இடுகைகள்

சுடுகாட்டிற்கு வழி!!

பெருந்தலைவர் காமராசரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை எத்துணை முறை படித்தாலும் எமது தாகம் தீர்வதில்லை! சமீபத்தில் அவரைப் பற்றிய ஒரு நிகழ்வைப் படிக்க நேர்ந்தது! பெருந்தலைவர் முதல்வராக ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள மக்கள் அவரிடம் ஐயா எங்கள் கிராமத்து சுடுகாட்டிற்கு வழி இல்லை! எனவே சுடுகாடு செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தாருங்கள் என வேண்டினராம்! உடனே கர்மவீரர் நான் உங்களின் வாழ்க்கை வசதிகள் முன்னேறுவதற்கு வழி தேடிக் கொண்டிருக்கிறேன்! நீங்கள் எதற்கு சுடுகாட்டிற்கு வழி கேட்கிறீர்கள் என்றாராம்! இதைப் படித்தவுடன் என்னுள் சிரிப்பலைகளும் அதனுடனே எனது கண்களில் கண்ணீரும் வழிந்தோடியது! எந்த நேரமும் மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட அந்த நல்லவர் சுடுகாட்டிற்கு வழி கேட்ட மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று எண்ணி அளித்த பதிலைப் படித்தவுடன் சாராய ஆலைகளுக்கு முதலாளிகளாக விளங்கி,  குடிக்கு அடிமைகளாக பல தமிழ்த் தலைமுறைகளை விளங்க வைத்து, அவர்தம் குடும்பங்களைக் கண்ணீரில் மிதக்க விட்டு, குடித்துக் குடல் வெந்து செத்துச் சுடுகாடு சென்றவர்களி...

வாய்மை மன்ற உறுப்பினர்!!

ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தால் அமையும் வருங்கால வாய்மை மன்ற (இன்றைய சட்டமன்ற) உறுப்பினர்!! பதவியேற்ற நொடி முதல் தனக்கு வாக்களிக்காத மக்கள் உட்பட அனைவருக்கும் கட்டுப்படும் அரசு ஊழியராகிறார்!  தொகுதியில் உள்ள இவரது அலுவலகத்துடனே இவரது வசிப்பிடமும் இனி அமைவதால் எந்நேரமும் இவரை மக்கள் இருபத்து நான்கு மணி நேரமும் தங்கு தடையின்றித் தொடர்பு கொள்ள முடியும்!  உயர் அரசு அலுவலர்கள், செல்வாக்கு மிக்க தொழிலதிபர்கள், காவல் உயர் அலுவலர்கள் என எவராயினும் இவரைப் பொறுத்தவரை சாதாரண மக்களுக்குச் சமமானவர்கள்தாம்! இவரது அலுவலகத்தில் இவரைச் சந்திக்க சாமானியருக்கே முன்னுரிமை! இவருக்கு உதவியாகச் செயல்படும் அரசு அலுவலர்கள் தவிர இவரது அலுவலகத்தில் இவரது இயக்கம் சார்ந்த எவரும் என்றைக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்!  இவரது பணியில் இவரது இயக்கம் சார்ந்தவர்களோ, அல்லது உறவினர்களோ எவ்வகையிலேனும் குறுக்கீடு செய்தால் உடனடியாகக் காவல்துறை வசம் ஒப்புவிக்கப்பட்டு அறிவுறுத்தப்படுவர்! அதையும் தாண்டி வரம்பு மீறுபவர்கள் சிறையிலடைக்கப்பட்டு தக்க வாய்மை மன்ற விசாரணைத் தீர்ப்பின்படி தண்டனை பெறுவர்...

கற்பிழந்து போன காவிரியின் அவலக் கதை!

