இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்.

2017-ஏப்ரல் 2 அன்று காலை புதிதாகத் திருமணமாகிச் சேலத்தில் வசிக்கும் எனது மகளைக் காண்பதற்காக சேலம் செல்ல முடிவு செய்திருந்தோம். அன்று காலை 10.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்படும்போது எனது மனைவி ஒரு பொருளை எடுப்பதற்காக வீட்டின் அறைச்சுவற்றில் இருந்த கப்போர்டின் கண்ணாடியைத் தள்ள முற்பட அது திடீரென உடைந்து இரு துண்டாகி எனது மனைவியின் தலையில் மோத அதில் ஒரு கண்ணாடி அருகிலிருந்த படுக்கையில் விழ மற்றொன்றை எனது துணைவியார் பிடிக்க முயற்சித்த நிலையில் கை விரலைச் சற்றுக் காயப்படுத்திற்று. ஊருக்குப் புறப்படும் நேரத்தில் அபசகுனமாக எனது மனைவிக்கு அது பட்டாலும் பெரிய அளவில் எதுவும் நிகழாமல் சிறிய அளவில் நேர்ந்ததே நடப்பது நல்லதெற்கெனச் சமாதானப்படுத்தி சேலம் புறப்பட்டோம். பேருந்தில் ஏறி அமர்ந்தபின்பு ஓட்டுநருக்கு எதிரே இருந்த கண்ணாடியைக் காண்பித்து இது போன்ற கண்ணாடிகளை வீட்டு அலங்கார அலமாரிகளில் பயன்படுத்தினால் அவை உடையும்போதுகூட துண்டு துண்டாக உடையுமே தவிர ஆபத்து இராதென விளக்கியவாறு பயணித்தேன். சேலம் சென்று எனது மகளைச் சந்தித்த பின் புறப்பட்டபோது எனது சம்பந்திகள் எனத...

பல தொழில் கற்றல்

பல தொழில் கற்றல் பாகம் 1 இளம் வயதிலேயே எனக்கு பலவகையான தொழில்கள் கற்கும் வாய்ப்பு அமைந்தது.  மகுடஞ்சாவடியில் எனது தாய் வழித் தாத்தா அமரர் கந்தசாமி அவர்களை ஊரில் சோடாக்காரர் என்றால்தான் தெரியும். என்னையும் சோடாக்காரருடைய பேரனா என்றுதான் ஊரார் விசாரித்தறிவர்.  அந்த நாட்களில் குடிசைத் தொழிலாக விளங்கிய சோடா, மற்றும் குளிர்பானங்கள் தயாரித்து விற்றல், திருமணம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு ஒலி பெருக்கி, டியூப் லைட் ஒளி அமைத்தல், பெட்ரோமாக்ஸ் லைட் வாடகை, மற்றும் மிதிவண்டிகள் வாடகைக்கு விடல்,  சேலத்திலிருந்து உதிரியாக வாங்கி வந்து இணைத்த புதிய மிதிவண்டிகள் விற்பனை, பழைய மிதி வண்டிகளைப் பழுது பார்த்தல், அவ்வப்போது வரும் இரு சக்கர வாகனங்களின் பழுதுகளை நீக்குதல், மகிழுந்து மற்றும் சரக்கு வாகனங்களின் டயர் பஞ்சராவதைப் பழுது பார்த்தல் என அவரது தொழில்களின் வரிசை நீளும். பள்ளிக்குச் செல்லாத வயது துவங்கி பள்ளி இறுதிப் படிப்பு முடியும் வரை நான் பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் அங்குதான் தவம் கிடப்பேன். பள்ளிக் கல்வியோடு தொழிற்கல்வியும் எனக்கு ஏராளமாக அஙகுதான் கிட்டியது. பாகம் இரண்டு எனது ...

