இடுகைகள்

கங்க்ராஜ்லேசன் காக்காப் பாள்யம் போலீஸ் ஸ்டேசன் VS கமலா அக்கா

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அறிமுகமானவர் கமலா அக்கா. எனது இரண்டு சகோதரிகள் மற்றும் தம்பி உட்பட நானும் அவர்களை அக்கா என்றே அழைப்பதுண்டு. எனது தாய்வழித் தாத்தா அமரர் கந்தசாமி அவர்களின் கடை அருகில் உள்ள கட்டிடத்தில் வாடகைக்குத் தனது தொழிலைச் செய்து வந்தவர் கமலா அக்காவின் கணவர். அவரது பெயரும் கந்தசாமிதாம். எப்பொழுது பார்க்க நேர்ந்தாலும் பளிச்சென்று சிரித்து புன்னகை பூக்கும் முகத்துக்குச் சொந்தக்காரர் கமலா அக்கா. எனது மூத்த சகோதரியின் வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்குக் குடியிருந்ததால் எங்கள் குடும்பம் அங்கு செல்லும்போதெல்லாம் எனது பெற்றோரை வாங்க சம்பந்தி என அன்போடு அழைத்துச் சாப்பிட்டுப் போக வேண்டும் என வற்புறுத்துவர் கணவன் மனைவி இருவரும். ஒரு சில நாட்களில் அவர்கள் தேநீர் அருந்தும் வேளையில் அவர்கள் வீட்டைக் கடக்க முற்பட்டால் தேநீர் அருந்த அழைத்துத் தட்டாமல் சில நாட்கள் நாங்கள் தேநீர் அருந்தியதும் உண்டு. அவர்களின் மூத்த பெண் வயதுக்கு வந்தபோது அவர்கள் வீட்டில் விருந்து சாப்பிட்டதுகூட இன்றும் என் நினைவில் ஆடும் நிகழ்வுகளில் ஒன்று. அவர்களின் மூத்த மகன் குமாருக்கு என்னை விட ஒரு வயதே அதிகம்....

குமாரு வா உக்காரு சாப்பிடு யசோதை அன்னை த.காந்திமதி

என் தாத்தா கடையில் நான் இருக்கும்போது கிழக்கிலிருந்து வரும் இரு சக்கர வாகனம் ஒன்றிற்காக ஏங்கி நிற்பது உண்டு. அதன் பெயர் ஃபண்டாபிளஸ். ஸ்கூட்டர் வகையைச் சேர்ந்தது. அதனை தாய் மாமா தங்கவேலு அவர்கள் ஓட்டி வர முன்னும் பின்னும் நின்றபடியும் அமர்ந்தும் வருவது காந்தி அத்தையும் அவரின் மூத்த மகன் மோகன் மற்றும் பூங்கொடி இருவரும். வாகனம் வந்தவுடன் அவர்களை இறக்கிவிட்டுப் பின்னர் என்னையோ சில சமயங்களில் அங்கிருக்கும் எங்கள் சகோதரிகளையோ ஏற்றிக் கொண்டு சிறிது தூரம் ஓட்டிச் சென்று திரும்பி வந்து கடையில் இறக்கி விடுவார் என் தாய் மாமா தங்கவேலு அவர்கள். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இப்படித்தான் அறிமுகமானவர் காந்தி அத்தை அவர்கள். அப்போது காக்கா பாளையத்தில் ஆட்டையாம்பட்டிப் பிரிவில் ஒரு கடையும் வீடும் அமைந்திருந்த இடத்தில் தங்கித் தாத்தாவிடம் கற்ற தொழில்களையே செய்து  வந்தார் எங்கள் தங்கவேல் மாமா. இளமையில் சில நாட்கள் அங்கு சென்று தங்கியிருந்த அனுபவமும் எனக்கும் என் சகோதரிகளுக்கும் உண்டு. ஒரு முறை எங்கள் தாத்தாவுடன் சண்டையிட்டுத் தன் தம்பி வசமிருந்த கடையைப் பிரித்துத் தனது பங்கெனக் கேட்டு வாங்கி இங்கேய...

வாக்காளர்களாகிய நீங்கள் இனி என்ன செய்யப் போகிறீர்கள்?

நாம் உபயோகப்படுத்துகின்ற செருப்பு (இனி காலணி என்றே பதிவு தொடரும்) அறுந்துவிட்டதெனில் அதனை நன்கு செப்பனிடுபவரிடம் கொடுத்துச் சரி செய்து கொள்வோம். அதுவே தேய்ந்து நைந்து பழுதான நிலையில் அசிங்கமாகக் காட்சியளித்தால் உடனடியாக அல்லது நம்மிடம் பணம் உள்ள போதாவது மாற்றிவிட முயற்சி செய்வோம். அதை விடுத்து இது இராசியான காலணி எனவோ அல்லது இதை விட்டுப் பிரிய முடியவில்லை எனவோ முரட்டுப் பிடிவாதம் கொண்டு கல்லிலும் முள்ளிலும் பயணப்பட்டால் காயம்படப் போவது நம் பாதங்கள்தானே தவிரக் காலணியல்ல. இதைப் போல நம்முடைய அரசாங்கம் பழுதுபட்டால் நாம் அதைச் செப்பனிடத் தகுதியானவர்களைத் தேடுகிறோமா என்று நான் அல்ல அய்யா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சாக்ரடீசு என்ற மேதை கேள்வி எழுப்பியுள்ளார். நாமோ தேய்ந்து கிழிந்துபோன காலணிகளைப் போன்ற அரசியல் இயக்கங்களைத்தாம் இன்றும் காலில் போட்டு அல்ல நம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தலை கால் புரியாமல் ஆடுகிறோம். கரடு முரடாக கல்லும் முள்ளுமாக இருந்தாலும் அவர்களின் போடாத சாலையிலும் போட்ட சாலையிலும் சகித்துக் கொண்டு பயணப்படப் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டோம். காலணி எனது அண்ணனுட...

