நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
இந்தப் பாடல் வரிகள் கொடுக்கும் உத்வேகம் முற்றிலும் எனக்காகவே என்றே நான் நினைக்கிறேன். மக்கள் திலகத்தை அறவே பிடிக்காத என்னை என் இளமையில் உறவினர் எவரோ வலுக்கட்டாயமாக இந்தத் திரைப்படம் பார்க்க என்னை அழைத்துச் சென்றது இன்றும் என் மனதில் நிழலாடுகிறது. அப்பொழுது எங்கள் ஊரில் இருந்த ஒரே திரை அரங்கின் பெயர் புஷ்பா டூரிங் டாக்கீஸ். இது என் பெரியப்பா திரு. துளசிபிள்ளை அவர்களின் சம்பந்தியும் என் மனம் கவர்ந்த சகோதரி சிங்காரவேல் ராஜேஸ்வரியின் மாமனார் MR என்று அழைக்கப்பட திரு.ராமசாமி அவர்களால் நடத்தப் பட்ட திரை அரங்கம். அன்றைய தினம் இந்தப் படத்தைப் பார்க்க எங்கள் ஊர் மட்டுமன்றி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரண்டு வந்திருந்த மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கூட்டம் மூன்று மடங்காகத் திரண்டிருந்த காரணத்தால் எங்களால் திரை அரங்கு உள்ளே செல்ல இயலாமல் போனது. எனினும் நாங்கள் வெகு நேரம் அங்கே வெளியில் இருந்தவாறு படத்தின் கதை வசனத்தைக் கேட்டவாறு இருந்தோம். படம் முழுக்க திரை அரங்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த ஆரவாரம். விசில் சப்தம் காதைக் கிழிக்க அதையும் தாண்டி அதிக வால்யூமுடன் இந்தப் பாடல் இன்றும் என் காத...