இடுகைகள்

நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்.

2017-ஏப்ரல் 2 அன்று காலை புதிதாகத் திருமணமாகிச் சேலத்தில் வசிக்கும் எனது மகளைக் காண்பதற்காக சேலம் செல்ல முடிவு செய்திருந்தோம். அன்று காலை 10.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்படும்போது எனது மனைவி ஒரு பொருளை எடுப்பதற்காக வீட்டின் அறைச்சுவற்றில் இருந்த கப்போர்டின் கண்ணாடியைத் தள்ள முற்பட அது திடீரென உடைந்து இரு துண்டாகி எனது மனைவியின் தலையில் மோத அதில் ஒரு கண்ணாடி அருகிலிருந்த படுக்கையில் விழ மற்றொன்றை எனது துணைவியார் பிடிக்க முயற்சித்த நிலையில் கை விரலைச் சற்றுக் காயப்படுத்திற்று. ஊருக்குப் புறப்படும் நேரத்தில் அபசகுனமாக எனது மனைவிக்கு அது பட்டாலும் பெரிய அளவில் எதுவும் நிகழாமல் சிறிய அளவில் நேர்ந்ததே நடப்பது நல்லதெற்கெனச் சமாதானப்படுத்தி சேலம் புறப்பட்டோம். பேருந்தில் ஏறி அமர்ந்தபின்பு ஓட்டுநருக்கு எதிரே இருந்த கண்ணாடியைக் காண்பித்து இது போன்ற கண்ணாடிகளை வீட்டு அலங்கார அலமாரிகளில் பயன்படுத்தினால் அவை உடையும்போதுகூட துண்டு துண்டாக உடையுமே தவிர ஆபத்து இராதென விளக்கியவாறு பயணித்தேன். சேலம் சென்று எனது மகளைச் சந்தித்த பின் புறப்பட்டபோது எனது சம்பந்திகள் எனத...

கணினி வேலை செய்யும் பெண்களின் கனிவான கவனத்திற்கு

என்னுடைய 45 வயது முதல் தற்போது வரை சொந்த வணிகத்தில் இருந்து விட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை. இது வரை பல நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளேன். இங்கு பணியாற்றிய சக இளைய சமுதாயப் பெண்கள் அனைவருமே பின் வரும் தவறுகளைச் செய்து வருவதை நான் வேதனையுடன் அனுமானித்து வந்துள்ளேன். தங்களுக்கு ஒதுக்கி உள்ள கணினிகளை விசைப் பலகை உட்பட தினசரி வேலை துவக்கும் முன்பு சுத்தம் செய்தல் கிடையாது. நாட்கணக்கில் இவை தூசு படிந்த நிலையில் அப்படியே பயன்படுத்துவர். தாங்கள் அமரும் இருக்கையைக்கூடச் சுத்தம் செய்தல் கிடையாது. மேலும் துப்புரவுப் பணியாளர் வரவில்லை அல்லது அவர் வரத் தாமதம் ஆனால் தங்களின் இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு அமர்ந்து பணி செய்வதும் கிடையாது. கோப்புகளைப் பராமரிப்பதில் கூட இதே நிலை. தூசு பறக்கும். மேலும் கணினியில் தாங்கள் செய்யும் வேலைகளை முறையாக ஒரு கோப்பில் இட்டுப் பராமரிப்பதும் கிடையாது. சக நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் அதன் காரணமாக அதி அவசியமான வேலைகளை அரை குறையாகச் செய்து உரிமையாளர் அல்லது மேலாளர்கள் வசம் திட்டு வாங்குவதும்  போதாக்குறைக்கு கைபேசியில் மணிக்கணக்கில் தேவையற்ற அரட்டை அடிப...