கற்பென்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவென்று வைப்போம் என்று முழங்கிய பாரதி இன்றிருந்திருந்தால் அந்த வரிசையில் என்னையும் சேர்த்துப் பாடியிருப்பான் என்பது நிச்சயம்! தமிழர்கள் காவிரி என்று எனக்கு ஏன்தான் இந்தப் பெயர் வைத்தார்கள் என நான் வருந்த வேண்டிய பரிதாப நிலையில்தான் இன்றுள்ளேன்! நான் தோன்றிய காலம் துவங்கி இதோ இந்த நூற்றாண்டுக்கு முன்பு வரை எனது பாதையில் வெள்ளையர்கள் துவங்கி சுயநல அரசியல்வாதிகள் வரை கட்டிய அணைகள் காரணமாக கடல் போல் விரிந்து பரந்தவள் என்ற என்னுடைய பெயருக்கு உரிய விளக்கமே பொய்யாகிப் போனது! தன்னை நம்பியுள்ள உயிர்கள் மற்றும் பயிர்களின் தாகத்தினைத் தீர்த்து ஆற்றுபடுத்துவதனாலேயே ஆறு எனப் பெயர் பெற்ற நான் இன்றோ சுயநலமாகக் கட்டப்பட்ட அணைகளில் உயிரற்ற உடலாக ஆங்காங்கே தேங்கித் தவிக்கிறேன்! ஓடிக் கொண்டிருந்தால்தான் அது ஆறு! ஓடாமல் தங்கி விட்டால் அது குட்டை. என்னுடைய இன்றைய நிலையும் இந்தக் குட்டைக்குச் சமம்தான்! என்னை நம்பியிருக்கும் மனித உயிர்களே இன்று என்னை அலங்கோலப்படுத்துவதாலேயே நான் கற்பிழந்து போனவளானேன்!  என்னுடன் சங்கமமாகும் எனது தோழிகளாக விளங்...

தமிழகத்தின் இப்போதய தேவை! சர்வாதிகாரமற்ற அரசியல் இயக்கங்கள்!

வல்லரசு நாடாக உலகெங்கும் கருதப்படும் அமெரிக்காவில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என இரு அரசியல் இயக்கங்கள் மட்டுமே உள்ளன. பாரதப் பாராளுமன்ற அமைப்பு உருவாகக் காரணமான பிரிட்டன் பாராளுமன்றத்தில்கூட இதே நிலைதாம். இது மட்டுமன்றி இந்த இயக்கங்களில் இயக்க உறுப்பினர்களின் ஒட்டு மொத்த ஆதரவினைப் பெற்று விளங்கும் தலைவர்கள்  நாட்டு மக்களின் அமோக ஆதரவு பெற்று நாடாளும் நிலை வந்தால்கூட அவர்களின் பதவிக்காலம் அதிகபட்சம் பத்தாண்டுகள்தாம்.  அதன் பிறகு இந்தத் தலைவர்கள் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் வெளியேறி   தகுதி மிக்க பல்வேறு புதிய தலைவர்கள் வருவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதே இந்த நாடுகளில் உள்ள சனநாயக நடைமுறை! வாசிங்டன், கென்னடி, லிங்கன்****என   அமெரிக்காவிலும்,  தாட்சர், கேமரூன் என பிரிட்டனிலும்  தொடர்ந்து ஆரோக்கியமான தலைவர்களைக் கண்டு வருகின்றனர். நம்நாட்டின் நிலையோ இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது பரிதாபகரமான நிலைதாம்.  சர்வாதிகாரத் தலைவர்களைக் கொண்ட இயக்கங்களையும்  அவர்களின் தலைவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டால் இந்தக் கட்டுரையை நிறைவு...

