இடுகைகள்

ஊழலுக்குத் துணை போகும் கடவுள்கள்?

தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் இன்று ஆளும் இயக்கத்தவர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிப் பதவி இழந்த முன்னால் முதல்வரின் பிறந்த நாளுக்கு பல்வேறுவிதமான வேண்டுதல்களுடன் அவர் மீண்டும் அரியணை ஏற வேண்டுமென தடபுடலான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கோயில்கள் அருகில் மட்டுமல்ல கோயில்களின் உட்புறங்களிலும் ஆளும் இயக்கக் கொடி தோரணங்கள் பிரம்மாண்டமான கட்அவுட்டுகள் காண்போர் முகம் சுழிக்கும் வண்ணம் காட்சியளிக்கின்றன! கடவுளர்களும் ஊழலுக்குத் துணை போகின்றனரா எனும் எம் போனற பாமரர்களின் சந்தேகம், ஆளும் இயக்கத்தவர்களின் வேண்டுதல்கள் ஒரு வேளை நிறைவேறி முன்னாள் முதல்வர் அரியணை ஏறும் காலம் வரும்போதுதான் தீரும்! அப்படி ஒரு நிலை உருவானால் தமிழகத்தில் வாய்மை தோற்றுவிட்டதோடு மட்டுமன்றி கடவுள்கள் ஊழலுக்கும் துணை போவார்கள் என்றுதான் கருத வேண்டி வரும்!

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!

தமிழ்நாடெங்கும் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன!  உழுதுண்டு வாழும் வேளாண்மை செய்வோரின் இல்லங்களில் வேளாண் இடுபொருட்கள் நிறைந்து வழியும் வசந்த காலத்தின் துவக்கமே தை மாதமாகும்! பழையன கழிதலும் புதியன புகுதலும் தமிழர் மரபு! ஆரியம் வகுத்த தமிழ்ப் புத்தாண்டு துவங்குவதோ சித்திரை மாதக் கடும் கோடைக் காலததில்!  வறட்சியும், கடும் வெயிலும் வாட்டி வதைக்கும் இந்த மாதம் நிச்சயமாகப் பண்டைய தமிழர்தம் புத்தாண்டுத் துவக்கமாக இருந்திராது என்பது சித்தர்கள் தரும் பகுத்தறிவுச் சிந்தனையாகும்! பக்தி மார்க்க மதவாதிகள் மற்றும் கடவுள் மறுப்புப் பகுத்தறிவுவாதிகள் இருவரையும் தவிர்த்துத் தமிழக மக்கள் சித்தர் வழிப் பகுத்தறிவு கொண்டு சிந்தித்தால் தை மாதத் துவக்கமே தமிழ்ப்புத்தாண்டாகத் திகழ வேண்டும் என்பது தெளிவாகும்! திருவள்ளுவர் ஆண்டும் தை மாதத்தில்தான் துவங்க வேண்டும்! எனவே தமிழராய்ப் பிறந்த அனைவரும் பசுமையும் செழுமையும் ததும்பி, ஆறுகளும், ஏரிகளும் வழிந்து நிறைவாகத் துவங்கும் தை மாதத் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு ஆரியப் பழைய பஞ்சாங்கங்களைக் கழிந்...

பாரதியாரின் பிறந்தநாள்!

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று முழங்கிய மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று! மகாகவி நம் தாய்த்தமிழகம் எப்படியெல்லாம் திகழ வேண்டும் என்ற மாபெரும் கனவுகளுடன் வாழ்ந்து மறைந்தும் இன்றும் ஒரு தவச் சித்தராய்த் தமிழகத்தை தம் பாடல் வரிகளால் வழி நடத்துபவர்! அவரின் கனவுகள் அனைத்தும் நனவாகும் காலம் வெகு விரைவில் வருகிறது! ஐந்தாம் தமிழ்ச்சங்கம் மகாகவியின் கனவுகளைச் சுமந்து தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இன்னும் வேகமாகச் செயல்பட தமிழ்நாட்டில் வாழும் அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர வேண்டும் என அவர் பிறந்த இந்த நன்னாளில் பணிவன்புடன் வேண்டுகிறது!

தூய்மை பாரதம்! தூய்மைத் தமிழகம்!

