் இன்றுவரை சந்தித்து வந்துள்ளது என்பதை விடச் சகித்து வந்துள்ளது எனவே க...