காவிரியில் கழிவு நீர்

காவிரியில் கழிவு நீர் கலப்பதாக தமிழகத்திலுள்ள அனைத்து இயக்கங்களும் கருநாடக அரசிற்குக் கண்டன அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.  காவிரி மட்டுமன்றி தமிழகத்திலுள்ள அனைத்து ஆறுகளிலும் சாக்கடைக் கழிவு நீர் மட்டுமன்றி அபாயகரமான கழிவுகளான சாயக் கழிவு,  தோல் தொழிற்சாலைக் கழிவு,  காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றும் கழிவு,  வாகனங்களைக் கழுவி வெளியேற்றும் ஆயில் மற்றும் கிரீஸ் கலந்த கழிவு,  எனப் பல்வேறு விதமான கழிவுகளை வெளியேற்றும் ஆலைகளை ஆறு மற்றும் கால்வாய்களின் ஓரத்திலேயே அமைத்துக் கொண்டு வெளியேற்ற அனுமதி கொடுத்தும்  வீடுகள் அலுவலகங்களில் இருந்து வெளியேறும் சாக்கடைக் கழிவுகளை கால்வாய்கள் வழியாக ஆறுகளில் கலந்து வந்த முதற் குற்றவாளிகள் இரு திராவிட இயக்கங்கள்தாம். இவர்கள் தவிர கட்சி பேதமின்றி தேர்தலுக்குத் தேர்தல் இந்த இரு அணிகளில் மாறி மாறி தொகுதிப் பிரதிநிதித்துவம் பெரும் அனைத்து இயக்கத் தலைவர்களும் இந்தக் கழிவுகளை வெளியேற்றும் ஆலைகளின் உரிமையாளர்கள் தங்களின் இயக்கங்களில் ஏதேனும் ஒரு பதவியோ அல்லது செல்வாக்கோ வகிப்பதை மறந...

வணிக விளம்பரப் பட்டியலில் கல்வி நிறுவனங்கள்?

தமிழகத்தில் ஓடும் பேருந்துகளின் பின்புறத்தில் சமீபத்தில் ஒரு விளம்பர வேண்டுகோள் படித்தேன். அது இதுதான். பேருந்துகளில் வணிக விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பாக கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களுக்குத் தனிச் சலுகைகள் வழங்கப்படும். அரசே கல்வி நிறுவனங்களை வணிக விளம்பரப் பட்டியலில் சேர்த்துச் சலுகையும் வழங்குவதை அரசுப் பள்ளிகளைத் துவக்கித் தமிழகத்தில் கல்வி வேள்வியைத் துவங்கிய கர்ம வீரரின் உயிர் துடிக்கும் ஓசை தமிழ் மொழி தமிழ் நாகரீகம் தொலைத்த இன்றைய ஆடம்பர ஊழல் அரசியல்வாதிகளுக்கு எங்கே கேட்கப்போகிறது?

மேகதாதுவில் அணை கட்டுவதால் யாருக்கு இலாபம்?

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணைகள் கட்டுவதை எதிர்த்து இன்றைக்கு தமிழக விவசாய சங்கங்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாகக் தமிழகம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. வெள்ளையர்கள் நம் நாட்டு மக்களைப் பிரித்தாண்ட சூழ்ச்சியின் ஒரு பகுதிதான் ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டியதற்குப் பிரதான் காரணம். மாநிலம் விட்டு வேறு மாநிலங்களில் ஓடும் ஆறுகளை அவை உற்பத்தியாகும் இடம் அமைந்துள்ள மாநிலங்கள் இந்த ஆறுகள் முற்றிலும் தமக்கே உரியவை என்ற தவறான நோக்கில் அணை கட்டித் தேக்க முற்படுவதும் இவற்றை மத்தியில் ஆளும் அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும், இது குறித்து உச்ச வாய்மை மன்றம் வரை வழக்குகள் வருடக்கணக்கில் நடைபெற்று வருவதும் இயற்கைக்கு எதிராக மனிதர்கள் நடத்தும் ஒரு மோசமான யுத்தம் எனவே கூறலாம். ஆறுகள் உற்பத்தியாகும் மலைப் பிரதேசங்கள் ஊழல் அரசியல்வாதிகளால் காபி, தேயிலை எனப் பணப்பயிர்கள் நிறைந்த எஸ்டேட்டுகளாக வளைக்கப்பட்டு அங்கிருந்த அடர் மரங்கள் நிறைந்த வன வளம் முற்றிலும் சூறையாடப்பட்டதின் விளைவுதான் இன்று ஆறுகள் போதிய மழையின்றி வற்றிப் போகும் நிலைக்கு அதி முக...