கணினி வேலை செய்யும் பெண்களின் கனிவான கவனத்திற்கு

என்னுடைய 45 வயது முதல் தற்போது வரை சொந்த வணிகத்தில் இருந்து விட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை.

இது வரை எட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளேன். இங்கு பணியாற்றிய சக இளைய சமுதாயப் பெண்கள் அனைவருமே பின் வரும் தவறுகளைச் செய்து வருவதை நான் வேதனையுடன் அனுமானித்து வந்துள்ளேன்.

தங்களுக்கு ஒதுக்கி உள்ள கணினிகளை விசைப் பலகை உட்பட தினசரி வேலை துவக்கும் முன்பு சுத்தம் செய்தல் கிடையாது. நாட்கணக்கில் இவை தூசு படிந்த நிலையில் அப்படியே பயன்படுத்துவர்.

தாங்கள் அமரும் இருக்கையைக்கூடச் சுத்தம் செய்தல் கிடையாது. மேலும் துப்புரவுப் பணியாளர் வரவில்லை அல்லது அவர் வரத் தாமதம் ஆனால் தங்களின் இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு அமர்ந்து பணி செய்வதும் கிடையாது.

கோப்புகளைப் பராமரிப்பதில் கூட இதே நிலை. தூசு பறக்கும். மேலும் கணினியில் தாங்கள் செய்யும் வேலைகளை முறையாக ஒரு கோப்பில் இட்டுப் பராமரிப்பதும் கிடையாது.

சக நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் அதன் காரணமாக அதி அவசியமான வேலைகளை அரை குறையாகச் செய்து உரிமையாளர் அல்லது மேலாளர்கள் வசம் திட்டு வாங்குவதும் 

போதாக்குறைக்கு கைபேசியில் மணிக்கணக்கில் தேவையற்ற அரட்டை அடிப்பதும் கூடுதல் தவறு.

சுத்தமின்றி வேலை செய்யும் போது மனதுக்குள் ஒரு எரிச்சல் உணர்வு உங்களை அறியாமலேயே ஏற்படும் என்பதையும் அதன் காரணமாகவும் கூடத் தப்புத் தப்பாக வேலை செய்ய நேரிடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு கொடுக்கும் வேலையைச் சரிவர துரிதமாக முடித்து நல்ல பெயர் எடுத்தால்தான் நீங்கள் நல்ல உழைப்பாளி என்று நிர்வாகம் முடிவு செய்து சம்பள உயர்வு கிடைக்கும். அல்லது நீங்களே உங்கள் வேலைத் திறனை எடுத்துச் சொல்லி அதிக சம்பளம் கேட்கலாம்.

கடைசியாக

அலுவலகத்தில் நீங்கள் வேலை செய்யும் பாங்குதான் உங்கள் வீட்டிலும் இருக்கும் என்று உணர்வீர்கள் என்று நான் மட்டுமல்ல நீங்கள் வேலை செய்யும் நிறுவனமும் முடிவு செய்யும் என்பதை மறவாதீர்கள் 

இளைய சமுதாயப் பெண்களே

சுத்தம் என்பதை மறந்தால்
மனமும் குப்பை மேடுதான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!