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா

இந்தப் பாடல் வரிகள் கொடுக்கும் உத்வேகம் முற்றிலும் எனக்காகவே என்றே நான் நினைக்கிறேன்.  மக்கள் திலகத்தை அறவே பிடிக்காத என்னை என் இளமையில் உறவினர் எவரோ வலுக்கட்டாயமாக இந்தத் திரைப்படம் பார்க்க என்னை அழைத்துச் சென்றது இன்றும் என் மனதில் நிழலாடுகிறது. அப்பொழுது எங்கள் ஊரில் இருந்த ஒரே திரை அரங்கின் பெயர் புஷ்பா டூரிங் டாக்கீஸ். இது என் பெரியப்பா திரு. துளசிபிள்ளை அவர்களின் சம்பந்தியும் என் மனம் கவர்ந்த சகோதரி சிங்காரவேல் ராஜேஸ்வரியின் மாமனார் MR என்று அழைக்கப்பட திரு.ராமசாமி அவர்களால் நடத்தப் பட்ட திரை அரங்கம். அன்றைய தினம் இந்தப் படத்தைப் பார்க்க எங்கள் ஊர் மட்டுமன்றி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரண்டு வந்திருந்த மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கூட்டம் மூன்று மடங்காகத் திரண்டிருந்த காரணத்தால் எங்களால் திரை அரங்கு உள்ளே செல்ல இயலாமல் போனது. எனினும் நாங்கள் வெகு நேரம் அங்கே வெளியில் இருந்தவாறு படத்தின் கதை வசனத்தைக் கேட்டவாறு இருந்தோம். படம் முழுக்க திரை அரங்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த ஆரவாரம். விசில் சப்தம் காதைக் கிழிக்க அதையும் தாண்டி அதிக வால்யூமுடன் இந்தப் பாடல் இன்றும் என் காத...

ஊழலில் உதிர்ந்த மலர்கள்

நேற்று காலை எனது 10 வயதில் கல்வி பயின்ற ஐந்தாம் வகுப்பு தொடக்கப் பள்ளியை கடந்து செல்லும்போது என்னை அறியாமல் அங்கு ஒருகணம் நின்று விட்டேன்  என் கண்களில் முதலில் பட்டது நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது இருந்த கட்டிடம் இந்த கட்டிடம் எனது ஐந்து வயதில் கட்டப்பட்டது  அதாவது கிட்டத்தட்ட 55 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தது இதனைக் கட்டியவர் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் இருந்த ஒரு கட்டுமான ஒப்பந்ததாரர்  அதற்கு அருகிலேயே இரண்டுமுறை இழுத்துக் கட்டப்பட்டு தற்போது வட்டார கல்வி அலுவலர் அலுவலகமாக செயல்படும் பார்க்க வெளிப்பூச்சு அழகாக தோன்றும் உள்ளே உளுத்துப்போன ஊழல் கட்டுமானக் கட்டிடம் ஒன்றும் காட்சியளித்தது  நான் பெரும்பாலும் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள அரசு கட்டிடங்களின் நிலையைத்தான் கவனிப்பது வழக்கம்  இந்தக் கட்டிடங்களில் வெள்ளையர்கள் ஆண்ட போதும் வெளியேறிய நாள் வரை கட்டப்பட்டு இன்று வரையும் கூட உறுதியாக நிற்கும் கட்டிடங்களையும் காண்பேன்  பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் நாடு இருந்த வறிய நிலைக்கு ஏற்ப குறைந்த வரி ஆதாரத்தில் எளிமையாகக...

தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் ஒரு ஒப்புமை

நம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர் யார் என்று அறியாதவர்களே மிக அதிகம் அதே போன்ற நிலைதான் வடக்கிலும் தேசிய கீதம் பாடியவர் யார் என்று அறியாதவர்களும் பெரும்பான்மை ஆக இருக்கக் கூடும். முன்னதை நான் ஈரோட்டில் ஒரு ஆய்வின் வாயிலாக அறிய முடிந்தது பின்னதை ஜெய் கிண்டியா ஆட்கள்தாம் ஆய்வு செய்து அறிவு தெளிதல் வேண்டும். தலைப்புக்கு உள்ள விளக்கம் இங்கு யாதெனில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலிலும் தேசிய கீதப் பாடலிலும் பரத கண்டம் பாரத என்ற சொல்லே இடம் பெற்று உள்ளது என் ஆய்வின்படி கவுரவர் பாண்டவர் யுத்தம் இன்னும் முடிவு பெறவே இல்லை கவுரவர் ஆரிய இனம் பாண்டவர் தமிழர் வரலாறு தன்னையே திருப்பிக் காட்டும் போது இந்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்தே தீரும் அகண்ட(மகா வட மொழி)பாரதம்  முழுவதும் அற தெய்வமாம் தமிழ்அன்னையின் ஆட்சியின் கீழ் வரும். இது காலத்தின் கட்டாயம் அவாளுக்கு கலி யுகம் முடியும் காலம்  வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது வேங்கை யாரடா அது சோழப் பேரரசின் மாமன்னன் முருகன்தானடா

சங்கு ஊதுவது உங்களுக்காகவும் இருக்க வேண்டாமே

நேற்று மதியம் இரண்டு முப்பது மணி அளவில் என்னுடைய மகளின் கல்விப்பணி வேலை காரணமாக ஈரோடு நகரில் இருந்து  வள்ளி புரத்தான்பாளையம் வரை செல்ல வேண்டி இருந்தது  என்னுடைய வாகனம் கரூர் பெருந்துறை புறவழிச்சாலையைக் கடக்கும் முன்பு சைரன் என்ற சங்கு ஊதும் சத்தம் கேட்டது சாலையைக் கடக்காமல் வாகனத்தை நிறுத்திவிட்டு கிழக்கு திசையை நோக்கிப் பார்த்தால் யாரோ ஒரு தமிழக அமைச்சரின் வாகனம் வருவதை அறிவிப்பதற்காக ஒரு காவல்துறை வாகனம் சங்கூதியபடி வந்தது.  அதனைத் தொடர்ந்து ஒரு அரசியல்வாதி வாகனம் அதற்கு அடுத்து அமைச்சரின் வாகனம் இதற்குப் பின் சில எடுபிடிகள் வாகனம் கடைசியாக சேலம் மாநகர ரோந்துப் பணி வாகனம் வந்து இந்த அணிவரிசை முடிவுக்கு வந்தது. அனைத்து வாகனங்களுமே 120 கிலோமீட்டர் வேகத்தில் தான் வந்தன. தமிழ்நாடு அரசின் 108 வாகனத்தில் நூறில் சென்றால் 108 ல் தான் போக வேண்டும் என்ற வாசக வரிகள் தான் என் மனதில் ஓடியது காவல்துறை அன்பர்களே நண்பர்களே வேகக் கட்டுப்பாடு என்பது மக்களுக்கு மட்டும்தானா  மக்களுக்காக அரசியல்வாதிகளா அரசியல்வாதிகளுக்காக மக்களா இவ்வளவு வேகத்தில் அவர்கள் சென்று அடையப் போவது ஏதேனும் ஒரு...

தோல்வியா வெற்றியா

இரு நூற்று ஐம்பது பேர் வேலை செய்யும் இடத்தில் வேலை தேடிப் போனேன்  என்னைப் புரிந்து கொள்ளாத சிலரைத் தவிர மற்றவர்களின் நன் மதிப்பைப் பெற்று  சில நடைமுறைகள் பிடிக்காமல் 80 நாட்கள் கழித்து வெளியேறி விட்டேன் என்னைப் புரிந்து கொள்ளாதவர்களைப் பொறுத்தவரை நான் தோற்று ஓடியவனாக நினைக்கலாம் என்னைப் பொறுத்தவரை நான் அங்குள்ள பெரும்பாலானவர்களின் அன்பைச் சுமந்து வெற்றியாளனாக விடை பெற்றவன்