தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்
பழையன கழிதலும் புதியன புகுதலும் தமிழர் மரபு. இந்த மரபு இன்று தவறான புரிதலோடு போகி பண்டிகை அன்று பிளாஸ்டிக் குப்பைகளையும் டயர்களையும் எரித்து சுற்றுச் சூழலை நாசம் செய்யும் படித்த முட்டாள்கள் செய்யும் பகுத்தறிவு.
இரு பெரும் ஊழல் திராவிட இயக்கங்களின் தலைவன்கள் யார் என்று தெரியாத
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்கள் எனும் இழி நிலை.
சாதிய மதவாதக் கார்பொரேட் கும்பல் வேறு இந்தத் தாண்டல் கார அணிவரிசையில். கேட்கவா வேண்டும்?
மக்களைச் செம்மறி ஆடுகள் ஆக்கி மேயும் காண்டாமிருக கூட்டங்கள்.
ஆளப் போரான் தமிழன் உலகம் எல்லாமே
இந்த வரிசையில் முதல்வர் பதவிக்கு வரிசை கட்டி நிற்கும் கூத்தாடிகள் வேறு செம்மறி ஆட்டுப் பண்ணை நடத்தும் அவலம்.
பொறுப்பாரா தமிழ் அன்னை?
என்னை வெள்ளாட்டு வேங்கையாக்கி இந்தச் செம்மறி ஆட்டுக் கூட்டத்தை ஒன்று படுத்து எனக் கட்டளை பிறப்பித்து இதோ இந்த வினாடி கூடத் தூங்க விடாது துரத்துகிகிரார்.
கடுகு மூட்டை சிதறிப் போனது போல இருக்கு இன்றைய தமிழ்ச் சமூகம்.
மலைப்பாக இருக்கிறது.
சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டுமாம். வெல்லப் பிறந்தவனுக்கு இமயமும் ஓர் கடுகே.
வசந்தத்தின் துவக்கம் தை மாதம்.
வெப்பப் புளுக்கத்தில் நித்திரை தொலையும் மாதம் சித்திரை.
சோதிடம் சாத்திரம் புகுத்தி மதவாத ஓநாய்கள் வகுத்த தமிழ் ஆண்டு பிறக்கும் திட்டப்படி மேச ராசி ஆடுகள் துவங்கி மீன ராசி மந்தை ஆடுகள் வரை அடித்துக் கொண்டு சாகின்றன.
கார்பொரேட் சாமியார் காட்டுமிராண்டித் கூட்டம் இரத்தம் சுவைக்க
காத்திருக்கும் நிலை அறியாத செம்மறி ஆடு குணம் கொண்ட மந்தைகளை ஒன்று சேர்ப்பது முடியாததல்ல.
அன்னை பாடும் பாட்டு கேட்கிறது
எதற்கும் ஒரு காலம் உண்டு
பொருத்திரு மகனே
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகனே
எனது முறை(Turn) வரும் போது
ஊழல்
சாதியம்
மதவாதம்
நடிப்பு வாதம்
உள்ளிட்ட ஏராள மகுடங்களைச் சாகடிப்பேன்.
குமார ராஜா தெய்வசிகாமணி
ஐந்தாம் தமிழ்ச் சங்கம்
இணையம்.
உலகம்
புதுமை உலகம் மலரும்
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொள்ளும் நேரம் வரும்.
வாழ்வாங்கு வாழ்க
வாழ்க
வாழ்க
வாழ்க
வாழ்க
கருத்துகள்
கருத்துரையிடுக