ஞான தேசிகன் சித்தர்

15.12.24 ஈரோடு மண்ணுக்கு நான் வந்தபோது எனது மைத்துனரின் சித்த மருத்துவ ஆசானாக அறிமுகம் ஆனவர்தாம் திரு ஞான தேசிகன் அவர்கள்.  அவரது மருத்துவ வித்தை குறித்தும் அவரிடமுள்ள ஆன்மீக சக்தி பற்றியும் எனது மைத்துனர் வாயிலாக அறியத் துவங்கிய நான் ஒரு நாள் அவரைச் சந்திப்பதற்காக அவரது சித்த மருத்துவமனை அமைந்திருந்த சிவன் மலை அடிவாரத்திற்குச் சென்றேன். என்னை ஒரு மகனைப் போல அன்பு காட்டி வரவேற்ற அவரை இரண்டாவது முறையாக நான் சந்தித்தபோதுதான் என்னை அறியாமலேயே அவரது வழி காட்டுதலுக்கு ஆளாகத் துவங்கினேன்.  இரண்டாவது முறை என்று நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் நான் முதன் முறையாக அவரைச் சந்தித்ததே கன்னியாகுமரியில்தாம். அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்ததற்கு முதல்நாள் எனது மனைவியின் அத்தை மகன் ராஜ்குமார் திருச்சியில் இருந்து என்னைக் காண்பதற்காக கருவூர் வந்திருந்தார்.  நான் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது எனது மூத்த மைத்துனர் குடும்பத்துடன் எனது மனைவியும் தவசி அவர்களுடன் கன்னியாகுமரிக்கு ஆன்மீகப் பயணமாகச் சென்று இருப்பதைப் பற்றி எடுத்துரைத்தேன்.  அதோடு விடாமல் நாம் இருவரும் கன்னியாகுமரிக்...

மதுரைக்கு வழி வாயிலே!

தமிழில் இப்படி ஒரு பழமொழி வழங்கி வருவது நாம் எல்லோரும் அறிந்ததே!  நான் வணிகம் செய்த காலத்தில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு சட்டம் கடுமையாக இருந்ததில்லை.  வணிகம் துவக்கிய ஆரம்ப நாட்களில் என்னுடைய வணிகம் மிகவும் குறைவாக  இருந்ததால் வேறு வழியின்றி நண்பர்களின் ஆலோசனையின் பேரில் ஒரு பனிரெண்டு வயதுச் சிறுவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டேன்! அந்தச் சிறுவனின் குடும்பம் நான் வசித்த இடத்திற்கு அருகில்தான் இருந்தது! மேலும் அந்தச் சிறுவனின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால் அவனது தாயார் மற்றும் சகோதரர்களின் உழைப்பில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.  இந்தக் காரணத்தினாலேயே அவனும் படிப்பதற்கு வழியின்றி என்னிடம் வேலைக்குச் சேர்ந்தான்! ஏழாம் வகுப்புதான் பயின்றிருந்தாலும் சுட்டியாக இருந்ததால் அவனை வங்கிகளுக்குச் சென்று பணம் செலுத்தி வரப் பழக்கினேன்! நண்பர்கள் பலமுறை எச்சரித்தாலும் என்னுடைய நம்பிக்கையும் அவனது துணிச்சலும் ஒரு முறைகூட வீணாகாமல் பணத்தைத் தொலைக்காமல் என்னிடம் அவன் வேலையில் இருந்தவரை வங்கிகளுக்கு ஆயிரக்கணக்கில்   எடுத்துச்சென்று பத்தி...

கணினி வேலை செய்யும் பெண்களின் கனிவான கவனத்திற்கு

என்னுடைய 45 வயது முதல் தற்போது வரை சொந்த வணிகத்தில் இருந்து விட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை. இது வரை பல நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளேன். இங்கு பணியாற்றிய சக இளைய சமுதாயப் பெண்கள் அனைவருமே பின் வரும் தவறுகளைச் செய்து வருவதை நான் வேதனையுடன் அனுமானித்து வந்துள்ளேன். தங்களுக்கு ஒதுக்கி உள்ள கணினிகளை விசைப் பலகை உட்பட தினசரி வேலை துவக்கும் முன்பு சுத்தம் செய்தல் கிடையாது. நாட்கணக்கில் இவை தூசு படிந்த நிலையில் அப்படியே பயன்படுத்துவர். தாங்கள் அமரும் இருக்கையைக்கூடச் சுத்தம் செய்தல் கிடையாது. மேலும் துப்புரவுப் பணியாளர் வரவில்லை அல்லது அவர் வரத் தாமதம் ஆனால் தங்களின் இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு அமர்ந்து பணி செய்வதும் கிடையாது. கோப்புகளைப் பராமரிப்பதில் கூட இதே நிலை. தூசு பறக்கும். மேலும் கணினியில் தாங்கள் செய்யும் வேலைகளை முறையாக ஒரு கோப்பில் இட்டுப் பராமரிப்பதும் கிடையாது. சக நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் அதன் காரணமாக அதி அவசியமான வேலைகளை அரை குறையாகச் செய்து உரிமையாளர் அல்லது மேலாளர்கள் வசம் திட்டு வாங்குவதும்  போதாக்குறைக்கு கைபேசியில் மணிக்கணக்கில் தேவையற்ற அரட்டை அடிப...