தரமற்ற கட்டுமானங்கள்!
சென்னையில் புதியதாகக் கட்டிக் கொண்டிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்து தரை மட்டமானதில் ஏராளமான உயிர்ச் சேதங்களும் பலர் படுகாயங்களுக்கும் ஆளான நிலை உருவாகியுள்ளது! பலியானவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்! படுகாயமுற்றவர்கள் விரைவில் நலம் பெற நாம் அனைவரும் பிரபஞ்சப் பேராற்றலை வேண்டுவோம்! தரமற்ற கட்டுமானங்களின் விளைவினை இப்பொழுதாவது மனிதாபிமானம் உள்ளவர்கள் அனைவரும் உணர வேண்டும்! ஒரு வேளை இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகள் குடியேறிய நிலையில் இடிந்திருந்தால் நினைக்கவே மனம் பதறும் அளவிற்குப் பல அப்பாவிக் குடும்பங்களின் உயிரிழப்பினை இந்த நாடு சந்தித்திருககும்;! வண்ணம் பூசிப் பளபளப்பாகக் காட்சியளிக்கும் இது போன்ற புதிய கட்டுமானக் குடியிருப்புகளை வாங்கி அங்கு குடியேறவே அச்சப்படும் நிலையினை இந்தக் கட்டிடம் உருவாக்கியுள்ளதை நாம் மனதில் கொண்டாக வேண்டும்! இனியாவது கட்டப்படும் கட்டிடங்களின் தரத்தை அவை கட்ட அனுமதி கொடுக்கும் அரசு அலுவலர்கள் உரிய தரத்துடன் அவை கட்டப்படுகின்றனவா எனத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்! ...