சங்கு ஊதுவது உங்களுக்காகவும் இருக்க வேண்டாமே

நேற்று மதியம் இரண்டு முப்பது மணி அளவில் என்னுடைய மகளின் கல்விப்பணி வேலை காரணமாக ஈரோடு நகரில் இருந்து  வள்ளி புரத்தான்பாளையம் வரை செல்ல வேண்டி இருந்தது 

என்னுடைய வாகனம் கரூர் பெருந்துறை புறவழிச்சாலையைக் கடக்கும் முன்பு சைரன் என்ற சங்கு ஊதும் சத்தம் கேட்டது சாலையைக் கடக்காமல் வாகனத்தை நிறுத்திவிட்டு கிழக்கு திசையை நோக்கிப் பார்த்தால் யாரோ ஒரு தமிழக அமைச்சரின் வாகனம் வருவதை அறிவிப்பதற்காக ஒரு காவல்துறை வாகனம் சங்கூதியபடி வந்தது. 

அதனைத் தொடர்ந்து ஒரு அரசியல்வாதி வாகனம் அதற்கு அடுத்து அமைச்சரின் வாகனம் இதற்குப் பின் சில எடுபிடிகள் வாகனம் கடைசியாக சேலம் மாநகர ரோந்துப் பணி வாகனம் வந்து இந்த அணிவரிசை முடிவுக்கு வந்தது.

அனைத்து வாகனங்களுமே 120 கிலோமீட்டர் வேகத்தில் தான் வந்தன. தமிழ்நாடு அரசின் 108 வாகனத்தில் நூறில் சென்றால் 108 ல் தான் போக வேண்டும் என்ற வாசக வரிகள் தான் என் மனதில் ஓடியது

காவல்துறை அன்பர்களே நண்பர்களே வேகக் கட்டுப்பாடு என்பது மக்களுக்கு மட்டும்தானா 
மக்களுக்காக அரசியல்வாதிகளா அரசியல்வாதிகளுக்காக மக்களா

இவ்வளவு வேகத்தில் அவர்கள் சென்று அடையப் போவது ஏதேனும் ஒரு ஓய்வு விடுதியில் தான் அனேகமாக அது நட்சத்திர விடுதியாக தான் இருக்கும் 
இவ்வளவு வேகத்தில் தலைதெறிக்க சொல்கிறீர்களே ஒருவேளை ஒரு கன்றுக்குட்டி அல்லது எருமை மாடு குறுக்கே வந்து தொலைந்தால் உங்கள் கதி அதோ கதிதான் 

அல்லது வரும் வேகம் அறியாது ஒரு குழந்தை அல்லது ஒரு காது கேளாத முதியவர் வந்தாலும் அவர்கள் அனைவருடனும் உங்களில் சிலரும் மோட்சம் அல்லது படுகாயங்கள்

இளமைத் துள்ளலுடன் மன்னனின் மகன் தேரோட்டி வந்தபோது  ஒரு கன்றுக்குட்டி துள்ளி ஓடி வந்து விழுந்து மரணம் தழுவ
தூக்கம் தாளாத தாய்ப்பசு அரண்மனை வாயிலில் இருந்த ஆராய்ச்சி மணியை அடித்து அறம் காக்க மன்னன் தன் மகவைத் தேரிலிட்டு அறம் நிலை நாட்டிய மண் தமிழ் பேசும் மண்

இப்ப அதே அறம் நின்று நீதி தண்டிக்குமா யாம் அறியோம். உங்களுக்கும் குடும்பம் உண்டு. இவர்கள் விரைந்து சென்று ஒரு ஆணியும் பிடுங்கப் போவதில்லை

சங்கு ஊதுவதை தவிர்ப்போம்.

புரிந்தால் சரி

காமராஜரின் வாகனம் முன்பு ஒரு காலத்தில் சங்கு ஊதியபடி________ படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!