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே!

எனது மகளின் திருமணம் இனிதாக முடிந்த அந்த நன்னாளில் சேலத்திலிருந்து ஈரோட்டிற்கு இல்லம் திரும்பிக் கொண்டிருந்தோம். வழியில் காணப்பட்ட வங்கி ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பது கண்டு சற்று வியந்தவாரே எங்கள் பயணம் தொடர்ந்தது. சங்ககிரியைக் கடப்பதற்கு முன்பு எங்களின் செல்பேசிகளில் இன்றுவரை நாட்டையே அலங்கோலமாக்கிவிட்ட ஒட்டுமொத்த தமிழக மக்கள் மட்டுமல்ல, வந்தாரை வாழ வைக்கும் நம் தாய்நாடாம் தமிழகத்தில் பிழைப்புத் தேடி வந்துள்ள கோடிக்கணக்கான வட இந்தியர்கள் வரை, இந்திய வரலாற்றிலேயே இன்றுவரை திட்டித் தீர்க்கப்படும் ஒரே பெருமைக்குரிய நம் பாரதப் பிரதமர் அவர்கள் சர்வாதியாக அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் அந்தத் துயரகரமான செய்தி. அன்று துவங்கியதுதாம். ஒரே நாளில் மக்கள் அனைவரும் பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டனர். கையில் வைத்திருந்த சொற்பமான சில ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் திருப்பிக் கொடுக்க ரேசன் கடைகளில் காத்திருப்பதை விடக் கேவலமாக கடும் வெயிலிலும், தன் அன்றாட வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு நடுத்தெருவில் கால்கடுக்க நின்றனர் நாட்டு மக்கள்.  ஒரே சேமிப்பான மண்பாண்ட உ...

ஐவர் மலை இரசியம்!!!

படம்

எது இலாபம்?

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையும் முன்பு அமலில் இருந்த வாட் வரி விதிப்பு முறையும் ஒன்றேதான். வாட் வரி விதிப்பிற்கு உட்படாமல் அடம் பிடித்த வணிகர்கள் இப்பொழுதும் இந்த வரி விதிப்பிற்கு தங்களை உட்படுத்திக் கொள்ள முன் வராமல் இருப்பார்கள் என்று கருதிதான் மத்திய அரசு காம்பவுண்டிங் டேக்ஸ் என்ற முறையைப் புதிதாகப் புகுத்தியுள்ளது. அதன்படி 20 இலட்சத்திற்கு கீழ் உள்ள வணிகர்கள் ஜிஎஸ்டி வணிகத்திற்கு வேண்டியதில்லை என்றும் 20 இலட்சம் முதல் 70 இலட்சம் வரை உள்ள வணிகர்கள் தங்களின் ஆண்டு விற்பனையில் ஒரு சதவிகிதத்தை கட்டினால் போதுமென்றும் விளக்கமளித்துள்ளது. இதன்படி  உள்ளவர்கள் 20 இலட்சத்திற்கு மேல் 30 இலட்சம் ஆண்டு வணிகம் 30 ஆயிரம் ரூபாய்கள் காம்பவுண்டிங் வரி 40 இலட்சம் ஆண்டு வணிகம் 40 ஆயிரம் ரூபாய்கள் காம்பவுண்டிங் வரி என 69 இலட்சம் வரை 69 ஆயிரம் வரி என கட்ட வேண்டி வரும். பெரும்பாலான வணிகர்கள் இந்த முறையே தங்களுக்கு இடையூறு இல்லாதது எனக் கருதிக் கொண்டு தங்களை காம்பவுண்டிங் டேக்ஸ் முறையில் உட்படுத்திக் கொள்ள தயாராகி வருகின்றனர். இந்த முறைக்கு மாற விரும்பும்...

துறவும் நிர்வாணமும்!

15.07.2017 புத்தர் ஆசை துறந்தார். துறவியானார்.  புத்தருக்கு ஆசையின்றிப்போனாலும் அவருக்குச் சீடர்கள் உருவாகினர். புத்தருக்குப் பின் சீடர்களின் எல்லையற்ற ஆசையே புத்த மதம் என உருவாகி இன்று உலகெங்கும் பரவி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலச் செயல்படுகிறது.  நிர்வாணத்தை வலியுறுத்தும் சமண மதமும் இதே நிலைதான்.  ஆதி சங்கரர், விவேகானந்தர் போன்றவர்களால் துவக்கப்பட்ட அமைப்புகள் துவங்கி  இன்றுள்ள ஆனந்தர்கள், ஸ்ரீஸ்ரீக்கள், சத்குருக்கள், மடாதிபதிகள் என அனைவரும்  துறவுக்குப் பின்னரே தங்களின் நிலைப்பாட்டை பொன், மண்,பொருட் சேர்க்கைகளோடு தம்மைப் பின்பற்றும் சீடர்களோடு கார்ப்பரேட் நிறுவனர்களாக உலா வருகின்றனர்.  ஒருவரின் துறவுக்குப் பின்னர் அவரால் ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் அது குறித்து சர்ச்சைகளும் எழுவதைப் படித்தும் நடைமுறையில் காண்பதாலும்  துறவுக்கும் நிர்வாணத்திற்கும் உரிய இலக்கணத்தைப் படித்துத் தொலைத்ததாலோ என்னவோ  நிர்வாண ஆசையைக் குளியலறையிலும்,  துறவு ஆசையைக் கல்லறையிலும்  புதைத்து விட முடிவு செய்தோம்.  எம்முடைய துறவால...