புதுமைப் பெண்களடா
தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா என்று பெண்மையைப் போற்றிய பாரதி "நாடும் தாயும்" போற்றுதலுக்கு உரியவர்கள் எனத் தம் கவிகளால் முழங்கியவர்.
பாரதி கண்ட "புதுமைப் பெண்கள் என நம் பாரத தேசத்திலும் தமிழகத்திலும் ஏராளமான புதுமைப் பெண்கள் வலம் வந்தாலும்,
நம் நாட்டில் இன்னும் பெண்ணடிமை, பெண்களைக் கேலிப் பொருளாக்குதல், வன்கொடுமை, பெண்களை மூடத்தன்மையில் புகுத்திவைத்து சாமியார்கள் கூட்டம் காசு பார்ப்பது,
தொலைக்காட்சிகளில் சோதிடர்கள் அபத்தமாக பேசிப் பெண்களின் பொன்னான நேரத்தை வீணடிப்பது
என ஏராளமான பழமையான பிற்போக்குத்தனங்கள் இன்னும் குறையவே இல்லை என்பதுதாம் வேதனைக்குரியது.
வரதட்சணைக் கொடுமைகள், பெண்களைத் துயரத்தில் ஆழ்த்தி வைக்கும் மதுபோதைக் கலாச்சாரம்,
நகையும், பணமுமே வாழ்க்கை என்ற தவறான கண்ணோட்டத்தில் கடவுள்களை அலங்கரித்து வழி நடத்தப்படுதல்,
பெண் சிசுக் கொலைகள், பெண்களுக்கு இன்றுவரை சரிக்குச் சமமான இட ஒதுக்கீடு இன்மை, என ஏராளமான அடக்குமுறைகளைப்
பெண்கள் சமுதாயம் இன்றுவரை சந்தித்து வந்துள்ளது என்பதை விடச் சகித்து வந்துள்ளது எனவே கருதலாம்.
எந்தப் பெண்ணைக் கண்டாலும் தன் பாட்டியாக, தாயாக, சகோதரியாக, தங்கையாக, மகளாக அந்தந்த வயதிற்குரிய மரியாதையினை
மதித்து வழங்கிடவும், பெண் இல்லாத உலகம் ஒரு உலகமே இல்லை என்பதை நினைந்தும்
தன்னைத் திருமணம் செய்து கொண்டு தங்களைப் போன்று எனக்கு ஒரு குழந்தை தாருங்கள் என வேண்டிய ஒரு பெண்ணிடம்
அதற்கு நீங்கள் ஏன் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்
இதோ இன்று இந்த நிமிடம் முதல் என்னை உங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் "தாயே"
என்று தாய்மையின் சிறப்பை உலகிற்கு இயம்பிய விவேகானந்தரும்,
அண்ணல் காந்தியும், தந்தை பெரியாரும், மகாகவி பாரதியும், இன்னும் பெண்களுக்கெனப் போராடிய இன்னும் போராடி வரும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை வழங்கி,
உலகெங்குமுள்ள பெண்கள் அனைவரும், துயரின்றி, ஆணுக்குப் பெண் சரிநிகர்ச் சமானமெனும்
கவி பாரதியின் அமுதமொழிக்கேற்ப வாழ்வின் அனைத்து வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழப் பிரபஞ்சப் பேராற்றல் துணை நிற்க வேண்டுமென ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இதயம் நிறைந்து வேண்டி
"அம்மா" "சின்னம்மா" எனத் தவறு செய்தவர்களின் ஊழல் தலைமையை ஏற்று நடித்த, நடிக்கிற
ஆண்களின் சர்வாதிகார ஆணவ ஆட்சி முறைக்கு மாறாக
240 தொகுதிகளிலும் (நியமனம் உட்பட) பெண் வேட்பாளர்களே "நின்று"
"வென்று"
புதிய உலக சாதனை படைத்தது
தமிழகப் பெண் இனம் என உலக வரலாற்றில்
பொன்னெழுத்துக்களால் பதிவு செய்ய
ராணி மங்கம்மாக்கள், வேலு நாச்சியார்கள், குந்தவை பிராட்டிகள், ஒவையார்கள்,
எழுத இடம் போதாது
அழைக்கின்றார்
பேரறிஞர் அண்ணா
தந்தை பெரியார்
கர்ம வீரர் காமராஜர் அருமை மிகும் தமிழகத்தின் துயர் துடைக்க எண்ணி!
தெகுரா!!
ஐந்தாம் தமிழ்ச் சங்கம்!!!
உலகம்!!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக