ஊழலில் உதிர்ந்த மலர்கள்

நேற்று காலை எனது 10 வயதில் கல்வி பயின்ற ஐந்தாம் வகுப்பு தொடக்கப் பள்ளியை கடந்து செல்லும்போது என்னை அறியாமல் அங்கு ஒருகணம் நின்று விட்டேன் 

என் கண்களில் முதலில் பட்டது நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது இருந்த கட்டிடம் இந்த கட்டிடம் எனது ஐந்து வயதில் கட்டப்பட்டது 
அதாவது கிட்டத்தட்ட 55 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தது இதனைக் கட்டியவர் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் இருந்த ஒரு கட்டுமான ஒப்பந்ததாரர் 

அதற்கு அருகிலேயே இரண்டுமுறை இழுத்துக் கட்டப்பட்டு தற்போது வட்டார கல்வி அலுவலர் அலுவலகமாக செயல்படும் பார்க்க வெளிப்பூச்சு அழகாக தோன்றும் உள்ளே உளுத்துப்போன ஊழல் கட்டுமானக் கட்டிடம் ஒன்றும் காட்சியளித்தது 

நான் பெரும்பாலும் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள அரசு கட்டிடங்களின் நிலையைத்தான் கவனிப்பது வழக்கம் 

இந்தக் கட்டிடங்களில் வெள்ளையர்கள் ஆண்ட போதும் வெளியேறிய நாள் வரை கட்டப்பட்டு இன்று வரையும் கூட உறுதியாக நிற்கும் கட்டிடங்களையும் காண்பேன் 

பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் நாடு இருந்த வறிய
நிலைக்கு ஏற்ப குறைந்த வரி ஆதாரத்தில் எளிமையாகக் கட்டப்பட்ட கட்டிடங்களையும் காண்பேன்.

ஊழல் இரு பெரும் திராவிட இயக்க தலைகள் எவரெஸ்ட் உயர கார்பொரேட்டுகள்

இவர்கள் கட்டிய ஊழல் கட்டுமானங்கள் கட்டும் போது அல்லது சில ஆண்டுகளில் இடித்துக் கட்டி இடித்துத் கட்டி ஊழல் ஊழல் ஊழல்

என் உயர் நிலைப் பள்ளியும் இதே போலவே. ஒரு ஆண்டு முன் நான் பார்வையிட்ட ஒரு புதிய வகுப்பறை தார்சு கட்டிடம் உள்ளே மழை நாட்களில் ஒழுகி அங்கு இருந்த தகர டப்பா இருக்கைகள் துருப்பிடித்து காட்சியளித்த வேதனை

இன்றைய ஆட்சியாளர் வீ.பா. ஆ. கட்டி திறந்து பல்லை இளித்து காட்சியளித்தது

இன்று நெல்லையில் பள்ளிச் சுவர் இடிந்து மாணவர்கள் அந்தோ. முதல்வர் 10 லட்சம் உதவி. 

யாருக்கு வேண்டும் உங்கள் பிச்சைக் காசு? இறந்த மாணவர்கள் உயிருடன் திரும்பி வருவார்களா உங்கள் பணத்தால்? 

மனசாட்சி இல்லாத அரக்கர் கூட்டம். இந்த ஆட்சிகளுக்கு சமாதி கட்டும் நாள் நெருங்கிவிட்டது. 

பாவிகளான கயவர் கூட்டம் இப்போது தவம் கிடப்பது சமாதிகளில் தானே. இவர்களுக்கும் இனி சமாதிகள் தயாராகும். காத்திருங்கள்.
 தீர்ப்பு நாள் மிக விரைவில்

உதிர்ந்த மலர்கள் மீண்டும் பிறக்கும். கயவர் கூட்டத்தைக் கருவறுக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!