நாடெங்கும் காந்திய வழியில் தூய்மைப் படுத்தும் திட்டத்தை பாரதப் பிரதமர் அவர்கள் அறிவித்து அவரே முறைப்படி தூய்மைப்படுத்தி இந்தத் திட்டத்தைத் துவங்கி வைத்துள்ளார்! நாடு முழுவதும் உள்ள அரசியல் பிரபலங்கள் பிரதமரைப் போலவே தூய்மைத் திட்டத்தில் இணைந்து ஆங்காங்கே தூய்மைப் பணிகளில் இறங்கியுள்ளனர்! இதனைத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களின் வாயிலாகக் காணும் போது பெரும்பாலானவர்களின் செயல் புகைப்படத்திற்கு காட்சி கொடுத்து தாங்கள் இந்தச் செயலைச் செய்வது மேலிடத்திற்குத் தெரிய வேண்டும் என்பது போலத்தான் உள்ளதே தவிர உண்மையான அக்கறையுடன் தூய்மைப் பணியில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை! எனினும் துப்புறவுத் தொழிலாளர்கள் வற்புறுத்தலின் பேரில் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவது ஆங்காங்கே தென்படுகிறது!  தனி மனிதர் தாமாக மனமுவந்து திருந்தாத வரை இந்த நாடு பாரதப் பிரதமர் அவர்கள் எதிர்பார்ப்பது போன்று உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவரது இலக்கு எட்டப்படும் என்பதாகத் தெரியவில்லை! ஒரு தெருவில் தனி மனிதர் திருந்தினால் அந்தத் தெருவே தூய்மையடையும்!  ஒரு தெரு தூய்மையடைந்தால் அந்தத் தெருவைக்...

விவேகானந்த சித்தர்!

நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி! அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள்! கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே, என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே! இலக்கை நோக்கி அடியெடுத்து வை! தொடர்ந்து முன்னேறு!! சோதனைகள் விலகும்!!! பாதை தெளிவாகும்!!!! நோக்கத்தை அடைந்தே தீருவாய்!!!!! அதை யாராலும் தடுக்க முடியாது!!!!!!                                                                             இருபதாம் நூற்றாண்டுச் சித்தர் விவேகானந்தர்!

சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன!

தமிழகத்தில் உள்ள ஆளும் இயக்கத்திற்கு எதிரான மத்திய மற்றும் மாநில இயக்கங்கள் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்குக் கோரி அடிக்கடி அறிக்கைகள், போராட்டங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், விழிப்புணர்வு நடைப்பயணங்கள் போன்றவற்றை மேற்கொண்டிருக்கின்றன! தேசத்தந்தையின் பெயர் தாங்கிய இயக்கமும் இவற்றில் அடக்கம்! இந்த இயக்கங்கள் எல்லாம் ஏதோ தற்பொழுதுதாம் தமிழகத்தில் துவங்கியவை போலவும், தமிழக மக்களை தற்பொழுதுள்ள ஆளும் இயக்கம் மது போதையில் வீழ்த்தியிருப்பதை இந்த இயக்கங்கள் இப்பொழுதுதாம் கண்ணுற்றது போலவும் பரப்புரைகள் மேற்கொண்டு வருகின்றன! பொதுவாக போதை ஏறிய ஒரு நபருக்கு சுயநினைவு தப்பிவிடுவது இயற்கை! போதை ஏறிய நிலையில் அவரிடம் எந்தவித அறிவுரைகளும் ஏறாதென்பதும் அனைவரும் அறிந்ததே!  மதுவால் வரும் வருமானத்தில் திலைக்கும் தமிழகத்தை ஆளும் இயக்கமும் ஏறக்குறைய இதே போதை நிலையில்தான் உள்ளதென்பதும் மதுவால் விளையும் கேடுகள் பற்றிய அறிவுரைகள் இவர்களிடம் எடுபடாதென்பதும் இந்த இயக்கங்களுக்கு விளங்காததல்ல! மதுவிற்கு எதிராகப் பரப்புரை நிகழ்த்தும் மத்திய மாநில இயங்கங்கள் அனைத்துமே தமிழகத்தில் மதுவை அறிம...

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

நவபாரதச் சிற்பி என்றழைக்கப்பட்ட பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் பிறந்த இந்த நன்னாள் பாரதத்தில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது ! தமிழகத்திலுள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக கீழ்க்ண்ட வேண்டுகோள்களை விடுக்கிறோம் ! தமிழகத்தில் பிறப்பெடுத்துள்ள பிறப்பெடுக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் அளவற்ற அறிவுடன் திகழக்கூடியவை ! எனவே தங்களின் குழந்தைகளின் கேள்விகளைப் புறக்கணிக்காதீர்கள் ! கேள்விகள் கேட்கக்கேட்கத்தான் அந்தக் குழந்தைகளின் அறிவுத் திறன் வளரும் !  அவர்களின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க இயலாவிட்டால் முடிந்தவரை அடுத்தவரிடம் கேட்டாவது அவர்களி ; ன் அறிவுத்திறன் மேம்பட உதவுங்கள் ! எந்தக் காரணம் கொண்டும் குழந்தைகளை அடித்து வளர்க்காதீர்கள் ! உங்களின் தனிப்பட்ட கோபங்களுக்கு வடிகாலாகக் குழந்தைகளை அடிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள் ! அடிபட்டு வளரும் குழந்தைகள்தாம் எதிர்காலத்தில் எவர் பேச்சையும் கேளாமல் முரட்டுத்தனமாக வளர்ந்து தீவிரவாதிகளாக மாறும் வாய்ப்புகளுக்குக்...